என் மலர்
நீங்கள் தேடியது "Caste based census"
- இந்த முடிவு எடுக்கப்பட்டு ஒரு வருடம் ஒரு மாதம் கடந்துவிட்டது.
- ஜார்க்கண்ட் வருவாய், நில சீர்திருத்தங்கள் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் தீபக் பிருவா தெரிவித்தார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் அடுத்த நிதியாண்டில் சாதி கணக்கெடுப்பை நடத்தப்படும் என்று முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான அரசு அறிவித்துள்ளது.
ஜார்க்கண்ட் வருவாய், நில சீர்திருத்தங்கள் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் தீபக் பிருவா இன்று சட்டமன்றத்தில் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

இன்று பட்ஜெட் கூட்டத்தின்போது சட்டமன்றத்தில் பேசிய காங்கிரஸ் உறுப்பினர் பிரதீப் யாதவ், கடந்த வருடம் பிப்ரவரியில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த முடிவு எடுக்கப்பட்டு ஒரு வருடம் ஒரு மாதம் கடந்துவிட்டது. இதுவரை அதில் என்ன பணிகள் செய்யப்பட்டுள்ளன என அரசு விளக்க வேண்டும்.
தெலுங்கானா மாநிலம் நம்மை விட தாமதமாக சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முடிவு செய்தது, அதன் அறிக்கையும் கடந்த பிப்ரவரியில் சமர்ப்பிக்கப்பட்டுவிட்டது என தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த பேசிய அமைச்சர் தீபக் பிருவா, சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதற்கு எங்கள் அரசு முழுமையாக உறுதிபூண்டுள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் பணி மத்திய அரசின் பொறுப்பு. ஆனால் அடுத்த நிதியாண்டில், எங்கள் அரசு சாதி கணக்கெடுப்பு பணியைத் தொடங்கும்.
இதற்கான பொறுப்பு எந்த நிறுவனத்திற்கு வழங்கப்படுவது என்பதை முடிவு செய்வதற்கான செயல்முறை நடந்து வருகிறது. சாதிவாரி கணக்கெடுப்புக்குத் தேவைப்படும் மொத்த ஆட்களின் எண்ணிக்கை, பணியின் அளவுகள் மற்றும் நிதி அம்சத்தை உறுதி செய்வதற்கான பொறுப்பு மாநில பணியாளர் மற்றும் நிர்வாகத் துறையிடம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 4ஆம் தேதி ஒரு நிறுவனத்தை பணியமர்த்த இந்த துறை மூலம் ஒரு அறிவிப்பை வெளியிட்டதாக பிருவா கூறினார்.
- பீகாரில் நடந்து வரும் நிதிஷ்குமார் அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி வருகிறது.
- முதல் கட்ட கணக்கெடுப்பு முடிந்து, தற்போது 2-வது கட்ட பணி நடந்து வருகிறது.
பாட்னா:
பீகார் மாநிலத்தில் நடந்து வரும் நிதிஷ்குமார் அரசு, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி வருகிறது. முதல் கட்ட கணக்கெடுப்பு முடிந்த நிலையில் தற்போது 2-வது கட்ட பணி நடந்து வருகிறது.
இதற்கிடையே, சாதிவாரி கணக்கெடுப்புக்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி, 'சமத்துவத்துக்கான இளைஞர்கள்' என்ற அமைப்பு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. அதில், வீடு வீடாக கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என கூறப்பட்டிருந்தது.
மனுதாரர் தரப்பு வக்கீல் முகுல் ரோத்தகி வாதத்துக்குப் பிறகு மனுவை ஏற்றுக்கொள்ள நீதிபதிகள் மறுத்து விட்டனர். பாட்னா ஐகோர்ட்டில் இடைக்கால மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டனர். அந்த மனுவை தாக்கல் செய்த 3 நாட்களுக்குள் பரிசீலித்து, முடிவு செய்யுமாறு பாட்னா ஐகோர்ட்டுக்கு உத்தரவிட்டனர். இதையடுத்து, பாட்னா ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பீகாரில் நிதிஷ்குமார் அரசு நடத்தி வரும் சாதிவாரி கணக்கெடுப்புக்கு இடைக்கால தடை விதித்து பாட்னா ஐகோர்ட் உத்தரவிட்டது.
- பீகாரில் நடந்து வரும் நிதிஷ்குமார் அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி வருகிறது.
- அரசு நடத்தி வரும் சாதிவாரி கணக்கெடுப்புக்கு பாட்னா ஐகோர்ட் இடைக்கால தடை விதித்தது.
புதுடெல்லி:
பீகார் மாநிலத்தில் நடந்து வரும் நிதிஷ்குமார் அரசு, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி வருகிறது. முதல் கட்ட கணக்கெடுப்பு முடிந்து 2-வது கட்ட பணி நடந்து வருகிறது.
இதற்கிடையே, சாதிவாரி கணக்கெடுப்புக்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி, 'சமத்துவத்துக்கான இளைஞர்கள்' என்ற அமைப்பு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. அதில், வீடு வீடாக கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என கூறப்பட்டிருந்தது. மனுதாரர் தரப்பு வக்கீல் முகுல் ரோஹத்கி வாதத்துக்குப் பிறகு மனுவை ஏற்றுக்கொள்ள நீதிபதிகள் மறுத்து விட்டனர். பாட்னா ஐகோர்ட்டில் இடைக்கால மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டனர். அந்த மனுவை தாக்கல் செய்த 3 நாட்களுக்குள் பரிசீலித்து, முடிவு செய்யுமாறு பாட்னா ஐகோர்ட்டுக்கு உத்தரவிட்டனர்.
இதையடுத்து, பாட்னா ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த பாட்னா ஐகோர்ட், பீகாரில் நிதிஷ்குமார் அரசு நடத்தி வரும் சாதிவாரி கணக்கெடுப்புக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
இதையடுத்து பாட்னா ஐகோர்ட் உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் அரசு தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், அரசியலமைப்பின் 15 மற்றும் 16-வது பிரிவின் கீழ் சாதி அடிப்படையிலான தரவுகளை சேகரிப்பது அரசியலமைப்பு ஆணை என்றும், சாதிவாரி கணக்கெடுப்புக்கு தடை விதிக்கப்பட்டால் முழு பயிற்சியும் பாதிக்கப்படும். எனவே தடையை நீக்க வேண்டும் என கோரப்பட்டது.
இந்நிலையில், சாதிவாரி கணக்கெடுப்புக்கு தடைவிதித்த பாட்னா ஐகோர்ட்டின் உத்தரவுக்கு தடைவிதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் இந்த வ்ழக்கின் விசாரணையை ஜூலை 14ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கொடுத்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
மண்டல் ஆணையப் பரிந்துரைகள் தொடர்பான இந்திரா சகானி வழக்கில் கடந்த 1992-ம் ஆண்டு தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், இடஒதுக்கீட்டின் அளவு 50 சதவீதத்தை தாண்டக்கூடாது என்று கட்டுப்பாடு விதித்தது. அதனால் தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு ஆபத்து ஏற்பட்ட போது, அதை பாதுகாப்பதற்கான சட்டம் இயற்றப்பட்டு 1994-ம் ஆண்டு அரசியலமைப்பு சட்டத்தின் 9-வது அட்டவணையில் சேர்க்கப்பட்டது. அதன் மூலம் 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு ஏற்பட்ட ஆபத்து தடுக்கப்பட்டது. ஆனால் இப்போது அதற்கு மீண்டும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் 69 சதவீத இடஒதுக்கீடு சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் உறுதி செய்யப்படவில்லை என்றும், 1985-ம் ஆண்டில் அமைக்கப்பட்ட அம்பாசங்கர் தலைமையிலான இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் முடிவுகளைக் கொண்டு 69 சதவீத இடஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் கூறி 2012-ம் ஆண்டில் வாய்ஸ் அமைப்பின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கையும் நடத்தாமல் நிலுவையில் வைத்துக்கொண்டே, மருத்துவ படிப்பில் 19 சதவீத கூடுதல் இடங்களை உருவாக்கி அதை ஒரு பிரிவினர் அனுபவித்து வந்தனர். ஆனால், இந்த ஆண்டு 19 சதவீத கூடுதல் இடங்களை ஏற்படுத்தும்படி ஆணையிட மறுத்துவிட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, அப்துல் நஸீர் ஆகியோர் கொண்ட அமர்வு, 69 சதவீத இடஒதுக்கீடு செல்லுமா, செல்லாதா? என்பது குறித்த வழக்கை விரைந்து விசாரித்து தீர்ப்பளிக்கப்போவதாக அறிவித்துள்ளது.
69 சதவீத இடஒதுக்கீட்டை நாம் பாதுகாக்க வேண்டுமானால் தமிழகத்தில் இடஒதுக்கீடு பெறும் சாதிகளின் மக்கள் தொகை தமிழகத்தின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 69 சதவீதத்துக்கும் அதிகம் என்பதை உறுதி செய்யத்தக்க புள்ளி விவரங்களுடன் நிரூபிக்க வேண்டும்.
இந்த சூழலில் தமிழ்நாட்டில் 69 சதவீத இடஒதுக்கீட்டை பாதுகாக்க வேண்டுமானால், அதற்கு ஒரே வழி, சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தி அதில் தமிழகத்தில் இடஒதுக்கீட்டு பிரிவினரின் அளவை உறுதி செய்ய வேண்டும். முந்தைய ஆட்சிகளில் நடத்தப்படாத சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை உங்கள் தலைமையிலான அரசு செய்து சமூகநீதியை பாதுகாக்க வேண்டும்.

மொத்தம் 6 கோடி மக்கள் தொகையும், 1.35 கோடி குடும்பங்களையும் கொண்ட கர்நாடகத்தில் 45 நாட்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டது. ஒவ்வொருவரிடமும் 55 வினாக்கள் எழுப்பப்பட்டன. இந்த பணியில் மொத்தம் 1.60 லட்சம் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் ஈடுபடுத்தப்பட்டனர். இதற்காக ஒட்டுமொத்தமாக ரூ.147 கோடி மட்டும் தான் கர்நாடகம் செலவிட்டது. இதை நாமும் பின்பற்றலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #ADMK #EdappadiPalanisamy #PMK #AnbumaniRamadoss