search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "candidates list"

    • முதற்கட்டமாக 39 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியீடு.
    • திருவனந்தபுரம் தொகுதியில் சசிதரூர் போட்டியிடுகிறார்.

    பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகிறது.

    அதன்படி, பாஜக தனது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.

    இந்நிலையில், காங்கிரஸ் தனது முதற்கட்டமாக 39 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

    இதில், ராகுல் காந்தி மீண்டும் வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார். இதுபோல், திருவனந்தபுரம் தொகுதியில் சசிதரூர் போட்டியிடுகிறார்.

    ஆலப்புழாவில் கே.சி.வேணுகோபால், சத்தீஸ்கர் (ராஜ்னம்த்லோன்) பூபேஸ் பேகல், மாண்டியாவில் வெங்கட்ராம கவுடா, டி.கே.சுரேஷ் குமார் பெங்களூரு ஊரகத்திலும் போட்டியிடுகின்றனர்.

    • நெல்லை தொகுதியில் என்னை வேட்பாளராக நிறுத்தினால் நிற்பேன் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
    • பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் தமிழ்நாட்டில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்படவில்லை.

    "தமிழகத்தில் 25 தொகுதிகளில் பாஜக நேரடியாக போட்டியிடும் நெல்லை தொகுதியில் என்னை வேட்பாளராக நிறுத்தினால் நிற்பேன்" என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

    பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

    அதன்படி, 195 இடங்களுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. இதில், 28 பேர் பெண்கள், பட்டியலினத்தவர்- 27, ஓபிசி- 57 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

    அதன்படி, முதற்கட்ட பட்டியலில், பிரதமர் மோடி வாரணாசி தொகுதியிலும், உள்துறை அமைச்சர் அமித்ஷா காந்தி நகர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்

    பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் தமிழ்நாட்டில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்படவில்லை. கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு இன்னும் முழுமை அடையாததால் அடுத்தகட்ட பட்டியலில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியனுடன், தமிழக பா.ஜ.க தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். சென்னை சூளைமேட்டில் உள்ள ஜான் பாண்டியன் இல்லத்தில் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    • பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க. வெளியிட்டது.
    • குஜராத் காந்தி நகரில் உள்துறை மந்திரி அமித்ஷா போட்டியிடுகிறார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க. இன்று வெளியிட்டது. தலைநகர் டெல்லியில் பா.ஜ.க. வெளியிட்ட அறிவிப்பில் 195 வேட்பாளர்களை அறிவித்தது. வாரணாசியில் பிரதமர் மோடி மீண்டும் போட்டியிடுகிறார்.

    உ.பி.யில் 51, ம.பி.யில் 24, மேற்கு வங்காளத்தில் 20, குஜராத்தில் 15, கேரளாவில் 12, சத்தீஸ்கரில் 11, டெல்லியில் 5 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். இதில் 34 மத்திய மந்திரிகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    குஜராத் காந்தி நகரில் அமித்ஷாவும், போர்பந்தரில் மன்சுக் மாண்டவியாயும், அருணாசல் பிரதேசத்தில் கிரண் ரிஜிஜுவும் போட்டியிடுகின்றனர்.

    நடிகர் சுரேஷ் கோபி கேரளாவின் திருச்சூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

    இந்தப் பட்டியலில் 47 இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 28 பெண் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

    தமிழகத்துக்கு வேட்பாளர் ஒருவரும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது
    • இந்நிலையில், அந்த இரு மாநிலங்களுக்கு முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பா.ஜ.க அறிவித்துள்ளது.

    புதுடெல்லி:

    ராஜஸ்தான், தெலுங்கானா, மிசோரம், சத்தீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. இவற்றில் சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்கின்றன. மிசோரமில், மணிப்பூர் கலவரத்தை அடுத்து கூட்டணிக் கட்சி மற்றும் ஆளும் கட்சியான மிசோ தேசிய முன்னணியுடனான பா.ஜ.க கூட்டணி முறிந்துள்ளது. மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க மற்றும் காங்கிரசுக்கு இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது

    இந்நிலையில், தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவிக்கும் முன்பே பா.ஜ.க வேட்பாளர்களின் முதல் பட்டியலை அறிவித்தது.

    90 உறுப்பினர்களைக் கொண்ட சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தலுக்கு 21 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலையும், 230 உறுப்பினர்களைக் கொண்ட மத்திய பிரதேச சட்டசபைக்கு 39 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலையும் பா.ஜ.க அறிவித்துள்ளது.

    இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா தோல்வியை தழுவியது. இதை தொடர்ந்து வரும் 5 மாநில சட்டசபை தேர்தலில் தோல்வியை தவிர்க்க முன்கூட்டியே வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

    வேட்பாளர்கள் தேர்வு, தேர்தல் வியூகங்கள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பா.ஜ.க.வின் மத்திய தேர்தல் குழு கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியாக வாய்ப்பு இருக்கிறது. ‘சீட்’ கேட்டு தமிழக நிர்வாகிகள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். #LSPolls #Congress
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் திருவள்ளூர் (தனி), கிருஷ்ணகிரி, ஆரணி, கரூர், திருச்சி, சிவகங்கை, தேனி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

    ஏற்கனவே, தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் தயாரித்து அகில இந்திய காங்கிரஸ் தலைமையிடம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், டெல்லியில் உள்ள முக்கிய தலைவர்களை தொடர்பு கொண்டு தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் ‘சீட்’ கேட்டு வருவதால், வேட்பாளர்கள் பட்டியல் வெளியாவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.

    கன்னியாகுமரி தொகுதியை பெற போட்டா போட்டி நிலவுகிறது. வசந்தகுமார், ரூபி மனோகரன், ஊர்வசி அமிர்தராஜ், ராபர்ட் புரூஸ், அசோக் சாலமோன் என்று அந்தப் பட்டியல் நீள்கிறது. இதேபோல், திருவள்ளூர் (தனி) தொகுதிக்கு செல்வபெருந்தகை, விஸ்வநாதன், விக்டரி ஜெயக்குமார், ஜெயக்குமார் (நாமக்கல்), ராணி ஆகியோர் ‘சீட்’ கேட்டு வருகின்றனர்.

    ஆரணி தொகுதியில் போட்டியிட விஷ்ணுபிரசாத், நாசே ராமச்சந்திரன், சுமதி அன்பரசு ஆகியோர் வாய்ப்பு கேட்டு வருகின்றனர். திருச்சி தொகுதியில் முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது குஷ்புவும் அதே தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டு வருவதால் இழுபறி நீடிக்கிறது. ஈரோடு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படாத நிலையில், விருதுநகர், கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிட முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வாய்ப்பு கேட்டு வருகிறார்.

    கரூர் தொகுதியில் ஜோதிமணி போட்டியிடுவார் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது பேங்க் சுப்பிரமணியன் பெயரும் அடிபடத் தொடங்கியுள்ளது. சிவகங்கை தொகுதியில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரத்தில் மகன் கார்த்தி சிதம்பரம் வேட்பாளராக களம் இறக்கப்படுவார் என்று கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அவர் மீதான வழக்குகளை காரணம் காட்டி கட்சித் தலைமை யோசிப்பதாக தெரிகிறது.



    இவ்வாறு காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாவதில் பல்வேறு குழப்பங்கள் இருந்து வரும் நிலையில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று தமிழக காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், கடந்த சில நாட்களாகவே ‘சீட்’ கேட்டு தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.  #LSPolls #Congress

    சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் 17 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. #ChhattisgarhElections #Congress
    புதுடெல்லி:

    சத்தீஸ்கர் மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் மந்திரியாக ராமன் சிங் பதவி வகித்து வருகிறார்.

    இதற்கிடையே, சத்தீஸ்கர் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடத்தப்படும் எனவும், மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் 18 தொகுதிகளில் நவம்பர் 12-ம் தேதியும், 72 தொகுகளில் 20-ம் தேதியும் வாக்குப்பதிவு நடத்தப்பட உள்ளது. டிசம்பர் 11ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
     


    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர். மாநிலத்தில் ஆட்சியை தக்க வைக்க பாஜகவும், ஆட்சியை பிடிக்க காங்கிரசும் தீவிரமாக பணியாற்றி வருகின்றன.

    இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் போட்டியிடவுள்ள 17பேர் கொண்ட பட்டியலை காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டுள்ளது.

    இதுதொடர்பாக, காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 17 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளோம் என தெரிவித்துள்ளது.

    சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் முதல் மந்திரி ராமன் சிங்கை எதிர்த்து வாஜ்பாய் உறவினரை காங்கிரஸ் கட்சி நிறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #ChhattisgarhElections #Congress
    ×