என் மலர்
நீங்கள் தேடியது "Ccamp"
- மாற்றுத்திறனாளிகளிடமிருந்து புதிய மனுக்கள் பெறப்பட்டு ஊனமுற்ற அளவீடு செய்து ஆய்வு செய்யப்பட்டது.
- தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.
கபிஸ்தலம்:
கபிஸ்தலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவுறுத்தலின்படி மாற்றுத்திறனாளி களுக்கா ன சிறப்பு முகாம் வட்டார மருத்துவ அலுவலர் தீபக் தலைமையில் நடைபெற்றது. மருத்துவர்கள் சரவணன், ராஜ்குமார், சித்ராதேவி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக அனைவரையும்வட்டார சுகாதார மேற்பார்வை யாளர் பாஸ்கரன்வரவேற்று பேசினார்.
முகாமில் சிறப்பு விருந்தினர்களாக தனி வட்டாட்சியர் திருநாசுஜாதா, ஒன்றிய குழு தலைவர் சுமதி கண்ணதாசன், ஊராட்சி மன்ற தலைவர் சுமதி குணசேகரன், ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ், மற்றும் தஞ்சை மாற்று திறனாளிகள் குழுவினர் ஆகியோர் கலந்து கொண்டனர். முகாமில் மாற்றுத் திறனாளிகளிடம் புதிய மனுக்கள் பெறப்பட்டு ஊனமுற்ற அளவீடு செய்து ஆய்வு செய்யப்பட்டது. தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்க ப்பட்டது. முகாமில் கபிஸ்தலம் அரசுஆரம்ப சுகாதார நிலைய மருத்து வர்கள், பணியாளர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.