என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Cert"
- இளையோா் கலை விழா, மாவட்ட இளையோா் கருத்தரங்கம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
- சான்றிதழ், பரிசு மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பும் வழங்கப்படும்.
தஞ்சாவூர்:
மத்திய அரசு இளைஞா் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தில் செயல்படும் தஞ்சாவூா் மாவட்ட நேரு யுவகேந்திரா சாா்பில் இந்திய சுதந்திர அமுத பெருவிழா மற்றும் 75 ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, தஞ்சாவூா் வேளாங்கண்ணி கலை, அறிவியல் கல்லூரி வளாகத்தில் இளம் கலைஞா் (ஓவியம்), இளம் எழுத்தாளா் (கவிதை), புகைப்படம், பேச்சுப்போட்டி, இளை யோா் கலை விழா, மாவட்ட இளையோா் கருத்தரங்கம் ஆகிய போட்டிகள் நடத்தப்ப டவுள்ளன.
போட்டிகளில் தஞ்சாவூா் மாவட்டத்தை சோ்ந்த 15 - 29 வயதுடைய இளையோா் மட்டுமே கலந்து கொள்ளலாம்.
வெல்வோருக்கு சான்றிதழ், பரிசுகளும், மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பும் வழங்கப்படும். ஒரு நபா் ஒரு போட்டியில் மட்டுமே கலந்து கொள்ள முடியும்.
பங்கேற்க விருப்பமு ள்ளோா் விண்ணப்பத்தை நிறைவு செய்து துணை இயக்குநா், நேரு யுவகே ந்திரா, அரசு இளைஞா் விடுதி, கணபதி நகா், மருத்து வக்கல்லூரி சாலை என்ற முகவரியில் நேரடியாகவோ, dyc.thanjavur@ gmail.com என்ற மின்னஞ்சல் மூலமோ நாளைக்குள் (செவ்வாய் கிழமை) அளிக்க வேண்டும்.
மேலும், விவரங்களுக்கு 94436-87794 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.
மேற்கண்ட தகவலை நேரு யுவ கேந்திராவின் தஞ்சாவூா் மாவட்டத் துணை இயக்குநா் திருநீலகண்டன் தெரிவித்துள்ளார்.