search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "case against"

    • போதை பொருட்களை விற்பனை செய்த 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • போதை பொருள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட பகுதி களில் குற்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என மொடக்குறிச்சி, பவானி, காஞ்சிகோவில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது சாமிநாதபுரம், நஞ்சை ஊத்துக்குளி, கருக்கம்பாளையம், பவானி புது பஸ் ஸ்டாண்ட் ஆகிய பகுதிகளில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்த மொடக்கு றிச்சி சாமிநாதபுரம் கரட்டங்காடு பகுதியை சேர்ந்த கண்ணன் மகன் காமராஜர் (வயது 32), நஞ்சை ஊத்துக்குளியை சேர்ந்த ராமசாமி மகன் முருகேசன் (57), பெத்தம்பாளையம் அடுத்த கருக்கம்பாளையம் பகுதியை சேர்ந்த நல்ல கவுண்டர் மகன் லோகநாதன் (26), பவானி காமராஜர் நகர் பெருமாள்புரம் சுரமணி மனைவி மலர்விழி (44) ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த ஹான்ஸ், கூலிப், பான் மசாலா உள்ளிட்ட போதை பொருள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த விஜயகுமார் என்பது தெரியவந்தது.
    • போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு கிருஷ்ணம்பாளையம் பகுதிகளில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக கருங்க ல்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தகவலின் அடிப்படையில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் தாஜ் நகரைச் சேர்ந்த சரவணன் மகன் விஜயகுமார் (வயது 34) என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த லாட்டரி சீட்டுகள், செல்போன் மற்றும் ரூ. 220 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த சுந்தரபாண்டியன் என்பவரை போலீசார் பிடித்தனர்.
    • அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு பஸ் நிலையம் அருகே லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக ஈரோடு டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த சேலம் மாவட்டம் முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்த ரங்கநாதன் மகன் சுந்தரபாண்டியன் (வயது 43) என்பவரை போலீசார் பிடித்தனர்.

    பின்னர் அவர் விற்பனைக்காக வைத்திருந்த லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.2 ஆயிரத்து 30 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விற்பனைக்காக வைத்திருந்த 35 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட பகுதி களில் குற்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என ஈரோடு டவுன், கோபி போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    அப்போது ஈரோடு டவுன், கருங்கல்பாளையம், தாளவாடி, ஆசனூர், நம்பியூர் சுற்று வட்டார பகுதிகளில் அனுமதியின்றி மது விற்று கொண்டிருந்த சென்னிமலை பகுதியை சேர்ந்த செல்வம் மகன் லெட்சுமணன் (வயது 29),

    கருங்கல்பாளையம் கக்கன் நகரை சேர்ந்த ஆறுமுகம் மகன் பாபு (52), தாளவாடி நாயக்கர் தெருவை சேர்ந்த அல்லம்மா (55), கோத்தகிரி பகுதியை சேர்ந்த மதன் மகன் பரமேஸ்வரன் (34),

    கோபிசெட்டிபாளையம் கடைசெல்லிபாளையத்தை சேர்ந்த பழனி மகன் ரெங்கசாமி (21) ஆகியோரை போலீசார் பிடித்தனர்.

    பின்னர் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 35 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதை போல் பவானி மெயின் ரோடு பகுதியில் பொது இடத்தில் குடிபோதையில் சுற்றி திரிந்த பி.பி.அக்ரஹாரத்தை சேர்ந்த சுப்பிரமணியம் மகன் சுரேஷ் (38) என்பவரை கருங்கல்பாளையம் போலீசார் கைது செய்தனர்.

    மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பஸ் வந்த போது சில வாலிபர்கள் பஸ்சை வழி மறித்து அறைகுறை ஆடையுடன் ஆட்டம் போட்டனர்.
    • புகாரின்பேரில் போலீசார் 10 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    வத்தலக்குண்டு :

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் இருந்து வத்தலக்குண்டு நோக்கி நேற்று இரவு அரசு பஸ் வந்து கொண்டு இருந்தது. இந்த பஸ்சை விராலிப்ப ட்டியைச் சேர்ந்த அய்யப்பன் என்பவர் ஓட்டி வந்தார். பண்ணைப்பட்டி பிரிவு அருகே பஸ் வந்த போது சில வாலிபர்கள் பஸ்சை வழி மறித்து அறைகுறை ஆடையுடன் ஆட்டம் போட்டனர்.

    டிரைவர் மற்றும் கண்டக்டர் கீழே இறங்கி அவர்களை தட்டிக் கேட்ட போது தரக்குறைவான வார்த்தைகளால் பேசிய துடன் பஸ்சையும் அடித்து தாக்கினர். அதன் பிறகு பயணிகள் சத்தம் போடவே அங்கிருந்து சென்று விட்டனர்.

    அதன் பிறகு அய்யப்ப னின் உறவினர்கள் அங்கு வந்து விசாரித்தபோது அவர்களையும் போதை வாலிபர்கள் தரக்குறைவாக திட்டியுள்ளனர். போதை வாலிபர்கள் தாக்கியதில் 4 பேர் காயமடைந்தனர். அவர்கள் தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை க்காக அனுமதிக்கப்ப ட்டுள்ளனர்.

    இது குறித்து வத்த லக்குண்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டி.எஸ்.பி. முருகன் தலைமை யில் போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். போதையில் தகராறில் ஈடுபட்ட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

    • பணம் கொடுக்கல் வாங்கலில் தம்பதியை தாக்கியவர்கள் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
    • புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    பெரியகுளம்:

    பெரியகுளம் அருகே வடகரை வைத்தியநாத புரத்தை சேர்ந்தவர் சுப்பிர மணி மனைவி மனோ ன்மணி(37). விவசாயம் செய்து வருகின்றனர். அழகுபாறை, அணைக்கல் பகுதியில் தென்ன ந்தோப்பை அதேபகுதியை சேர்ந்த சசிக்குமார், கற்பகம் ஆகியோருக்கு கிரைய அக்ரிமெண்ட் செய்து கொடுத்தனர்.

    இதற்காக ரூ.10 லட்சம் பேசி முன்பணமாக ரூ.7 லட்சம் கொடுக்கப்பட்டது. மீதி பணத்தை கேட்டபோது பிறகு தருவதாக இழுத்த டித்து வந்தனர். இந்தநிலை யில் சுப்பிரமணி மற்றும் அவரது மனைவி தோப்பில் இருக்கும் போது கற்பகம், சசிக்குமார் ஆகியோர் அத்துமீறி உள்ளே நுழைந்து அவர்களை தகாத வார்த்தை யால் திட்டி கொலை மிரட்டல் விடுத்து ள்ளனர்.

    தோப்பின் ஆவணம் எங்களிடம் உள்ளது. இத னால் ஒன்றும் செய்யமுடி யாது எனக்கூறி அவரை தாக்க முயன்றனர். இதுகுறித்து தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளிக்கப்பட்டது. எஸ்.பி உத்தரவின்பேரில் பெரியகுளம் போலீசார் கற்பகம் மற்றும் சசிக்குமார் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சட்டவிரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்தவர்களை போலீ சார் பிடித்தனர்.
    • 24 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் மொ டக்குறிச்சி, சிவகிரி, ஈரோடு டவுண், ஹாசனூர் ஆகிய பகுதிகளில் சட்டவி ரோத மாக மது பாட்டில்கள் விற் பனை நடைபெறுவதாக ஈரோடு டவுண், கோபி போ லீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீ சார் அங்கு அனுமதியின்றி சட்டவிரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்த மொ டக்குறிச்சி திருவள்ளுவர் தெருவை சேர்ந்த பழனி ச்சாமி மனைவி தனலட்சுமி (வயது 45),

    புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோயிலை சேர்ந்த சாரதி (25), புதுக்கோட்டை மாவட்டம் பெரிய கோட்டையை சேர்ந்த தங்கராசு மகன் பாரதி (24) புளியம்பட்டி மாதவி தெருவை சேர்ந்த வெங்கடேசன் மகன் இளவரசன் ஆகியோரை போலீ சார் பிடித்தனர்.

    பின்னர் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 24 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்

    • கணவர் உள்பட 3 பேர் மீது வழக்கு பதியப்பட்டது.
    • வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் அருகே ஓ.கோவில்பட்டியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி சாமுண் டீஸ்வரி. இவர்கள் 5 வருடங்களாக காதலித்து வந்தனர்.

    திருமண ஆசை காட்டி பலமுறை சாமுண் டீஸ்வரியை, நாகராஜ் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதன் பின்னர் நாகராஜூக்கு ராணுவத்தில் வேலை கிடைத்தது. அப்போது சாமுண்டீஸ்வரி திருமணம் செய்து கொள்ளுமாறு நாக ராஜிடம் கேட்டார். ஆனால் நாகராஜ் அதற்கு மறுத்துவிட்டார்.

    இதைத்தொடர்ந்து கடந்த 2022-ம் ஆண்டு விருதுநகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சாமுண்டீஸ் வரி புகார் செய்தார். போலீசாரின் அறிவுறுத் தலை தொடர்ந்து சாமுண்டீஸ்வரியை நாகராஜ் திருமணம் செய்து கொண்டார். 25 நாட்கள் குடித்தனம் நடத்தி வந்த நிலையில் பெற்றோர் வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டு நாகராஜ் வேலைக்கு சென்றார்.

    பின்னர் திரும்பி வந்தபோது, நாகராஜ் வீட்டாருக்கும், சாமுண் டீஸ்வரிக்கும் பிரச்சினை ஏற்பட்டது. அப்போது ரூ. 2 லட்சம் ரொக்கம் மற்றும் 50 பவுன் நகைகள் கொண்டு வந்தால் மட்டுமே நாகராஜூ டன் சேர்ந்து வாழ அனுமதிப்பதாக நாகராஜின் தாய் வரதம்மாள், உறவினர் வீரம்மாள் ஆகியோர் கூறியுள்ளனர்.

    மேலும் நாகராஜூம், தாயுடன் சேர்ந்து கொண்டு வரதட்சணை கொண்டு வருமாறு வற்புறுத்தி யுள்ளார். இதையடுத்து மீண்டும் விருதுநகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலை யத்தில் சாமுண்டீஸ்வரி புகார் செய்தார். போலீசார் நாகராஜ், அவரது தாய் வரதம்மாள், வீரம்மாள் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் முடங்கியார் ரோடு பகுதியை சேர்ந்தவர் ஜோதி(வயது35). அவரது சொந்த ஊரான பழைய சென்னாகுளத்தில் வீடு மற்றும் நிலங்கள் உள்ளது. இந்தநிலையில் வீடு இடிந்து அதில் இருந்த தேக்கு கட்டைகளை சிலர் திருடிச் சென்று விட்டதாக உறவினர் ஒருவர் ஜோதிக்கு போனில் தகவல் தெரிவித்தார்.

    இதையடுத்து ஜோதி அங்கு சென்று பார்த்தபோது தேக்கு கட்டைகள் திருடப் பட்டது தெரியவந்தது. அக்கம் பக்கத்தில் விசாரித்த போது, அதே பகுதியை சேர்ந்த கதிரேசன், முருகே சன் மற்றும் சிலர் தேக்கு கட்டைகளை திருடிச் சென்றதாக தெரியவந்தது.

    இதுகுறித்து ஸ்ரீவில்லி புத்தூர் கோர்ட்டில் ஜோதி வழக்கு தொடர்ந்தார். கோர்ட்டு உத்தரவின்பேரில் வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்தநிலையில் ஜோதி தனது கணவருடன் விசா ரணைக்கு சென்றுவிட்டு வரும்போது முருகேசனும், அவரது நண்பர்களும் அவர்களை வழிமறித்து கொலை மிரட்டல் விடுத்த தாக கூறப்படுகிறது. மேலும் அவர்களுக்கு சொந்தமான வாழை தோப்பையும் அவர்கள் சேதப்படுத்தி யுள்ளனர்.

    இதுகுறித்தும் ஜோதி வன்னியம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் கதிரேசன், முருகேசன், மோகன், ஜெயராஜ் உள்ளிட் டோர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர். 

    • சேவல் சூதாட்டம் நடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • அவர்களிடம் இருந்து ரூ.2,100 பறிமுதல் செய்தனர்.

    சென்னிமலை 

    சென்னிமலை அருகே உள்ள அய்யம்பாளையம் பகுதியில் சிலர் பணம் வைத்து சேவல் சூதாட்டம் நடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் போலீசார் அய்யம்பாளையம் பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு 6 பேர் பணம் மற்றும் சேவல் வைத்து கொண்டு சண்டை நடத்தி கொண்டு இருந்தனர்.

    அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.2,100 பறிமுதல் செய்தனர்.

    இதுகுறித்து சென்னிமலை போலீசார் அவர்கள் 6 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வரதட்சணை கொடுமை: 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
    • 40 பவுன் நகை, ரொக்கம், மோட்டார் சைக்கிள் மற்றும் சீர்வரிசைகளை கொடுத்துள்ளனர்.

    விருதுநகர்

    அருப்புக்கோட்டை கலைஞர் நகரை சேர்ந்தவர் ரமேஷ்குமார். இவரது மகள் கார்த்திகா (வயது 25). இவருக்கும், ராமர்பாண்டி ராஜா என்பவருக்கும் கடந்த ஜூன் மாதத்தில் திருமணம் நடந்தது.

    40 பவுன் நகை, ரொக்கம், மோட்டார் சைக்கிள் மற்றும் சீர்வரிசைகளை கொடுத்துள்ளனர். இந்த நிலையில் கார்த்திகாவிடம் மேலும் ரூ.10லட்சம் ரொக்கம் வாங்கிவர வேண்டும் என்று கூறி கொடுமைபடுத்தி உள்ளனர்.

    சில மாதங்களுக்கு முன்பு கார்த்திகை பெற்றோர் வீட்டில் ராமர்பாண்டி ராஜா விட்டு சென்றுள்ளார். அதன் பிறகு தொடர்பு கொள்ளவில்லை.

    இந்த நிலையில் கடந்த 22-ந்தேதி கார்த்திகா, ராமர்பாண்டி ராஜாவை சந்தித்து பேச சென்றுள்ளார்.அப்போது ராமர்பாண்டி ராஜா மற்றும் அவரது உறவினர்கள் சுப்பிரமணியன், ராஜாத்தி, ராஜேஸ்வரி, மீனாட்சி உள்பட 6 பேர் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து கார்த்திகா அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் அவர்கள் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • பெண்ணை தாக்கியவர் மீது வழக்கு பதியப்பட்டது
    • கடனை திருப்பி கேட்டதால் சம்பவம்

    புதுக்கோட்டை

    ஆலங்குடி அருகே உள்ள கே ராசியமங்கலத்தை சேர்ந்த ஆரோக்கியமேரி (வயது 43 ) இவர் அதே கிராமத்தை சேர்ந்த ரோஸ்மேரி என்பவருக்கு ரூ 50.ஆயிரம் கட னாக கொடுத்துள்ளார். பணம் கொடுத்து நீண்ட நாட்கள் ஆகியும் திருப்பி தராததால், ஆரோக்கியமேரி அவரிடம் சென்று பணத்தை கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர் ஆரோக்கியமேரியை தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த ஆரோக்கியமேரி வடகாடு போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் ரா ஜேந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×