search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cannes Film Festival"

    • இந்திய ஒளிப்பதிவாளரான சந்தோஷ் சிவனுக்கு ‘தி பியர் ஆஞ்ஜெனியக்ஸ் எக்ஸ்லன்ஸ் இன் சினிமாடோகிராஃபி’ என்ற கவுரவ விருதை வழங்கியுள்ளனர்.
    • இது ஆண்டுதோறும் கேன்ஸ் திரைப்பட விழாவில் ஒளிப்பதிவாளர்களுக்கு கொடுக்கப்படும் கவுரவ விருதாகும்.

    2024 கேன்ஸ் திரைப்பட விழாவில் அடுத்தடுத்து இந்திய குறும் படங்களுக்கும், திரைப்படங்களுக்கும், நடிகருக்கும் அங்கீகாரம் கிடைத்த நிலையில் தற்பொழுது இந்திய ஒளிப்பதிவாளரான சந்தோஷ் சிவனுக்கு 'தி பியர் ஆஞ்ஜெனியக்ஸ் எக்ஸ்லன்ஸ் இன் சினிமாடோகிராஃபி' என்ற கவுரவ விருதை வழங்கியுள்ளனர்.

    இது ஆண்டுதோறும் கேன்ஸ் திரைப்பட விழாவில் ஒளிப்பதிவாளர்களுக்கு கொடுக்கப்படும் கவுரவ விருதாகும். சந்தோஷ் சிவன் அவருக்கென ஒரு ஸ்டைலில் கதையை ஒளிப்பதிவில் காண்பிக்கும் திறனுள்ளவர். ஒரு குழந்தை எப்படி இந்த உலகை வியந்தும், புதுமையாக ஒவ்வொரு விஷயத்தை பார்க்கிறதோ. அதுப்போல தான் சந்தோஷ் சிவனின் காட்சிபதிவு இருக்கும்.

    இவரின் இந்த காட்சிபதிவு திறனுக்கு இவரின் அப்பா மிக முக்கிய காரணம். இவரது தந்தையான  சிவசங்கரன் நாயர் பிரபலமான மலையாள இயக்குனர் ஆவார். இவர் ஒரு போட்டோ ஸ்டூடியோவை சொந்தமாக வைத்து இருந்தார். சிறு வயதில் இருந்தே தன் அப்பாவுடன் போட்டோ ஸ்டூடியோக்கு செல்வதும், அவர் எடுக்கும் போட்டோ ஷூட்டுகளுக்கு உதவி செய்து வந்து, ஒளிப்பதிவின் மீது ஆர்வம் பற்றிக் கொண்டது.

    1986 ஆம் ஆண்டு வெளியான `நிதியுடே கதா' என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் தனது ஒளிப்பதிவாளர் பயணத்தை தொடங்கினார். மணி ரத்னம் இயக்கத்தில் வெளியான ரோஜா மற்றும் தளபதி படங்களில் இவரது ஒளிப்பதிவின் திறமை அபாரமாக இருக்கும்.

    ரோஜா படத்தில் வரும் இயற்கை காட்சிகள், தளபதி படத்தில் ரஜினி கதாப்பாத்திரத்திற்கும் சூரியனுக்கும் ஒரு தொடர்பு இருந்துக் கொண்டே இருக்கும், அதை மிக அழகாக காட்சி படுத்திருப்பார். இவர் ஒளிப்பதிவில் உருவான சாருக்கான் ஓடும் ரெயிலில் ஆடிய 'சையா சையா' பாடல் இன்று வரை மக்கள் மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது.

     

    இந்தியன் சொசைட்டி ஆஃப் சினிமாடோகிராஃபர்ஸ் என்ற சங்கத்தை தொடங்கி வைத்தது சந்தோஷ் சிவன் ஆகும்.அமேரிகன் சொசைட்டி ஆஃப் சினிமாடோகிராஃபர்ஸ் பட்டியலில் இடம் பெற்ற முதல் ஆசிய ஒளிப்பதிவாளர் பெருமை இவரே சேறும். இதுவரை 50-க்கும் மேற்பட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் மற்றும் 50-மேற்பட்ட டாக்குமண்டரிகளுக்கும் ஒளிப்பதிவு ஆற்றியுள்ளார் என்பது குறிப்படத்தக்கது.

    சர்வதேச அளவில் இதுவரை பல பிரபல ஒளிப்பதிவாளர் பெற்ற இந்த கேன்ஸ் கவுரவ விருதை நம் இந்தியாவை சேர்ந்த சந்தோஷ் சிவன் தற்பொழுது பெற்றுள்ளது மிகப் பெரிய ஒரு அங்கீகாரம் இந்திய சினிமா பெற்றுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சில தினங்களுக்கு முன்பு ஐஸ்வர்யா ராய் புகழ்பெற்ற 77-வது கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்க மகள் ஆராத்யாவுடன் பிரான்ஸ் சென்றார்.
    • ஐஸ்வர்யா ராய்க்கு விபத்தில் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பதாக கூறப்பட்டது.

    உலக அழகி பட்டம் வென்ற ஐஸ்வர்யா ராய் தமிழில் இருவர், ஜீன்ஸ், கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், ராவணன், எந்திரன், பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

    சில தினங்களுக்கு முன்பு ஐஸ்வர்யா ராய் புகழ்பெற்ற 77-வது கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்க மகள் ஆராத்யாவுடன் பிரான்ஸ் சென்றார். அப்போது அவர் கையில் அடிபட்டு கட்டுப்போட்டு இருந்தார்.

    அந்த புகைப்படம் வலைத்தளத்தில் வைரலானதை பார்த்த ரசிகர்கள் பதறினார்கள். ஐஸ்வர்யா ராய்க்கு என்ன ஆச்சு என்று தவிப்போடு கேள்விகள் எழுப்பினர். விரைவில் குணமாக வேண்டியும் பதிவுகள் வெளியிட்டனர்.

    ஐஸ்வர்யா ராய்க்கு விபத்தில் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பதாக கூறப்பட்டது. கட்டுப்போட்ட கையுடனேயே வித்தியாசமான உடையில் கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்றார்.

    தற்போது ஐஸ்வர்யா ராய் பிரான்சில் இருந்து மும்பை திரும்பி உள்ளார். அடுத்த சில தினங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு கட்டுப்போட்டுள்ள கையில் அறுவை சிகிச்சை செய்து கொள்ள ஐஸ்வர்யாராய் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 77-வது கேன்ஸ் திரைப்பட விழா மே 14-ந்தேதி தொடங்கி வருகிற 25-ந்தேதி வரை 16 நாட்கள் நடக்கிறது.
    • இந்தியாவில் இருந்து பிரபல நடிகைகளான ஐஸ்வர்யா ராய், கியாரா அத்வானி, சோபிதா துபிபாபா உள்பட பலர் விழாவில் பங்கேற்றுள்ளனர்.

    77-வது கேன்ஸ் திரைப்பட விழா மே 14-ந்தேதி தொடங்கி வருகிற 25-ந்தேதி வரை 16 நாட்கள் நடக்கிறது. விழாவில் இந்திய திரை உலக பிரபலங்கள் பலர் பங்கேற்றுள்ளனர். சர்வதேச அளவிலான பல படங்கள் திரையிடப்படுகின்றன.

    இந்தியாவில் இருந்து பிரபல நடிகைகளான ஐஸ்வர்யா ராய், கியாரா அத்வானி, சோபிதா துபிபாபா உள்பட பலர் விழாவில் பங்கேற்றுள்ளனர். ஐஸ்வர்யாராய் சிவப்பு கம்பளத்தில் கையில் கட்டுடன் நடந்து வந்து பார்வையாளர்களை கவர்ந்தார்.

    வெளிநாட்டு திரைப்பிரபலங்களான சாம்பியா, நடிகை சூசன் சார்பு, ஜெர்மனை சேர்ந்த பெபேக்காமிர், வாலன் புனா பஹிடே, பிரசிலின் லுமாக்ரோத், கிரேக்க மாடலான பகிங்ஸா நோமிகோ, பிரிட்டீஷ் நடிகை நதாலி இமானுவேல் உள்பட ஏராளமானோர் விழாவில் பங்கேற்றுள்ளனர்.

    விழாவில் பங்கேற்க பிரான்ஸ் சென்றுள்ள பிரபல இந்தி நடிகை கியாரா அத்வானி அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் கியாரா அத்வானி அளித்துள்ள பேட்டியில் என் சினிமா வாழ்க்கையில் இது ஒரு வரலாறாக இருக்க போகிறது. விழாவில் பங்கேற்று இருப்பது எனக்கு சிறந்த அனுபவம். இவ்வாறு அவர் கூறினார்.

     

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்திய சினிமாவில் அழிக்கமுடியாத தடத்தைப் பதித்தவர் உலக அழகி ஐஸ்வர்யா ராய். ஹிந்தி, பெங்காலி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் தொடர்ந்து தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை கிறங்கடிக்க செய்து வருகிறார். ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் மகனும் பாலிவுட் நடிகருமான அபிஷேக் பச்சனை கடந்த 2007 ஆம் ஆண்டு ஐஸ்வர்யா ராய் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஆராத்யா என்ற  12  வயது மகள் உள்ளார்.

    இந்நிலையில் பிரான்சில் கடந்த மே 14 ஆம் தேதி தொடங்கி கோலாகலமாக நடந்துவரும் கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொள்வதற்காக ஐஸ்வர்யா ராய் பிரான்ஸ் சென்றுள்ளார். இந்த திரைப்பட விழாவில் உலகம் முழுவதும் இருந்து வரும் நடிகர், நடிகைகள் பிரமாண்டமாகவும், வித்தியாசமாகவும் உடைகளை அணிந்து, சிவப்பு கமபலத்தில் நடந்து வந்து தங்களை வெளிப்படுத்துவது வழக்கம். அந்த வகையில் ஐஸ்வர்யா ராய் சிவப்பு கம்பளத்தில் மகள் ஆராத்யாவுடன் தோன்றிய புகைப்படங்கள் தற்போது தீயாக பரவி வருகிறது.

    அதற்கு முக்கிய காரணம் தனது வலது கையில் காயத்துக்காக மாவுக் கட்டு போட்டுகொண்டு அதோடு அவர் அங்கு தோன்றியதே ஆகும். காயத்தையும் பொருட்படுத்தாமல் தன்னம்பிக்கையுடன் பொதுவெளியில் தன்னை வெளிப்படுத்திக் கொண்டதற்காக ஐஸ்வர்யா ராயை ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி ஸ்டைல் என்பது நாம் உருவாக்குவதே ஆகும்.

     

    அதன்படி, கையில் கட்டுடன் தோன்றி அதையும் ஒரு ஸ்டைலாக ஐஸ்வர்யா ராய் மாற்றியுள்ளார் என்று சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பூரிப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். கடைசியாக ஐஸ்வர்யா ராய் தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் 1 மாற்றும் 2 ஆம் பாகத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பிரெஞ்சு நடிகை கேத்தரின், கவிதை வாசித்து போரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
    • ரஷிய அரசாங்கத்துடன் தொடர்புடைய திரைப்பட நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

    உக்ரைன்-ரஷியா போர் ஓராண்டைக் கடந்து நீடிக்கிறது. போரை முடிவுக்கு கொண்டு வருவதுடன், அமைதி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவேண்டும் என உலக தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அமைதிப் பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் ஒருபுறம் நடைபெற்றாலும், அதற்கு முழுமையான பலன் கிடைக்கவில்லை. போரினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து சர்வதேச கவனத்தை ஈர்க்கும் வகையில், உக்ரைனுக்கு ஆதரவாக சர்வதேச நிகழ்வுகளில் பரபரப்பான செயல்கள் அரங்கேறுகின்றன.

    அவ்வகையில், பிரான்சில் நடைபெற்று வரும் 76வது கேன்ஸ் திரைப்பட விழாவில் உக்ரைனுக்கு ஆதரவாக ஒரு பெண் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உக்ரைனுக்கு ஆதரவளிக்கும் விதமாக அந்த பெண் உக்ரைன் தேசியக் கொடி நிறத்தில் உடையணிந்து வந்ததுடன், திடீரென ஆடைக்குள் மறைத்து வைத்திருந்த ரத்த நிறத்திலான திரவத்தை தலையில் ஊற்ற ஆரம்பித்தார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. பாதுகாவலர்கள் அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.

    கேன்ஸ் திரைப்பட விழாவின் இயக்குனர் தியரி ப்ரீமாக்ஸ், கடந்த வாரம் பேசும்போது உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்ததாக டெலிகிராப் செய்தி வெளியிட்டுள்ளது. திரைப்பட விழாவின் தொடக்க நிகழ்வில், பிரெஞ்சு நடிகை கேத்தரின் டெனியூவ், உக்ரைன் கவிஞர் லெஸ்யா உக்ரைன்கா எழுதிய ஹோப் என்ற கவிதையை வாசித்து, போரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

    ரஷிய அரசாங்கத்துடன் தொடர்புடைய குழுவினர் அல்லது திரைப்பட நிறுவனங்களின் மீது கடந்த ஆண்டே தடை விதிக்கப்பட்டது. இந்த ஆண்டு திரைப்படவிழாவிலும் அந்த தடை அமலில் உள்ளது என்று டெலிகிராப் தெரிவித்துள்ளது.

    கடந்த ஆண்டு கடந்த திரைப்பட விழாவில், உக்ரைன் பெண் ஒருவர் ரஷிய படைகளுக்கு எதிராக சிவப்புக் கம்பளத்தின் மீது திடீரென நிர்வாணப் போராட்டம் நடத்தினார். மேலாடை முழுவதையும் கழற்றினார். மார்பில் உக்ரைன் தேசியக் கொடியின் நிறத்தில் வண்ணம் பூசியிருந்தார். அத்துடன், எங்களை பாலியல் பலாத்காரம் செய்வதை நிறுத்து என்ற வாசகத்தை மார்பில் எழுதியிருந்தார்.

    பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகியோர் சர்வதேச அளவில் பிரபலமான கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்றுள்ளனர்.
    சர்வதேச அளவில் பிரபலமான 72-வது கேன்ஸ் திரைப்பட விழா நேற்று கோலாகலமாக தொடங்கியது. இந்த வருடம் உலகம் முழுவதிலும் இருந்து வந்த மொத்தம் 1,845 முழு நீளப் படங்களில் 47 படங்கள் அதிகாரப்பூர்வ போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

    இந்த இறுதிப் பட்டியலில் இந்தியப் படமும் எதுவும் இடம்பெறவில்லை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இயக்கி இசையமைத்து வரும் விர்ச்சுவல் ரியாலிட்டி படமாக உருவாகிக்கொண்டிருக்கும் `லே மஸ்க்‘ ஆங்கிலப் படத்தில் இருந்து `சென்ட் ஆப் தி சாங்’ என்ற பாடலை வெளியிட கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு சென்றுள்ளார்.



    அதேபோல் இயக்குநர் விக்னேஷ் சிவனும் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×