என் மலர்
நீங்கள் தேடியது "caste census"
- எப்போதெல்லாம் நமக்கு வாய்ப்பு கிடைக்கிறதோ, அப்பொதெல்லாம் நாம் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.
- மைனாரிட்டிகளை இரண்டாம் தர குடிமக்களாக குறைக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது.
பாராளுமன்ற மக்களவையில் அரசியல் சாசனம் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
சாதிவாரி கணக்கெடுப்பு சாதிகளுக்கு இடையிலான இடைவெளியை குறைக்கும். எப்போதெல்லாம் நமக்கு வாய்ப்பு கிடைக்கிறதோ, அப்பொதெல்லாம் நாம் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். மைனாரிட்டிகளை இரண்டாம் தர குடிமக்களாக குறைக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது.
வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களின் வருமானம் எவ்வளவு என்பது மத்திய அரசு வெளியிட வேண்டும். சீனாவின் ஆக்கிரமிப்பு காரணமாக நமுது எல்லை சுருங்கிக் கொண்டு வருகிறது.
இவ்வாறு அகிலேஷ் யாதவ் பேசினார்.
- தெலுங்கானாவில் பட்டியல் சமூகத்தினர் 17.43% பேரும் பழங்குடியினர் 10.45% பேரும் உள்ளனர்.
- தெலுங்கானாவின் மொத்த மக்கள் தொகையில் முற்பட்ட வகுப்பினர் (OC) 13.31% பேர் உள்ளனர்.
பீகார் மற்றும் காங்கிரஸ் ஆளும் கர்நாடக மாநிலத்திற்குப் பிறகு தெலுங்கானாவில் தற்போது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சி அளித்த தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையில் தெலங்கானாவில்கடந்த ஆண்டு நவம்பர் 6ம் தேதி தொடங்கிய கணக்கெடுப்பு 50 நாட்கள் நடைபெற்றது.
தெலுங்கானாவில் 3,54,77,554 பேர் மற்றும் 1,12,15,134 குடும்பங்களிடம் வீடு வீடாகச் சென்று சமூக-பொருளாதார, கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் மற்றும் சாதி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அதன் புள்ளிவிவரங்கள் மாநில அரசால் வெளியிடப்பட்டுள்ளன.
தெலங்கானா மக்கள் தொகையில் மொத்தம் 56.33% பேர் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என சாதிவாரி கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. அவர்களில் முஸ்லிம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 10.08% பேரும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 46.25% பேரும் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு அடுத்தபடியாக பட்டியல் சமூகத்தினர் 17.43% பேரும் பழங்குடியினர் 10.45% பேரும் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தெலுங்கானாவின் மொத்த மக்கள் தொகையில் முற்பட்ட வகுப்பினர் (OC) 13.31% பெரும் முஸ்லிம்களில் முற்பட்ட வகுப்பினர் 2.48% பெரும் உள்ளது.
அம்மாநிலத்தில் மொத்தமாக 50.51% ஆண்கள் மற்றும் 49.45% பெண்கள் உள்ளனர் என்று கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
- எங்களுடைய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை ஏற்றுக் கொண்டுள்ளது.
- எங்களுடைய அரசு நிச்சயமாக அமல்படுத்தும். இதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.
கர்நாடக மாநில அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி முடித்துள்ளது. இந்த சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை அமல்படுத்துவதில் கர்நாடக மாநில அரசு உறுதிப்பூண்டுள்ளது என சித்தராமையா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சித்தராமையா கூறுகைapy "என்னுடைய அரசின் நோக்கத்தை மக்கள் சந்தேகிக்க வேண்டாம். சாதிவாரி கணக்கெடுப்பு அறிவியல் ரீதியாக நடத்தப்பட்டுள்ளது. எங்களுடைய அரசு நிச்சயமாக அமல்படுத்தும். இதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.
எங்களுடைய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை ஏற்றுக் கொண்டுள்ளது. வரும் நாட்களில் அமல்படுத்தப்படும்" என்றார்.
2015-ம் ஆண்டு முந்தைய சித்தராமையா தலைமையிலான அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த கமிட்டி அமைத்தது. இந்த கமிட்டி பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவர் ஹெச். கந்தராஜு தலைமையில் அமைக்கப்ப்டது. சுமார் 169 கோடி ரூபாய் செலவில் கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டது. ஆனால் அந்த அறிக்கை கிடப்பில் போடப்பட்டது.
2020-ல் பாஜக அரசு ஜெயபிரகாஷ் ஹெக்டேவை தலைவரான நியமித்தது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 29-ந்தேதி ஹெக்டே இறுதி அறிக்கையை சித்தராமையா அரசிடம் தாக்கல் செய்தார்.