என் மலர்
நீங்கள் தேடியது "can apply to run a"
- மொடச்சூர் வாரச்சந்தையில் வீடற்ற ஏழைகள் தங்கும் விடுதி செயல்பட்டு வரு கிறது
- விடுதியை பராமரித்து நடத்த தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பி க்கலாம்
கோபி,
கோபிசெட்டி பாளையம் மொடச்சூர் வாரச்சந்தையில் வீடற்ற ஏழைகள் தங்கும் விடுதி செயல்பட்டு வரு கிறது. இந்த விடுதியை பராமரித்து நடத்த தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பி க்கலாம்.
கோபிசெட்டிபாளையம் நகராட்சி தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் மொடச்சூர் வார சந்தை பகுதியில் உள்ள வீடற்ற ஏழைகள் தங்கும் விடுதியை வழிகாட்டு தலுக்கிணங்க பணப் பயன் ஏதுமின்றி நடத்துவதற்கு அரசு சார்பி ல்லா விருப்பமுள்ள தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பங்கள் அனுப்ப லாம்.
ஆர்வமுள்ள தொண்டு நிறுவனங்கள் கோபிசெட்டி பாளையம் நகராட்சி ஆணையர் என்ற முகவரிக்கு வரும் 15-ந் தேதிக்குள் எழுத்து பூர்வமாக விண்ணப் பிக்க வேண்டும்.
தொண்டு நிறுவனங்கள் இது வரை ஈடுபட்டுள்ள முன் அனுபவ சேவை விபரங்களை உரிய ஆதாரங்களுடன் தெரிவிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை நக ராட்சி மூலம் ஆய்வு செய்து தகுதியான தொண்டு நிறு வனங்களை தேர்வு செய்ய ப்படும்.
மேலும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தி தேர்வு செய்யப்பட்ட தொண்டு நிறுவனத்திடம் விடுதி ஒப்டைக்கப்படும் என நகராட்சி ஆணையர் பிரேம் ஆனந்த் தெரிவித்துள்ளார்.