என் மலர்
நீங்கள் தேடியது "built across"
- பவானி பழைய பஸ் நிலையம் அருகே பவானி ஆற்றின் குறுக்கே பாலம் ஒன்று கட்டப்பட்டு போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
- இந்த பாலத்தில் பவானியில் இருந்து நுழையும் போது ரோட்டின் நடுவே சிறிய பள்ளம் ஒன்று காணப்படுகிறது.
பவானி:
பவானியில் இருந்து ஈரோடு செல்லும் வகையில் பவானி பழைய பஸ் நிலையம் அருகே பவானி ஆற்றின் குறுக்கே பாலம் ஒன்று கட்டப்பட்டு போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
இந்த பாலத்தின் வழியாக தினசரி மோட்டார் சைக்கிள், கார், வேன், பஸ், லாரி உட்பட கனரக வாகனங்கள் காலை முதல் இரவு வரை போக்குவரத்து நடைபெற்ற வண்ணம் இருக்கும்.
இந்த பாலத்தில் பவானியில் இருந்து நுழையும் போது ரோட்டின் நடுவே சிறிய பள்ளம் ஒன்று காணப்படுகிறது. இதனால் பகல் நேரத்தில் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சுதாரித்து கொள்ளும் நிலையில், இரவு நேரத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக அப்பகுதியில் உள்ள பாலத்தில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சரி செய்து கொடுக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.