என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Cancer Hospital"
- கீவ்வில் உள்ள மருத்துவமனை மீது ரஷிய ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
- இதில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் சிகிச்சை பாதிக்கப்பட்டுள்ளது.
கீவ்:
உக்ரைன் மற்றும் ரஷியா இடையிலான போர் 2 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்தப் போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
ரஷியாவுக்கு எதிராகப் போரிடும் உக்ரைனுக்கு தேவையான ஆயுத உதவிகளை அமெரிக்கா உள்பட பல்வேறு மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன.
போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்துவரும் நிலையில், அமைதி பேச்சுவார்த்தைக்கு இரு நாடுகளும் உடன்படாததால் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.
உக்ரைனின் பல்வேறு பகுதிகளைக் குறிவைத்து ரஷியா சமீபத்தில் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. உக்ரைன் தலைநகர் கீவ், டினிப்ரோ, கிர்வி ரிஹ், சுலோவன்ஸ்க், கர்மட்ரோஸ் உள்பட பல்வேறு பகுதிகளில் ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
இதற்கிடையே, தலைநகர் கீவ்வில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷியா தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 36 பேர் உயிரிழந்தனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர்.
இந்நிலையில், ரஷிய தாக்குதலைத் தொடர்ந்து கீவ் நகரில் உள்ள புற்றுநோய் மருத்துவமனையில் இருந்து புற்றுநோயுடன் போராடும் குழந்தைகளை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
உக்ரைன் தலைநகர் கீவில் ரஷியா நடத்திய குண்டுவீச்சு குழந்தைகள் மருத்துவமனையை கடுமையாக சேதப்படுத்தியது, இந்தக் கொடூர தாக்குதல் பல குடும்பங்களை பயமுறுத்தியது. ஏற்கனவே ஆபத்தான நோய்களுடன் போராடும் அவர்களின் குழந்தைகளையும் கடுமையாக பாதித்தது.
இதனால் பல குடும்பங்கள் தங்கள் குழந்தைகளின் சிகிச்சையை எங்கு தொடர்வது என்ற குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இதுதொடர்பாக, 2 வயது மகனின் பெற்றோர் கூறுகையில், கடுமையான லிம்போபிளாஸ்டிக் லுகேமியா நோய்க்காக ஜூன் தொடக்கத்தில் இங்கு வந்தோம். ஐரோப்பாவில் உள்ள சிறந்த மருத்துவமனைகளில் இதுவும் ஒன்று என்பதால் இங்கு சிகிச்சை பெற முடிவு செய்தோம். ஆனால் தற்போது நடைபெறும் தாக்குதலால் எங்கு செல்வது என தெரியவில்லை என குறிப்பிட்டார்.
- நமக்கு நாமே திட்டம் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் அமைக்கப்படும் புற்றுநோய் சிறப்பு சிகிச்சை மருத்துவமனை.
- ஏற்றுமதி காப்பீட்டுக் கழகம் சார்பில் நன்கொடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
பல்லடம் :
திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தமிழ்நாடு அரசின் நமக்கு நாமே திட்டம் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் அமைக்க ப்படும் புற்றுநோய் சிறப்பு சிகிச்சை மருத்துவமனைக்கு ஏற்றுமதி காப்பீட்டுக் கழகம் சார்பில், ரூ.2 கோடி நன்கொடை வழங்கும் நிகழ்ச்சி பல்லடம் நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், ஆணையாளர் பவன்குமார், ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் சக்திவேல், ஆகியோர் முன்னிலை வகித்தனர். பல்லடம் நகராட்சி தலைவர் கவிதாமணி அனைவரையும் வரவேற்றார். கூட்டத்திற்கு தலைமை வகித்த செய்தி துறை அமைச்சர் மு. பெ.சாமிநாதனிடம், ஏற்றுமதி காப்பீட்டுக் கழகத்தின் தலைவர் செந்தில்நாதன், உள்ளிட்ட நிர்வாகிகள் ரூ 2 கோடிக்கான காசோலையை வழங்கினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகராட்சி 4ம் மண்டல தலைவர் இல. பத்மநாபன், பல்லடம் நகராட்சி ஆணையாளர் விநாயகம், செஞ்சிலுவை சங்க நிர்வாகி தாமோதரன்,ரோட்டரி சங்க நிர்வாகிகள் ஏவிபி. கார்த்திகேயன், பல்லடம் ஆறுமுகம், மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- தமிழகத்தில் மிகவும் அதிநவீன கருவிகளுடன் இந்த புற்றுநோய் மருத்துவமனை அமைய உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
- புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோயறியதல், சிகிச்சைக்கு பயனுள்ளதாக இந்த மருத்துவமனை இருக்கும்.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அரசின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பொதுமக்கள் பங்களிப்புடன் ரூ.60 கோடி மதிப்பில் புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனை அமைப்பது தொடர்பாக ரோட்டரி சங்கம், அரிமா சங்கம், தன்னார்வலர்கள், தொழில் அமைப்பினருடன் ஆலோசனைக்கூட்டம் திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் தலைமை தாங்கினார்கள். கலெக்டர் வினீத், மேயர் தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புற்றுநோய் மருத்துவமனையில் பெட் ஸ்கேன் கருவி ரூ.5 கோடி மதிப்பிலும், 38 படுக்கை வசதியுடன் கூடிய இரு அறைகள், 2 அறுவை சிகிச்சை அரங்கம், புற்றுநோயியல் அரங்கம், கேத் ஆய்வகம், ஆய்வக கருவிகள், 9 மினி ஆய்வக அறைகள், 16 மருத்துவ அறைகள், ஒரு லினியர் ஆக்ஸிலரேட்டர் ஆகியவை அமைக்கப்பட உள்ளது. தமிழகத்தில் மிகவும் அதிநவீன கருவிகளுடன் இந்த புற்றுநோய் மருத்துவமனை அமைய உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
கூட்டத்தில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:-
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோயறியதல், சிகிச்சைக்கு பயனுள்ளதாக இந்த மருத்துவமனை இருக்கும். நமக்கு நாமே திட்டத்தின் கீழ் திருப்பூர் மாநகராட்சி இணைந்து 67 சதவீத பங்களிப்பு நிதியாகவும், தன்னார்வலர்கள், அமைப்பினர், பொதுமக்கள் பங்களிப்புடன் 33 சதவீதமும் திரட்டி ரூ.60 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது.
முதல்கட்டமாக மருத்துவ உபகரணங்களை வாங்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்க வேண்டும். நமது தொகையை செலுத்தி அரசின் பங்குத்தொகையையும் செலுத்தி, உட்கட்டமைப்பு மற்றும் மருத்துவ பரிசோதனை கருவிகளுக்கு இந்த மாத இறுதிக்குள் மொத்த தொகையையும் செலுத்தி மருத்துவ உபகரணங்களை வாங்க வேண்டும். பொதுமக்களின் பங்களிப்பாக இதுவரை ரூ.4½ கோடி நிதி வந்துள்ளது. மீதமுள்ள நிதியை திரட்ட அனைத்து தன்னார்வ அமைப்புகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். பொதுமக்கள் தங்களால் முடிந்த அளவு நிதியை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேயர் தினேஷ்குமார் பேசும்போது, புற்றுநோய் மருத்துவமனை கட்டிடம் அமைப்பதற்கான திட்ட மதிப்பீடுகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் வழங்க வேண்டும். அவற்றை பெற்று முதல்கட்டமாக கட்டிட பணிகளை தொடங்கி விட்டால் தன்னார்வலர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டு தொடர்ந்து நிதி அளிப்பார்கள். அதனால் கட்டிட பணியை தொடங்குவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்' என்றார்.கூட்டத்தில் துணை மேயர் பாலசுப்பிரமணியம் ரூ.10 லட்சம், மேற்கு ரோட்டரி சங்கம் சார்பில் ரூ.5 லட்சம் காசோலைகளை வழங்கினார்கள். அனைத்து ரோட்டரி சங்கத்தின் சார்பில் ரூ.10 கோடி வழங்குவதற்கு ஒப்புதல் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கான குறைகேட்பு முகாமில் கோரிக்கை மனுக்களை பெற்று அதில் மாற்றுத்திறனாளிளுக்கான அடையாள அட்டைகளை அமைச்சர்கள் வழங்கினார்கள்.
கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடி, திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டல தலைவர் இல.பத்மநாபன், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க பொதுச்செயலாளர் இளங்குமரன், திருப்பூர் பிரிண்டிங் அசோசியேசன் தலைவர் ஸ்ரீகாந்த், சைமா சங்க பொதுச்செயலாளர் கீதாஞ்சலி கோவிந்தப்பன், டைஸ் அண்ட் கெமிக்கல்ஸ் சங்க தலைவர் நாகேஷ், பில்டர்ஸ் அசோசியேசன் தலைவர் ஸ்டாலின் பாரதி, நிட்மா சங்க இணை செயலாளர் ராமகிருஷ்ணன், விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள், அரிமா சங்கத்தினர், ரோட்டரி சங்கத்தினர் பங்கேற்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்