என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
தண்ணீர் திறக்கனுமா? உத்தரவை மறுபரிசீலனை செய்யுங்க.. கர்நாடகா பிடிவாதம்!
- காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் 26வது கூட்டம் இன்று தொடங்கியது.
- கர்நாடக அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லை என கர்நாடகா வாதம்.
தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் இடையே காவிரி நதி நீர் பங்கீடு குறித்து நீண்டகாலமாக சிக்கல் நீடித்து வருகிறது.
கடந்த மாதம் நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு கர்நாடகா, வினாடிக்கு 3000 கன அடி நீர் திறந்து விட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டது. இதனையடுத்து, கடந்த 10 நாட்களுக்கும் மேலாக 3 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இந்நிலையில் டெல்லியில் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் 26வது கூட்டம் இன்று தொடங்கியது. ஆணையத்தின் தலைவர் எஸ்.கே. ஹல்தார் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. காணொலி வாயிலாக நடைபெற்ற இந்த கூட்டத்தில் அக்டோபர் 16-ம் தேதி காலை 8 மணி முதல் அக்டோபர் 31-ம் தேதி வரை வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீரை காவேரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு திறந்துவிட ஒழுங்காற்றுக் குழு அதிகாரிகள் கர்நாடக அரசை கேட்டுக் கொண்டனர்.
இந்த நிலையில், கர்நாடக அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லாததால், இந்த உத்தரவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடகா கோரிக்கை வைக்கப்பட்டு இருக்கிறது.
இது குறித்து கருத்து தெரிவித்த கர்நாடக நீர்வளத்துறை செயலாளர் ராகேஷ் சிங், "நீர் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு 3 ஆயிரம் கனஅடி நீர் திறப்பது குறித்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். மேகதாது அணை திட்டத்தை செயல்படுத்துவது மட்டுமே இதுபோன்ற நீர் பற்றாக்குறை காலங்களில் தமிழ்நாட்டுக்கு உரிய நீரை வழங்க தீர்வாக அமையும்," என்று தெரிவித்து உள்ளார்.