என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
நீங்கள் தேடியது "Cell phone stolen"
- ஹிமான்ஷி காபா என்ற பெண் தனது சமூக வலைத்தளத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார்.
- செல்போன் திருடப்பட்ட சம்பவத்தில் போலீசை அணுகியதைவிட திருடர்கள் எவ்வளவோ மேல் என்று ஆதங்கம்.
அரியானா மாநிலத்தில் பெண் ஒருவர் தனது சகோதரியின் செல்போன் திருடப்பட்ட சம்பவத்தில் போலீசை அணுகியதைவிட திருடர்கள் எவ்வளவோ மேல் என்று தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார். ஹிமான்ஷி காபா என்ற பெண் தனது சமூக வலைத்தளத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், " நானும் எனது சகோதரியும் சந்தைக்கு சென்றிருந்தோம். அப்போது எனத சகோதரியின் செல்போன் திருடப்பட்டது.
இதுகுறித்து போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தோம். ஆனால், போலீசார் செல்போன் எடுத்தவனை டிராக் செய்யாமல், எங்களையே கேள்வி கேட்டனர்.
"ஒருவர் எப்படி தங்கள் போனை இழக்க முடியும்? உங்கள் போனை தொலைத்தபோது ஏற்படும் விளைவுகளைப் பற்றி நீங்கள் யோசித்திருக்க வேண்டும், இப்போது ஏன் எங்களிடம் வருகிறீர்கள்? இதில் நாங்கள் என்ன செய்ய முடியும், நீங்கள் எச்சரிக்கையாக இருந்திருக்க வேண்டும்?" என்று தொடர்ச்சியாக கேள்வி கேட்டனர்.
"நாங்கள் போனைக் கண்காணித்து வருவதாகவும், அது அருகில் இருப்பதாகவும் அவர்களிடம் தெரிவித்தபோது, 'அப்படியானால் நீங்களே போய் அதை கண்டுபிடித்துக் கொள்ளுங்கள்' என்று அதிகாரி பதிலளித்தார்" என்றார்.
பின்னர், "அதிர்ஷ்டவசமாக, திருடன் மிகவும் ஒத்துழைப்பு அளித்து, எங்களைத் தொடர்பு கொண்டு, சிறிது பணத்திற்கு ஈடாக தொலைபேசியைத் திருப்பித் தருவதாகக் கூறினார்.
திருடனுக்கும் எங்களுக்கும் இடையே மிகவும் சுமூகமான ஒருங்கிணைப்பு இருந்தது, இறுதியாக, எங்கள் தொலைபேசி திரும்பப் பெறப்பட்டது," என்று காபா கூறினார்.
- மோட்டார் சைக்கிளில் வந்த நபர் சரண்யாதேவி கையில் வைத்திருந்த செல்போனை பறித்து சென்றார்.
- புகாரின்பேரில் அவினாசி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அவினாசி:
திருப்பூர் முத்தனம்பாளையத்தை சேர்ந்த மணிமுத்து மனைவி சரண்யா தேவி(வயது 42) .இவர் நேற்று பிற்பகல் அவினாசி சேவூர் ரோட்டில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது இவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் சரண்யாதேவி கையில் வைத்திருந்த செல்போனை பறித்து சென்றார்.
பதறிப்போன அவர் திருடன், திருடன் என்று சத்தம் போட்டதால் அப்பகுதியில் இருந்த சிலர் மோட்டார் சைக்கிளில் சென்ற நபரை பிடிக்க முயன்றனர். இருப்பினும் அந்த நபர் மின்னல் வேகத்தில் தப்பி சென்றார். இதுகுறித்த புகாரின்பேரில் அவினாசி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- நித்தியநாதன் நேற்று இரவு வழக்கம்போல் பணியை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் ஓபிபேர் கிராமத்திற்கு சென்றுள்ளார் .
- 2 மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி விட்டு நித்திய நாதனிடம் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.
விழுப்புரம்:
மரக்காணம் அருகே ஓமிபேர் கிராமத்தைச் சேர்ந்தவர் நித்திய நாதன் (வயது23). இவர் புதுவை மாநிலம் காலாப்பட்டு பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் பணியை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் ஓபிபேர் கிராமத்திற்கு சென்றுள்ளார் .
அப்போது இவரது கிராமத்தின் அருகில் உள்ள கோட்டி குப்பம் சாலையில் 2 மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி விட்டு நித்திய நாதனிடம் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். நித்தியநாதன் மரக்காணம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். மரக்காணம் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்போனை பறித்து சென்ற மர்ம நபர்கள் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தனது மோட்டார் சைக்கிளில் ரூ.2 லட்சம் மற்றும் 2 செல்போன்களை வைத்து சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது பணம் மற்றும் செல்போன் திருடுபோயிருந்தது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்
தேனி:
தேனி அருகே கோடாங்கிபட்டியை சேர்ந்தவர் சரண்யா (வயது32). இவர் புதிதாக நாட்டுச்சர்க்கரை தொழிற்சாலை திறக்க உள்ளதால் அதற்கு தேவையான பொருட்களை வாங்க பழனிசெட்டிபட்டி வந்தார். அங்கு தனது மோட்டார் சைக்கிளில் ரூ.2 லட்சம் மற்றும் 2 செல்போன்களை வைத்து சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது பணம் மற்றும் செல்போன் திருடுபோயிருந்தது.
இது குறித்து பழனிசெட்டிபட்டி போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
பெரியகுளம் அருகே தாமரைக்குளத்தை சேர்ந்தவர் குணசீலன் (34). இவர் மதுரையில் உள்ள டிராவல்ஸ் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். அவரது உறவினர் மோட்டார் சைக்கிளை பெற்றுக் கொண்டு தாமரைக்குளம் வந்தார்.
சம்பவத்தன்று வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இது குறித்து தென்கரை போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்
- கத்தியை காட்டி மிரட்டி கைவரிசை
- திருவண்ணாமலை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பு
கீழ்பென்னாத்தூர்:
திருவண்ணாமலை வ.உ.சிநகர் பகுதியில் வசிப்பவர் ரத்னசிங். எலக்ட்ரீசியன். இவரது மகன்கள் சதீஷ்சிங் (வயது 23), சந்து ருசிங் (21) ஆகியோர் சென்னையில் உள்ள ஐ.டி.நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்.
தீபாவளி பண்டிகைக்காக ஊருக்கு வந்த இவர்கள் நேற்று முன்தினம் இரவு சென்னைக்கு மோட்டார்சைக்கிளில் புறப் பட்டனர். நள்ளிரவு 12 மணியளவில் கீழ்பென்னாத்தூர் இந் திரா நகர் பை-பாஸ் சாலை பகுதியில் சென்றபோது எதிரில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் இவர்களை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி 2 செல்போன்களை பறித்துக் கொண்டு தப்பி விட்டனர்.
இது குறித்து கீழ்பென்னாத்தூர் போலீஸ் நிலையத்தில் சதீஷ்சிங் மற்றும் சத்ருசிங் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விசாரித்ததில் கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள மேக்களூரை சேர்ந்த ராஜேஷ்குமார் (24), அங்குள்ள சமத் துவபுரத்தில் வசிக்கும் தியாகராஜன் (20), சதீஷ்குமார் (19) ஆகியோர் இவர்களிடம் செல்ாேன்களை பித்து விட்டு தப் பியது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் 3 பேரையும் பிடித்து விசாரித்ததில் சதீஷ்சிங் மற்றும் சத்ருசிங்கிடம் செல்போன்களை பறித்துக் கொண்டதை ஒப்புக்கொண்டனர். 3 பேரையும் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி, சப்-இன்ஸ்பெக்டர் சக்கர வர்த்தி ஆகியோர் கைது செய்து செல்போன்களை மீட்டனர். பின்னர் 3 பேரையும் திருவண்ணாமலை கோர்ட்டில் ஆஜர்ப டுத்தி சிறைக்கு அனுப்பி வைத்தனர்.