என் மலர்
நீங்கள் தேடியது "Bukkuzhi"
- மொகரம் பண்டிகையை முன்னிட்டு அனைத்து மதத்தினர் பங்கேற்ற பூக்குழி திருவிழா நடந்தது.
- ஆண்கள் தீமிதித்தும், பெண்கள் தலையில் கங்குகளை போட்டும் நேர்்த்திக்கடன் செலுத்தினர்.
சாயல்குடி
சாயல்குடி அருகே பெரியகுளம் கிராமத்தில் மொகரம் பண்டிகையை முன்னிட்டு மாமுனாச்சி அம்மன் சமூக நல்லிணக்க பூக்குழி திருவிழா நடந்தது.
மொகரம் முதல் நாள் கொடியேற்றி 10 நாட்கள் விரதம் இருந்து 11-ம் நாள் மொகரம் அன்று பக்தர்கள் பூக்குழி இறங்கி மற்றும் பெண்கள் தலையில் தீ கங்குகளை போட்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருவது பெரியகுளம் கிராமத்தில் நடந்து வருகிறது.
இந்நிகழ்ச்சியில் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டு பூக்குழி இறங்கி கொண்டாடு கின்றனர்.
இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், இந்த பகுதியில் 100 ஆண்டுகளுக்கு மேலாக சமூக நல்லிணக்க பூக்குழி திருவிழா நடந்து வருகிறது. இன்று அதிகாலை யில் நடந்த சமூக நல்லிணக்க பெருவிழாவில் 500-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கலந்து கொண்ட னர். ஆண்கள் தீமிதித்தும், பெண்கள் தலையில் கங்குகளை போட்டும் நேர்்த்திக்கடன் செலுத்தினர்.
கடலாடி, சாயல்குடி, மாரியூர், வாலிநோக்கம், முந்தல், ஒப்பிலான், உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்தவர்கள் இந்த திருவிழாவில் கலந்து கொண்டனர்.