என் மலர்
நீங்கள் தேடியது "Case against 5 people for"
- போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
- 25 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் ஈரோடு டவுண், கோபி போலீசார் சுற்று வட்டார பகுதிகளில் குற்ற சம்பவ ங்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது அம்மாபேட்டை, பெருந்துறை சுற்றுவ ட்டாரப் பகுதிகளில் அனு மதியின்றி மது விற்று கொண்டிருந்த பெரியசேமூர் கன்னிமார் நகரை சேர்ந்த மது மகன் சந்திரசேகர் (வயது 44), சிவகங்கை மாவ ட்டம் காளையார் கோவி லை சேர்ந்த எடிவக்கண்ணு மகன் முத்துவேல்,
அந்தியூர் கொமரயனூர் பகுதியைச் சேர்ந்த கணேசன் (40), மதுரை மாவட்டம் உசிலம்ப ட்டியை சேர்ந்த ராசு மகன் பூம்பாண்டி (42) சத்தி பு.புளியம்பட்டியை சேர்ந்த நடராஜன் மகன் உதயகுமார் (34) ஆகியோரை போலீசார் பிடித்தனர்.
பின்னர் அவர்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 25 மது பாட்டி ல்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விற்பனைக்காக வைத்திருந்த 29 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட பகுதிகளில் குற்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என ஈரோடு டவுன், கோபி போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அரச்சலூர், தாளவாடி, கடம்பூர், சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் அனுமதியின்றி மது விற்று கொண்டிருந்த அவல்பூந்துறை கே.கே.வலசு பகுதியை சேர்ந்த பழனிச்சாமி மகன் சுப்பிரமணி (வயது 72),
தாளவாடி தலமலை பகுதியை சேர்ந்த மஞ்சுநாதன், கடம்பூர் சுஜில்கரை சிவா என்ற கோழிக் கடை சிவா, கடம்பூர் பகுதியை சேர்ந்த வீரப்பா மகன் குருசாமி,
சத்தியமங்கலம் கொட்டு வீரப்பம்பாளையம் சேகர் ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 29 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதைபோல் செம்பட்டி பகுதியில் பொது இடத்தில் மது அருந்திய குற்றத்திற்காக அதே பகுதியை சேர்ந்த குப்புசாமி மகன் மோகன், சுந்தர் மகன் பூபதி ஆகியோர் மீது கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.