search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "came"

    • சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே உள்ள சீரகாபாடி பகுதியில் நேற்று இரவு 2 பேர் மோட்டார்சைக்கிளில் சுற்றி திரிந்தனர்.
    • அப்பகுதி மக்கள் அவர்களை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் ஆடு திருட வந்ததாக கூறினர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே உள்ள சீரகாபாடி பகுதியில் நேற்று இரவு 2 பேர் மோட்டார்சைக்கிளில் சுற்றி திரிந்தனர். இதை பார்த்த அப்பகுதி மக்கள் அவர்களை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் ஆடு திருட வந்ததாக கூறினர். இதையடுத்து அவர்களுக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த ஆட்டையாம்பட்டி போலீசார் 2 பேரையும் மீட்டு விசாரணை நடத்தினர். அதில் வலசையூர் பகுதியை சேர்ந்த ஹரிஷ் (24), அம்மாப்பேட்டையை சேர்ந்த காஜாமைதீன் (35) ஆகியோர் என்பது தெரியவந்தது.

    பொதுமக்கள் தாக்கியதில் காயமடைந்த 2 பேரையும் சிகிச்சைக்காக போலீசார் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    ஆடு திருட வந்த வாலிபர்களுக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கொண்ட லாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் புஷ்பராணி நேற்றிரவு கொண்ட லாம்பட்டி சூளைமேடு பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.
    • சந்தேகம் அடைந்த போலீசார், காருக்குள் சோதனை செய்தனர்.

    சேலம்:

    சேலம் கொண்ட லாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் புஷ்பராணி நேற்றிரவு கொண்ட லாம்பட்டி சூளைமேடு பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது நீண்ட நேரமாக ஒரு கார் அங்கு நின்று கொண்டு இருந்ததை கவனித்த அவர் அருகில் சென்று விசாரித்தார்.

    அப்போது காருக்குள் 6 பேர் கும்பல் இருந்தது. அவர்களிடம் விசாரித்த போது கல்லூரிக்கு காவலாளி பணிக்கு செல்வதாக கூறினார்கள்.

    சந்தேகம் அடைந்த போலீசார், காருக்குள் சோதனை செய்தனர். அப்போது அதில் ஏராளமான கொடுவாள், கத்தி உட்பட ஆயுதங்கள் இருந்தது. அவர்கள் யாரையாவது கொலை செய்ய வந்திருக்கலாம் என சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை பிடிக்க முயன்றனர்.

    உடனே காரில் இருந்த 5 பேர் கண் இமைக்கும் நேரத்தில் தப்பி ஓடினர். போலீசார் சுற்றி வளைத்ததில் ஒருவர் மட்டும் சிக்கினார். பிடிபட்ட நபர் நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.

    தொடர்ந்து அவரிடம் கொண்டலாம்பட்டி போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பி ஓடிய மற்றவர்களை தேடும் பணியில் ேபாலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    ஆயுதங்களுடன் வந்த கும்பல் யார்? எதற்காக வந்தார்கள்? யாரையும் கொலை செய்யும் நோக்கில் வந்தனரா? என பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • சேலம் மாவட்டம் கஞ்சநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் லட்சுமி. இவர் தனது 3 குழந்தைகளுடன் இன்று சேலம் கலெக்டர் அலுவலகம் வந்தார்.
    • எனவே என் குடும்பத்திற்கு பாதுகாப்பு தந்து நிலத்தை அபகரிக்க முயன்ற தி.மு.க. பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் கஞ்சநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் லட்சுமி. இவர் தனது 3 குழந்தைகளுடன் இன்று சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே வந்தார். அப்போது பையில் மன்னனை வைத்திருந்தார். அதை அவர் எடுக்க முயன்ற போது போலீசார் தடுத்து நிறுத்தி அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் அவர் கூறுகையில் எனது மாமனார் அப்பகுதி பள்ளிக்கு இலவசமாக கொடுத்த 13 செண்ட் நிலத்தை தி.மு.க. பிரமுகர் அபகரிக்கும் நோக்கில் எங்களை மிரட்டி வருகிறார். மேலும் அடியாட்களுடன் வந்து வீட்டிலிருந்த வாழை மரங்களை வெட்டி சாய்த்து விட்டு உடனடியாக வீட்டை காலி செய்யவில்லை என்றால் கொலை செய்து விடுவதாக அச்சுறுத்துகிறார். எனவே என் குடும்பத்திற்கு பாதுகாப்பு தந்து நிலத்தை அபகரிக்க முயன்ற தி.மு.க. பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்தார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    ×