என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Cauvery Water Management"
- காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் 26வது கூட்டம் இன்று தொடங்கியது.
- கர்நாடக அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லை என கர்நாடகா வாதம்.
தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் இடையே காவிரி நதி நீர் பங்கீடு குறித்து நீண்டகாலமாக சிக்கல் நீடித்து வருகிறது.
கடந்த மாதம் நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு கர்நாடகா, வினாடிக்கு 3000 கன அடி நீர் திறந்து விட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டது. இதனையடுத்து, கடந்த 10 நாட்களுக்கும் மேலாக 3 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இந்நிலையில் டெல்லியில் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் 26வது கூட்டம் இன்று தொடங்கியது. ஆணையத்தின் தலைவர் எஸ்.கே. ஹல்தார் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. காணொலி வாயிலாக நடைபெற்ற இந்த கூட்டத்தில் அக்டோபர் 16-ம் தேதி காலை 8 மணி முதல் அக்டோபர் 31-ம் தேதி வரை வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீரை காவேரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு திறந்துவிட ஒழுங்காற்றுக் குழு அதிகாரிகள் கர்நாடக அரசை கேட்டுக் கொண்டனர்.
இந்த நிலையில், கர்நாடக அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லாததால், இந்த உத்தரவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடகா கோரிக்கை வைக்கப்பட்டு இருக்கிறது.
இது குறித்து கருத்து தெரிவித்த கர்நாடக நீர்வளத்துறை செயலாளர் ராகேஷ் சிங், "நீர் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு 3 ஆயிரம் கனஅடி நீர் திறப்பது குறித்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். மேகதாது அணை திட்டத்தை செயல்படுத்துவது மட்டுமே இதுபோன்ற நீர் பற்றாக்குறை காலங்களில் தமிழ்நாட்டுக்கு உரிய நீரை வழங்க தீர்வாக அமையும்," என்று தெரிவித்து உள்ளார்.
- டெல்லியில் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் 26வது கூட்டம் கூடியது.
- கேரளா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.
தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் இடையே காவிரி நதி நீர் பங்கீடு குறித்து நீண்டகாலமாக சிக்கல் நீடித்து வருகிறது.
கடந்த மாதம் நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு கர்நாடகா, வினாடிக்கு 3000 கன அடி நீர் திறந்து விட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டது. இதனையடுத்து, கடந்த 10 நாட்களுக்கும் மேலாக 3 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இந்நிலையில் டெல்லியில் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் 26வது கூட்டம் இன்று தொடங்கியது. ஆணையத்தின் தலைவர் எஸ்.கே. ஹல்தார் தலைமையில் கூட்டம் நடைபெற்று வருகிறது
இந்த கூட்டத்தில், கேரளா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.
மேலும், இந்த கூட்டத்தில் தமிழக அரசின் சார்பாக நீர்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
- கேரளா, குடகு மாவட்டத்தில் மிக குறைந்த அளவே மழை பெய்து உள்ளது
- கர்நாடக அணைகளில் போதிய அளவு தண்ணீர் இல்லை.
காவிரி நீர் பிரச்சினை விசுவரூபம் எடுத்துள்ள நிலையில் கர்நாடக முதல்-மந்திரி சித்தரா மையா இன்று பெங்களூருவில் நிருபர்களிடம் கூறியதாவது:-
கேரளா, குடகு மாவட்டத்தில் மிக குறைந்த அளவே மழை பெய்து உள்ளது. இதனால் காவிரியில் நீர்வரத்து குறைந்ததால் கர்நாடக அணைகளில் போதிய அளவு தண்ணீர் இல்லை. இதன் காரணமாக காவிரியில் தமிழகத்துக்கு கூடுதலாக தண்ணீர் திறக்க முடியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
காவிரி நதி நீரை பங்கீடு செய்து கொள்வதற்காக புதிய செயல் திட்டம் ஒன்றை உருவாக்க சுப்ரீம் கோர்ட்டு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. அதை ஏற்று மத்திய அரசு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அமைத்து, புதிய வரைவு செயல் திட்டத்தை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது. அதை தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களும் ஏற்றுக் கொண்டன.
இதையடுத்து காவிரி மேலாண்மை ஆணைய அலுவலகம் டெல்லியிலும், காவிரி ஒழுங்காற்று ஆணையத்தின் அலுவலகம் பெங்களூரிலும் செயல்படுகிறது. மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவரான மசூத் உசைன், காவிரி மேலாண்மை ஆணையத்தின் இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் ஆணையத்தின் பணிகள் நடைபெறுகின்றன.
“காவிரி மேலாண்மை ஆணையத்தின் இடைக்கால தலைவரான மசூத் உசேன் பாரபட்சமாக செயல்படுகிறார். எனவே, அவர் ஆணைய தலைவராக நீடிப்பது பொருத்தமற்றது. மசூத் உசேன் இரட்டைப் பதவி வகிப்பதால் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு முழுநேர தலைவரை நியமிக்க மத்திய நீர்வளத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்” என தமிழக அரசு கூறியுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மசூத் உசேனை தலைவராகக் கொண்ட மத்திய நீர்வள ஆணையம், மேகதாது அணை கட்டுவதற்கான வரைவுத் திட்டத்திற்கு அனுமதி அளித்தது. ஆனால் அவரது தலைமையில் இயங்கும் காவிரி ஆணையமோ, அணை கட்ட அனுமதிக்க முடியாது என கூறியது. இவ்வாறு ஒரே தலைவரின் கீழ் இரட்டை நிலைப்பாடு எடுப்பதால் காவிரி ஆணையத்திற்கு நிரந்தர தலைவரை நியமிக்கும்படி தமிழக அரசு வலியுறுத்தி உள்ளது. #CauveryManagementAuthority #CauveryIssue #CMAChairman
கேரளாவை சேர்ந்த ரஸ்ஸல் ராய் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், ‘முல்லைப்பெரியாறு அணையின் ஆயுட்காலத்தை நிர்ணயிக்கும் வகையில் சர்வதேச ஆணையம் நியமிக்க வேண்டும், அந்த அணை காலாவதியாகும் பட்சத்தில் எந்த மாநிலம் புதிய அணையை கட்ட வேண்டும் என்பது குறித்தும், அணை உடைந்தால் அது தொடர்பான இழப்பீட்டை எந்த மாநில அரசு வழங்க வேண்டும் என்பது குறித்தும் முடிவு செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, கடந்த ஜனவரி மாதம் 11-ந் தேதி முல்லைப்பெரியாறு அணைப்பகுதியில் பேரிடர் மேலாண்மையை உறுதி செய்யும் வகையிலும் இயற்கை பேரிடரின்போது உரிய நடவடிக்கை எடுக்கும் வகையிலும் ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது.
இதனையடுத்து மத்திய நீர்வளத்துறை அமைச்சக செயலாளர் தலைமையில் அதே அமைச்சகத்தின் துணைச்செயலாளரை ஒருங்கிணைப்பாளராக கொண்டு துணைக்குழு அமைக்கப்பட்டது.
இதில் மத்திய பேரிடர் மேலாண்மைத்துறை, சுற்றுச்சூழல் துறை, மின்துறை, தொலைதொடர்பு துறை, வேளாண்மை துறை, உள்துறை அமைச்சகம் மற்றும் தமிழக, கேரள அரசு அதிகாரிகள் இடம்பெற்றனர்.
இந்த துணைக்குழுவின் கூட்டம் நேற்று டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சக செயலாளர் யு.பி.சிங் தலைமையில் நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சகம் உள்ளிட்ட அமைச்சகங்களின் மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
தமிழக அரசு சார்பில் பொதுப்பணித்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர், மதுரை முல்லைப்பெரியாறு அணை செயற்பொறியாளர் டி.சுப்பிரமணியம் ஆகியோரும், கேரள அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் முல்லைப்பெரியாறு அணையை இயற்கை பேரிடரின்போது பாதுகாக்கும் வகையில் செயல்திட்டம் வகுக்க துணைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்