என் மலர்
நீங்கள் தேடியது "car attacked"
- கிறிஸ்துமஸ் மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
- வேகமாக காரை ஓட்டி வந்த மர்ம நபர் அங்கிருந்த மக்கள் மீது இடித்து தாக்குதல் நடத்தினார்.
பெர்லின்:
ஜெர்மனியின் மத்திய பகுதியில் அமைந்துள்ள மக்டேபர்க் நகரில் சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வந்து செல்லும் கிறிஸ்துமஸ் மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. மக்கள் அதிகமாக கூடியிருந்த கூட்டத்திற்குள் மர்ம நபர் ஒருவர் வேகமாக காரை ஓட்டி வந்தார். அங்கிருந்த மக்கள் மீது இடித்து தாக்குதல் நடத்தினார்.
இதில் பொதுமக்களில் 2 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனே மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது என முதல் கட்ட தகவல் வெளியானது.
கார் தாக்குதலை அடுத்து மார்க்கெட் பகுதிக்கு ஆம்புலன்ஸ்கள் மற்றும் பாதுகாப்பு வாகனங்கள் விரைந்து வந்தன. பாதுகாப்புப் படையினர் அப்பகுதி முழுவதையும் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
தாக்குதலில் ஈடுபட்ட மர்ம நபரை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். இந்தத் தாக்குதலின் பின்னணி குறித்து விசாரணை நடந்துவருகிறது என போலீசார் தெரிவித்தனர்.
கிறிஸ்துமஸ் மார்க்கெட்டில் கூட்டத்துக்குள் கார் புகுந்து தாக்குதல் நடந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- கெஜ்ரிவாலின் கார் மீது கம்பு மற்றும் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.
- அரவிந்த் கெஜ்ரிவாலை பாஜகவினர் தாக்க முயற்சித்தாக ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
டெல்லி மாநில சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 5-ந்தேதி நடைபெற இருக்கிறது. ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. மூன்று கட்சிகளும் ஏராளமான இலவச அறிவுப்புகளை அள்ளி வீசியுள்ளது.
மும்முனை போட்டி என்றாலும் ஆம் ஆத்மி- பாஜக இடையில்தான் போட்டி நிலவுகிறது. இரண்டு கட்சி தலைவர்களும் மாறிமாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது. தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில், டெல்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலின் கார் மீது தாக்குதல் நடந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரசாரத்திற்கு சென்ற கெஜ்ரிவாலின் கார் மீது கம்பு மற்றும் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.
மேலும், அரவிந்த் கெஜ்ரிவாலை பாஜகவினர் தாக்க முயற்சித்தாக ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
- ஜெர்மனியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கார் பாய்ந்தது.
- இந்தச் சம்பவத்தில் 28 பேர் படுகாயம் அடைந்தனர்.
முனீச்:
ஜெர்மனியின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள முனீச் நகரில் பாதுகாப்பு தொடர்பான சர்வதேச உச்சி மாநாடு நடக்கிறது. இதற்காக உலக தலைவர்கள் வந்து கொண்டு இருக்கின்றனர்.
இந்நிலையில், முனீச்சில் கூட்டத்தில் வேகமாக புகுந்த கார் மோதியதில் 28 பேர் படுகாயம் அடைந்தனர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் கோஷங்கள் எழுப்பியபடி இருந்தனர். அப்போது அதிவேகமாக வந்த கார் அவர்கள் மீது பாய்ந்தது. இந்தச் சம்பவத்தில் 28 பேர் படுகாயம் அடைந்தனர்.
அங்கிருந்த போலீசார் கார் ஓட்டி வந்த 24 வயது நபரை கைதுசெய்தனர். விசாரணையில், அவர் ஆப்கனைச் சேர்ந்த அகதி என தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து, சர்வதேச மாநாடு நடக்கும் இடத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.