என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "can apply"

    • வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
    • இந்த தகவலை சிவகங்கை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    சிவகங்கை

    தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள வேலை வாய்ப்பற்ற இளைஞர்க ளுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்கா மல் காத்திருக்கும் இளை ஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

    முறையாக பள்ளியில் பயின்று 9-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று 10-ம் வகுப்பில் தோல்வியுற்றவர்களுக்கு மாதம் ரூ.200-ம், 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300-ம், பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.400-ம், பட்டதா ரிகளுக்கு (பி.இ. போன்ற தொழில்சார் பட்டப்படிப்பு தவிர) மாதம் ரூ.600 வீதம் 3 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப் பட்டு வருகிறது.

    இத்தொகை நேரடியாக மனுதார்களது வங்கி கணக்கில் காலாண்டுக்கொரு முறை வரவு வைக்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் இளைஞர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தங்களின் கல்வித்தகுதிகளை பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவு செய்திருக்க வேண்டும். தொடர்ந்து பதி வினை புதுப்பித்து இருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும், ஏனை யோர் 40 வயதுக்கு மிகா மலும் இருத்தல் வேண்டும். மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரம் மிகாமல் இருத்தல் வேண்டும். இந்த உதவித்தொகை பெற விரும்புவோர்கள் சிவகங்கை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு அனைத்து கல்விச் சான்று கள், வேலைவாய்ப்பு அடை யாள அட்டை ஆகிய வற்றுடன் நேரில் வந்து இலவசமாக விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பத்தை அலுவலக வேலை நாட்களில் நேரில் சமர்ப்பித்து பயனடைய லாம்.

    இந்த தகவலை சிவகங்கை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • 10-ம் வகுப்பு மற்றும் 12- ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது
    • சான்றிதழ் பெற தகுதி வாய்ந்த நபர்களி டமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

      திருப்பூர் : 

    தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி முடித்து செல்லும் திறன் பெற்ற பயிற்சியாளர்கள் மேற்படிப்பினை தொடர 10-ம் வகுப்பு மற்றும் 12- ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. இணையான சான்றிதழ்கள் பெற நிலையான வழிகாட்டுதல்கள் (SOP) www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    தற்போது அகில இந்திய தொழிற்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், தமிழக பள்ளிகல்வி துறையின் கீழ் நடத்தப்பட்ட மொழித்தேர்வில் தனித் தேர்வர்களாக கலந்து கொண்டு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற தகுதி வாய்ந்த நபர்களி டமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இணைய தளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உரியகல்வி சான்றிதழ்களை இணைத்து 3.10.2023 தேதிக்குள் திருப்பூர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாக விண்ணப்பிக்கலாம் என அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் பிரபு தெரிவித்துள்ளார்.

    • தொழிற்பயிற்சி சான்று பெற்றவர்கள் 10, 12-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ்களை பெறலாம்.
    • மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை

    தொழிற்பயிற்சி நிலையங்களில் கடந்த மார்ச் 30-ந் தேதி பயிற்சி முடித்துச் செல்லும் திறன் பெற்ற பயிற்சியாளர்கள் மேற்படிப்பினை தொடர 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் வழங்க ஆணையிடப் பட்டுள்ளது. இணையான சான்றிதழ்கள் பெற நிலையான வழிகாட்டுதல்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    தற்போது, அகில இந்திய தொழிற்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கீழ் நடத்தப்பட்ட மொழித்தேர்வில் தனித் தேர்வர்களாக கலந்து கொண்டு தேர்ச்சி பெற்ற சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த மாணவர்களில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

    இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உரிய கல்வி சான்றிதழ்களை இணைத்து சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தொழிற்பயிற்சி நிலையமான முத்துப் பட்டியிலுள்ள சிவகங்கை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.

    மேலும், விண்ணப்பத்தி னை ஆய்வு செய்து தகுதியான விண்ணப்ப தாரர்களுக்கு அரசு தேர்வுகள் இயக்ககத்தில் இருந்து தகுதிகேற்ப 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற்று, இத்துறையால் வழங்கப்படும். விண்ணப்பம் மற்றும் உரிய கல்வி சான்றிதழ்க ளுடன் சிவகங்கை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் வருகிற 3-ந் தேதிக்குள் சமர்பிக்கவேண்டும். மேலும், விவரங்களுக்கு 9944887754 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விபரங்கள் பெறலாம். மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

    • தொழிலாளர் நலத்துறை சார்பில் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
    • மேற்கண்ட தகவலை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) கார்த்தி கேயன் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    1972-ம் ஆண்டு தமிழ் நாடு தொழிலாளர் நல நிதி சட்டத்தின்படி தொழிற் சாலைகள், கடைகள், மோட்டார் போக்கு வரத்து நிறுவனங்கள், உணவு நிறு வனங்கள் மற்றும் தோட்ட நிறுவ னங்கள் போன்ற அமைப்பு சார்ந்த நிறுவனங் களில் பணிபுரியும் தொழி லாளர் களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தொழிலாளர் மற்றும் நிறு வனத்தின் பங்காக ஒவ் வொரு தொழி லாளிக்கும் ரூ.60 என கணக்கிட்டு நிறு வனத்தில் பணிபுரியும் தொழி லாளர் களின் எண்ணிக்கைக்கேற்ப தொழிலாளர் நல நிதி தொகையினை வாரிய த்திற்கு செலுத்த வேண்டும்.

    அதன்படி நடப்பு 2023ம் ஆண்டிற்கான தொழிலாளர் நல நிதியினை 31.01.2024-க்குள் செலுத்த வேண்டும்.

    அவ்வாறு தொழிலாளர் நல நிதி செலுத்தும் தொழி லாளர்கள் மற்றும் அவரைச் சார்ந்தவர்களுக்கு வாரி யத்தின் மூலம் பல்வேறு நலத்திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு வருகிறது.

    அதில் ப்ரீ-கே.ஜி முதல் பட்ட மேற்படிப்பு வரை பயிலும் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு ரூ.1000 முதல் ரூ.12000 வரை கல்வி உதவித் தொகை, பாடநூல் வாங்க உதவித்தொகை, 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாண வர்களுக்கு கல்வி ஊக்கத் தொகை ஆகிய திட்டங் களுக்கு தொழி லாளர் களிடமிருந்து விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகிறது. இவ்வுதவித் தொகையினை பெற தொழிலாளரின் மாத ஊதியம் (Pay+ DA) ரூ.25,000-க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பங்கள் வாரியத்திற்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள் 31.12.2023 ஆகும்.

    விண்ணப்பங்களை தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தில் நேரிலோ அல்லது www.lwb.tn.gov.in என்ற இணைய தளத்திலோ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்யப்பட்ட விண்ணப் பங்கள் "செயலாளர், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், சென்னை-6 என்ற முகவரிக்கு 31.12.2023க்குள் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

    மேற்கண்ட தகவலை தொழிலாளர் உதவி ஆணை யர் (அமலாக்கம்) கார்த்தி கேயன் தெரிவித்து உள்ளார்.

    • மீன்குஞ்சு வளர்ப்பு குளங்கள் அமைக்க விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்ப படிவம் பெற்று வருகிற 2-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டம் 2021-22-ன் கீழ் சிவகங்கை மாவட்டத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலமாக திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.

    புதிய மீன்குஞ்சு வளர்ப்பு குளங்கள் அமைக்கும் திட்டத்தில் பொதுப் பிரிவில் 1 ஹெக்டேர் (40 சதவீத மானியம்) மற்றும் பெண்களுக்கு 1 ஹெக்டேர் (60சதவீத மானியம்) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    புதிய மீன்வளர்ப்பு குளங்கள் அமைக்கும் திட்டத்தில் பெண்களுக்கு 4 ஹெக்டேர் (60 சதவீத மானியம்), ஆதிதிராவிடர்-பழங்குடியினருக்கு 1 ஹெக்டேர் (60சதவீத மானியம்) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    நன்னீர் மீன்வளர்ப்பு குளங்களுக்கு உள்ளீட்டு மானியம் வழங்குதல் திட்டத்தில் பெண்களுக்கு 4 ஹெக்டேர் (60 சதவீத மானியம்), ஆதிதிராவிடர்-பழங்குடியினருக்கு 1 ஹெக்டேர் (60சதவீத மானியம்) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிறிய அளவிலான பயோபிளாக் குளங்க ளில் மீன்வளர்ப்பு செய்த லுக்கான மானியம் வழங்குதல் திட்டத்தில் பொதுப் பிரிவில் 1 அலகு (40சதவீத மானியம்), பெண்களுக்கு 2 அலகுகள் (60சதவீத மானியம்), ஆதிதிராவிடர்-பழங்குடியினருக்கு 2 அலகுகள் (60சதவீத மானியம்) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    மேற்கண்ட திட்டங்களில் பயன்பெற விரும்புவோர் சிவகங்கை மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்ப படிவம் பெற்று வருகிற 2-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

    மேலும் விபரங்களுக்கு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, உதவி இயக்குநர் அலுவலகம், 5/3, யூனியன் வங்கி மாடி, பெருமாள் கோவில் தெரு, சிவகங்கை - 630561 என்ற முகவரிக்கும், 04575-240848 என்ற தொலைபேசி எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

    • மாதம் ரூ. 1500 உதவித்தொகை பெற தமிழ் திறனறிவு தேர்வுக்கு பிளஸ்-1 மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
    • மேற்கண்ட தகவலை மாநில அரசு தேர்வுகள் இயக்குனரகம் தெரிவித்து உள்ளது.

    மதுரை

    தமிழ் மொழி இலக்கிய திறனை மாணவர்கள் மேம்படுத்திக் கொள்ளும் வகையில், நடப்பு கல்வியாண்டு முதல் தமிழ் மொழி இலக்கிய திறனறிவு தேர்வு நடத்தப்பட உள்ளது. இது மாவட்ட தலைநகரங்களிலும் அக்டோபர் 1-ம்தேதி நடத்தப்படும்.

    அப்போது 10-ம் வகுப்பு தமிழ் பாடத் திட்டங்களின் அடிப்படையில் கொள்குறி வகையில் தேர்வு நடத்தப்படும். இதில் 1500 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை வழியாக மாதம் ரூ.1500/- வீதம் 2 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். எனவே அங்கீகாரம் பெற்ற அனைத்து பள்ளிகளில் பயிலும் (CBSE / ICSE /உட்பட) பிளஸ்-1 மாணவர்கள், தேர்விற்கான விண்ணப்பங்களை www.dge.tn.gov.in இணையதளம் மூலம் வருகிற 22-ம் தேதி முதல் அடுத்த மாதம் 9-ம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணத் தொகை ரூ.50 சேர்த்து சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியரிடம் அடுத்த மாதம் 9-ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும்.

    மேற்கண்ட தகவலை மாநில அரசு தேர்வுகள் இயக்குனரகம் தெரிவித்து உள்ளது.

    ×