search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CentralGovernment"

    • மத்திய அரசின் பட்ஜெட்டிலிருந்து சென்னை மெட்ரோ ரெயில் லிமிடெட்டுக்கு நேரடியாக நிதி வழங்கப்படும்.
    • வெளிநாட்டு கடன்களை மாநில அரசுக்கானதாக இல்லாமல் மத்திய அரசுக்கானதாக கருதப்படும்.

    சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு 65 சதவீத தொகையை மத்திய அரசு வழங்கும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மேலும் கூறியதாவது:-

    ரூ.63246 கோடி மதிப்பீட்டுச் செலவில் 65 தவீதத்தை மத்திய அரசே வழங்கும்.

    மேலும், இதுவரை 90 சதவீத அளவிற்கு மாநில அரசின் நிதியாக கொண்டு மாநில அரசின் திட்டமாக செயல்படுத்தப்பட்டது.

    தற்போது, மத்திய அரசின் திட்டமானதால் ரூ.33,593 கோடி முழுக் கடனும், சபங்கு மற்றும் சார்நிலைக் கடனான ரூ.7,425 கோடியும் அடங்கும்.

    எஞ்சிய 35 சதவீத மதிப்பீட்டுச் செலவுக்கு மாநில அரசு நிதியுதவி செய்யும்.

    மத்திய அரசின் பட்ஜெட்டிலிருந்து சென்னை மெட்ரோ ரெயில் லிமிடெட்டுக்கு நேரடியாக நிதி வழங்கப்படும்.

    வெளிநாட்டு கடன்களை மாநில அரசுக்கானதாக இல்லாமல் மத்திய அரசுக்கானதாக கருதப்படும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • மத்திய அரசின் பொது சேவை மையங்களில் (காமன் சர்வீஸ் சென்டர்) மத்திய அரசு திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்தன.
    • விவசாயிகள், பொதுமக்கள் உள்ளூரில் இருக்கும் தொடக்க கூட்டுறவு வங்கிகள் மூலமே மத்திய அரசின் திட்டங்களை பெற முடியும்.

    தாராபுரம்:

    தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் இ-சேவை மையங்கள் செயல்படுகின்றன.இந்த மையங்களில் இதுவரை, மாநில அரசு நலத்திட்டங்களுக்கும், சான்றிதழ்கள் பெறவும் மட்டுமே விண்ணப்பம் பெறப்பட்டு வந்தது. மத்திய அரசின் பொது சேவை மையங்களில் (காமன் சர்வீஸ் சென்டர்) மத்திய அரசு திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்தன.

    தற்போது நாடு முழுவதும் உள்ள தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் மத்திய அரசு நலத்திட்டங்களையும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.அதன்படி, மத்திய அரசின் பொது சேவை மையத்தின் லாகின் அனுமதி, தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க இ-சேவை மையங்களுக்கு வழங்கப்படுகிறது.

    இதன் மூலம் விவசாயிகள், பொதுமக்கள் உள்ளூரில் இருக்கும் தொடக்க கூட்டுறவு வங்கிகள் மூலமே மத்திய அரசின் திட்டங்களை பெற முடியும்.இது மட்டுமின்றி, தொடக்க கூட்டுறவு வங்கிகள், சமையல் கியாஸ் வினியோக உரிமை, பெட்ரோல், டீசல் வினியோக உரிமை உட்பட, 25 விதமான வணிக செயல்பாடுகளில் ஈடுபடவும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட உள்ளது.

    வரும் நாட்களில் அனைத்து தொடக்க கூட்டுறவு வங்கிகளிலும், மத்திய அரசு திட்டங்களுக்கு விண்ணப்பிக்கும் சேவை தொடங்கும் என்று பொது சேவை மைய நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    அனைத்து கம்ப்யூட்டர்களையும் கண்காணிக்க 10 விசாரணை அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்கிய மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. #SupremeCourt #ManoharLalSharma #CentralGovernment
    புதுடெல்லி:

    அனைத்து கம்ப்யூட்டர்களையும் கண்காணிக்க 10 விசாரணை அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்கிய மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு 6 வாரங்களுக்குள் மத்திய அரசு பதில் அளிக்க கோர்ட்டு உத்தரவிட்டது.

    மத்திய அரசு கடந்த மாதம் 20-ந் தேதி ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில், அனைத்து கம்ப்யூட்டர்களையும் இடைமறிக்கவும், கண்காணிக்கவும், ஆய்வு செய்யவும் சி.பி.ஐ., நுண்ணறிவு பிரிவு, போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு, அமலாக்கத்துறை, வருவாய் புலனாய்வு பிரிவு உள்பட 10 அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்கப்படுவதாக கூறப்பட்டு இருந்தது.



    தகவல் தொழில்நுட்ப சட்டப்படி இந்த அதிகாரம் வழங்கப்படுவதாகவும் கூறப்பட்டிருந்தது. இந்த அறிவிப்புக்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்தியாவை கண்காணிப்பு நாடாக மாற்ற மத்திய அரசு முயற்சிப்பதாக குற்றம்சாட்டின.

    ஆனால் மத்திய அரசு, அனைத்து கம்ப்யூட்டர் தகவல்களையும் இடைமறிக்கவும், கண்காணிக்கவும் தேவையான விதிகள் 2009-ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் தான் உருவாக்கப்பட்டது. இந்த நடவடிக்கையில் யாரெல்லாம் ஈடுபடலாம் என்பதற்கான அறிவிப்பு தான் இந்த புதிய உத்தரவு என்று கூறியது.

    கம்ப்யூட்டர்களை கண்காணிக்கும் மத்திய அரசின் அறிவிப்பை எதிர்த்து மனோகர்லால் சர்மா என்ற வக்கீல் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.

    அந்த மனுவில், இந்த அறிவிப்பு சட்டவிரோதமானது, அரசியல்சாசனத்துக்கு முரணானது, சட்டத்தின் வரம்புக்கு அப்பாற்பட்டது. தற்போது ஆட்சியில் உள்ள அரசியல் கட்சி தனது லாபத்துக்காக இதனை பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. இந்த அறிவிப்பின்படி தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்கீழ் யார் மீதும் விசாரணை நடத்தவும், குற்ற நடவடிக்கை எடுக்கவும் அந்த 10 அமைப்புகளுக்கும் தடைவிதிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

    இந்த மனு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனு மீது விசாரணை நடத்திய நீதிபதிகள், இந்த மனுவுக்கு 6 வாரங்களுக்குள் பதில் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். #SupremeCourt #ManoharLalSharma #CentralGovernment
    பெயர் சொல்லாமல் நன்கொடையாளர்கள் கட்சிகளுக்கு வழங்குகிற நன்கொடை வரம்பை ரூ.2 ஆயிரம் என நிர்ணயிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் தேர்தல் கமிஷன் வலியுறுத்தி உள்ளது. #DonationLimit #ElectionCommission #CentralGovernment
    புதுடெல்லி:

    அரசியல் கட்சிகளுக்கு தனி நபர்கள், நிறுவனங்கள் நன்கொடை வழங்குவது உண்டு. பல அரசியல் கட்சிகளுக்கு இந்த நன்கொடைதான் தேர்தல் நிதியாக பயன்படுகிறது.

    நமது நாட்டில் அரசியல் கட்சிகளுக்கு தனிப்பட்ட நபர்களும், நிறுவனங்களும் தங்கள் பெயரைக் கூறாமல் நன்கொடை வழங்குவதும் உண்டு.



    இப்படி பெயர் கூறாமல் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை தரக்கூடாது என அரசியல் சட்டம் கூறவில்லை. பிற சட்டங்களும்கூட இத்தகைய நன்கொடையை தடை செய்யவில்லை.

    இருப்பினும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு ‘29-சி’ ஒரு கடிவாளம் போட்டுள்ளது. அதன்படி, ரூ.20 ஆயிரத்துக்கு அதிகமாக இத்தகைய நன்கொடையை பெறுகிறபோது கட்சிகளின் பொருளாளர் இது குறித்து ஒவ்வொரு நிதி ஆண்டிலும் அறிக்கை அளிக்க வேண்டும்.

    இந்த நிலையில், மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் கடந்த ஆண்டு ஒரு கடிதம் எழுதியது. அதில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு ‘29-சி’யில் திருத்தம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியது.

    மேலும் அதில், அரசியல் கட்சிகளுக்கு ரொக்கமாக அளிக்கிற நன்கொடைக்கு ரூ.2 ஆயிரம் என்ற உச்ச வரம்பை நிர்ணயிக்க வேண்டும்; பெயர் கூறாமல் வழங்குகிற நன்கொடைக்கும் ரூ.2 ஆயிரம் என்ற அளவில் உச்ச வரம்பு நிர்ணயிக்க வேண்டும் என்று கூறி இருந்தது.

    இதில் அரசியல் கட்சிகளுக்கு ரொக்கமாக அளிக்கிற நன்கொடைக்கு ரூ.2 ஆயிரம் என்ற உச்ச வரம்பை நிர்ணயிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது. அதை நிதி சட்டத்திலும் சேர்த்து விட்டது.

    ஆனால் பெயர் கூறாமல் வழங்குகிற நன்கொடைக்கும் ரூ.2 ஆயிரம் என்ற அளவில் உச்ச வரம்பு நிர்ணயிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படாமல் இன்னும் நிலுவையில்தான் உள்ளது.

    இதை சுட்டிக்காட்டியும், பெயர் கூறாமல் வருகிற நன்கொடைக்கு ரூ.2 ஆயிரம் என உச்சவரம்பினை நிர்ணயிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், மத்திய அரசின் சட்ட அமைச்சகத்துக்கு தேர்தல் கமிஷன் மீண்டும் ஒரு கடிதம் எழுதி உள்ளது.  #DonationLimit #ElectionCommission #CentralGovernment 
    புதுவையில் வருகிற 15-ந் தேதி மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்ட பேரணி நடைபெறும் என்று அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். #congress

    புதுச்சேரி:

    புதுவை மாநில காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    4½ ஆண்டுகளாக இந்தியாவை ஆட்சி செய்து கொண்டிருக்கும் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு கொடுத்த வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டு நாட்டு மக்களை இன்றுவரை ஏமாற்றி வருகிறது. திட்டமிட்டு ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைத்து வருகிறது.

    ஊழலை ஒழிப்பேன் என்று ஆட்சிக்கு வந்த மோடி விஞ்ஞான பூர்வமாக ஊழல் செய்வதில் யாருக்கும் சளைத்தவர் இல்லை என்பதை நிரூபித்து வருகிறார். நாட்டின் பாதுகாப்புக்காக ரபேல் போர் விமானம் வாங்க மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு வெளிப்படை தன்மையுடன் பிரான்ஸ் நாட்டுடன் ஒப்பந்தம் செய்தது.

    ஆனால், நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு தங்களின் சுய லாபத்திற்காக ஒப்பந்தங்களை மாற்றி ரபேல் போர் விமானங்களை அதிக விலைக்கு வாங்க தன்னிச்சையாக முடி வெடுத்தது. இதன் மூலம் 41,000 கோடி இமாலய ஊழல் செய்து லஞ்சம் பெற்று மோடி நாட்டிற்கு தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளார்.

    பொய்யையும் புரட்டையும் கூறி மக்களை ஏமாற்றி மீண்டும் ஆட்சிக்கு வந்து விடலாம் என்று பா.ஜ.க.வினர் பகல் கனவு காண்கிறார்கள். இவர்களின் போலி முகத்திரையை கிழித்து எறியவும், மோடி செய்த இமாலய ஊழலை மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்தவும் வருகிற 15-ந்தேதி (சனிக்கிழமை) காலை 9 மணியளவில் புதுவை வெங்கட சுப்பா ரெட்டியார் சிலையில் இருந்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரை புதுவை பிரதேச காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்ட பேரணி நடைபெற இருக்கிறது.

    அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொது செயலாளரும் புதுவை மாநில பொறுப்பாளருமான முகுல் வாஸ்னிக் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்ட பேரணியை தொடங்கி வைக்கிறார்.

    மாலை 4 மணியளவில் காரைக்கால் மாவட்ட செயல்வீரர் கூட்டதிலும் முகுல் வாஸ்னிக் கலந்து கொள்கிறார்.

    நாட்டின் வளர்ச்சியையும் அனைத்து தரப்பு மக்களின் வாழ்க்கையையும் சீரழித்து கொண்டிருக்கும் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசுக்கு பாடம் புகட்ட காங்கிரஸ் பேரியக்க வளர்ச்சிக்கு களைப் பறியாமல் உழைத்துக் கொண்டிருக்கும் மாநில துணை தலைவர்கள், பொதுச்செயலாளர்கள், செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள், பி.சி.சி. உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள், பிரிவு தலைவர்கள், மாவட்ட தலைவர்கள், வட்டார காங்கிரஸ் தலைவர்கள், இளைஞர் காங்கிரஸ், மகளிர் காங்கிரஸ், மாணவர் காங்கிரஸ், சேவாதளம்.

    மிகவும் பிற்படுத்தப்பட் டோர் பிரிவு, தாழ்த்தப் பட்டோர் பிரிவு, சிறு பான்மையினர் பிரிவு, வக்கீல் பிரிவு, விவசாய பிரிவு, ஊடக பிரிவு, மீனவர் காங்கிரஸ், தொழிலாளர் பிரிவு, தலைவர்களும், நிர்வாகிகளும் மற்றும் தொண்டர்களும், வியாபாரிகள் மற்றும் பொதுமக்களும் கண்டன ஆர்ப்பாட்ட பேரணியில் தவறாமல் பங்கேற்குமாறு புதுவை பிரதேச காங் கிரஸ் கமிட்டி சார்பில் கேட்டு கொள்கிறேன்.

    இவ்வாறு நமச்சிவாயம் கூறி உள்ளார். ##congress

    ×