search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CBI raids"

    • டெல்லி கலால் கொள்கை முழுக்க முழுக்க வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுத்தப்பட்டதாக சிசோடியா தகவல்
    • 2024 மக்களவைத் தேர்தலானது கெஜ்ரிவாலுக்கும் மோடிக்கும் இடையிலான போட்டியாக இருக்கும்.

    புதுடெல்லி:

    மதுபான உரிமம் வழங்குவதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் வீடு உள்பட ஏராளமான இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். டெல்லி அரசின் புதிய கலால் கொள்கையை அமல்படுத்தியதில் முறைகேடு நடந்திருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில், துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 15 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. துணை முதல் மந்திரி வீட்டில் சோதனை நடத்தப்பட்டதற்கு முதல் மந்திரி கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த மணீஷ் சிசோடியா, ஓரிரு நாட்களில் தான் கைது செய்யப்படலாம் என்றும், இதற்காக பயப்பட மாட்டோம் என்றும் கூறினார்.

    மேலும் அவர் கூறியதாவது:-

    டெல்லி கலால் கொள்கை முழுக்க முழுக்க வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுத்தப்பட்டது. அதில் எந்த ஊழலும் இல்லை. எனது குடும்பத்தினருக்கு எந்த தொந்தரவும் கொடுக்காத சிபிஐக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அவர்கள் நல்ல அதிகாரிகள், ஆனால் ரெய்டு நடத்தும்படி அவர்களுக்கு மேலிடத்திலிருந்து உத்தரவு வந்துள்ளது.

    அவர்களின் பிரச்சனை கலால் கொள்கை ஊழல் பற்றியது அல்ல. கலால் கொள்கையில் எந்த மோசடி நடந்தாலும் அவர்கள் கவலைப்படுவதில்லை. அவர்கள் கெஜ்ரிவாலைக் கண்டு பயப்படுகிறார்கள். குறிப்பாக, பஞ்சாப் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்ற பிறகு இந்த கவலை அதிகரித்துள்ளது. எனவே, எனது வீடு, அலுவலகத்தில் நடந்த சோதனை மற்றும் எனக்கு எதிரான நடவடிக்கைகள் அனைத்தும், அரவிந்த் கெஜ்ரிவாலை தடுத்தவே நடைபெறுகின்றன.

    கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் மேற்கொள்ளப்படும் சிறந்த பணிகளை தடுத்து நிறுத்த வேண்டும். முதலில் சுகாதாரத்துறை பொறுப்பில் இருந்த சத்யேந்தர் ஜெயினை கைது செய்தனர், அடுத்த ஓரிரு நாட்களில் நானும் கைது செய்யப்படுவேன். ஆனால் நாங்கள் பயப்படமாட்டோம்.

    கெஜ்ரிவாலுக்கும் பிரதமர் மோடிக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், கெஜ்ரிவால் ஏழை மக்களைப் பற்றி சிந்திக்கிறார், பிரதமர் மோடி தனது தேர்ந்தெடுக்கப்பட்ட நண்பர்களைப் பற்றி சிந்திக்கிறார். 2024 மக்களவைத் தேர்தலானது அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான போட்டியாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழகத்தில் எத்தனை சிபிஐ சோதனை நடைபெற்றாலும் அதிமுக யாரிடமும் பணியாது என்று துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார். #DeputySpeaker
    கோவை:

    கோவையில் இன்று அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், கட்சி வளர்ச்சி மற்றும் செயல்பாடுகள் குறித்து பேசினார்.

    குட்கா ஊழல் தொடர்பாக சமீபத்தில் நடந்த சிபிஐ சோதனைகள் பற்றி பேசிய அவர், தமிழகத்தில் எத்தனை சிபிஐ சோதனைகள் நடைபெற்றாலும் அதிமுக யாரிடமும் பணியாது என தெரிவித்தார்.



    ‘அச்சுறுத்தல்களுக்கு நாங்கள் பயப்பட மாட்டோம். கட்சிக்கும் ஆட்சிக்கும் உறுதுணையாக இருப்போம். ஜெயலலிதாவால் பத்தாண்டு கட்சியில் இருந்து நீக்கி வைக்கப்பட்ட தினகரன் ஆட்சியைப் பிடிக்க முயல்கிறார். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக முதலமைச்சர் முடிவு செய்வார்’ என அமைச்சர் வேலுமணி தெரிவித்தார். #DeputySpeaker
    ×