என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Bug"
- பிரிட்டன் தலைநகர் வெம்ப்லே அரங்கத்தில் வைத்து கான்சர்ட் நடந்துள்ளது.
- 'All Too Well' பாடலை டெய்லர் ஸ்விப்ட் பாட அதை அரங்கத்தில் கூடியிருந்த ரசிகர்கள் கோரஸ் செய்து பாடியுள்ளனர்
அமரிக்கவைச் சேர்த்த பிரபல பாடகியான டெய்லர் ஸ்விப்ட் இசைத்துறையில் உலகப்புகழ் பெற்ற ஐகானாக உள்ளவர். எல்லைகள் தாண்டி உலாமெங்கிலும் இவரின் பாடல்களுக்கு பலர் பைத்தியாக உள்ளனர். தனது பாடலக்ளை தானே இயற்றி கான்சர்ட்களில் பாடிவரும் டெய்லர் ஸ்விப்ட் நின்றால் செய்தி உட்கார்ந்தால் செய்தி என ஆகிவிட்ட நிலையில் பிரிட்டன் தலைநகர் வெம்ப்லே அரங்கத்தில் வைத்து நடந்த இவரின் கான்சர்ட்டில் ஒரு சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது.
அந்த கான்சர்ட்டில் தனது சிறந்த பாடல்களில் ஒன்றான 'All Too Well' பாடலை டெய்லர் ஸ்விப்ட் பாட அதை அரங்கத்தில் கூடியிருந்த ரசிகர்கள் கோரஸ் செய்து பாடியுள்ளனர். இந்த பாடல் சுமார் 10 நிமிட நீளம் உடையது ஆகும். 'All Too Well' பாடலை விடமால் தம் கட்டி சிவப்பு நிற ஆடையில் ஜொலித்த டெய்லர் ஸ்விப்ட் பாடிக்கொண்டிருக்கும்போது திடீரென அவரது வாய்க்குள் எங்கிருந்தோ வந்த ஒரு பூச்சி நுழைந்ததால் பாடலைத் தொடர அவர் சிரமப்பட்டார்.
இடையில் பாடுவதை நிறுத்திவிட்டு இருமத் தொடங்கிய டெய்லர் ஸ்விப்ட், நான் ஒரு பூச்சியை விழுங்கிவிட்டேன், நீங்கள் தொடர்ந்து பாடுங்கள் என்று ரகிகர்களிடம் கூறினார். பின்னர் நிலைமையை சமாளித்துக்கொண்டு மீண்டும் அவர் பாடத்தொடங்கினார்.இந்த சமபவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த கான்சர்ட்டில் ஹாலிவுட் நடிகர்கள் டாம் குரூஸ், மிலா குனிஸ், ஆஸ்டோன் குட்சர், டெய்லர் ஷிப்டட்டின் காதலன் கெல்ஸ் உட்பட பலர் கலந்துகொண்டது குறிபிடித்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- திட்டக்குடி அருகே பூச்சி கடித்து வாலிபர் பலியானர்.
- வீட்டுக்கு வந்த அவர் மயங்கி விழுந்தார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் தொழுதூர் அடுத்துள்ள மேல் ஐவனூரை சேர்ந்த அருள் வேந்தன் மகன் அருள்தாஸ் (26). இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர். மேலும் மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இவர் இயற்கை உபாதை கழிக்க சென்றபோது விஷ பூச்சி கடித்து விட்டது. வீட்டுக்கு வந்த அவர் மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலே அருள்தாஸ் இறந்துவிட்டார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்