என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bunsei irrigation"

    • புன்செய் பாசனத்திற்காக 2-வது சுற்று தண்ணீர் நாளை திறக்கப்படுகிறது.
    • இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை யின் நீர்மட்டம் 98.30 அடி யாக உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    தற்போது அணையில் போதிய நீர் இருப்பு உள்ளதால் கீழ் பவானி வாய்க்கால் பாசனப்பகுதி விவசாயிகளின் கோரி க்கையை ஏற்று கீழ்பவானி வாய்க்காலில் 2-ம் போக புன்செய் பாசனத்திற்காக கடந்த ஜனவரி மாதம் 21-ந் தேதி முதல் தண்ணீர் திறக்கப்பட்டது.

    ஏப்ரல் 30-ந் தேதி வரை 5 சுற்றுக்களாக தண்ணீர் திறக்கப்படும் என அறிவித்திருந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 21-ந் தேதி திறக்கப்பட்ட தண்ணீர் கடந்த 6-ந் தேதி நிறுத்தப்ப ட்டது.

    இந்நிலையில 2-வது சுற்று தண்ணீர் நாளை (செவ்வாய்க்கிழமை) திறக்கப்படுகிறது. இந்த தண்ணீர் வரும் 28-ந் தேதி வரை திறக்கப்படும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை யின் நீர்மட்டம் 98.30 அடி யாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1152 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து தடப்பள்ளி அரக்கன் கோட்டை பாசனத்திற்காக ஆயிரம் கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கன அடி என மொத்தம் 1,150 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    ×