என் மலர்
முகப்பு » bus mini lorry crash
நீங்கள் தேடியது "bus mini lorry crash"
மோகனூர் அருகே பஸ்-மினிலாரி மோதியதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். 2 ஆயிரம் முட்டைகள் சேதம் அடைந்துள்ள்து.
மோகனூர்:
திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூரில் இருந்து நாமக்கல் நோக்கி நேற்று ஒரு அரசு டவுன் பஸ் வந்து கொண்டிருந்தது. இந்த பஸ்சை டிரைவர் பார்த்திபன் ஒட்டி வந்தார். கண்டக்டராக பாலமுருகன் இருந்தார். பஸ்சில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர்.
இந்த பஸ் மோகனூர் அருகே வளையப்பட்டி துணை மின் நிலையம் பகுதியில் வந்தபோது பஸ்சும், நாமக்கல்லில் இருந்து அந்த வழியாக முட்டை லோடு ஏற்றிக்கொண்டு வந்த ஒரு மினி லாரியும் மோதிக்கொண்டன. மோதிய வேகத்தில் மினி லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் மினி லாரியில் இருந்த சுமார் 2 ஆயிரம் முட்டைகள் உடைந்து சேதமானது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த ஒரு பெண் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து மோகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தில் காயம் அடைந்தவர்கள் யார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
×
X