என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "cambling"
- போலீசார் வெள்ளகோவில் கிராம பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
- பிரபாகரன் (வயது33) உள்ளிட்ட 30 பேரை கைது செய்து அவர்களிடமிருந்த ரூ. 12,200 பணம் மற்றும் 10 சேவல்களை பறிமுதல் செய்தனர்.
வெள்ளகோவில்:
வெள்ளகோவிலில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி மற்றும் போலீசார் வெள்ளகோவில் கிராம பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது இலுப்பைகிணறு என்ற இடத்தில் கும்பலாக ஆட்கள் நின்று கூச்சலிட்டு கொண்டிருந்தனர்.
அங்கு சென்று பார்த்தபோது சண்டை சேவல்களை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து சேவல் சண்டை சூதாட்டத்துக்கு ஏற்பாடு செய்த வெள்ளகோவில் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் (வயது33) உள்ளிட்ட 30 பேரை கைது செய்து அவர்களிடமிருந்த ரூ. 12,200 பணம் மற்றும் 10 சேவல்களை பறிமுதல் செய்தனர்.
சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- 2 குழுவினர் கிரிக்கெட் போட்டி வெற்றி தோல்வி குறித்து பணம் கட்டி சூதாட்டத்தில் ஈடுபட்டனர்.
- அவர்களிடம் இருந்து ரூ.60 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
திருப்பதி:
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த கிரிக்கெட் போட்டியை வைத்து பல்வேறு இடங்களில் சூதாட்டம் நடைபெற்று வருகின்றன.
சென்னை-பெங்களூர் கிரிக்கெட் போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியை வைத்து தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டம், மைலார் தேவப்பள்ளி பகுதியில் கிரிக்கெட் சூதாட்டம் நடந்தது.
2 குழுவினர் கிரிக்கெட் போட்டி வெற்றி தோல்வி குறித்து பணம் கட்டி சூதாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவலறிந்த போலீசார் அங்கு சென்றனர். போலீசார் வருவதை கண்ட சிலர் அங்கிருந்து தப்பி ஓடினர்.
அதில் 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.60 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடியவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.