என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chain-Cell Phone"

    • மதுரையில் 2 பெண்களிடம் செயின்-செல்போன் பறிக்கப்பட்டது.
    • ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    மதுரை

    மதுரை ராஜகம்பீரம், ராஜேஸ்வரி நகர், பாரதி கண்ணன் மனைவி சுஜித்ரா (வயது 32). இவர் சம்பவ த்தன்று மதியம் மகனுடன் மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டு சென்றார்.அப்போது அம்மாபட்டி அருகே, இன்னொரு மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த மர்ம கும்பல், சுஜித்ராவிடம் 3.5 பவுன் தங்கச்நகையை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டது.

    இது தொடர்பாக சுசித்ரா ஒத்தக்கடை போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை பசுமலை, தியாகராஜர் காலனியைச் சேர்ந்தவர் ராஜாமுகமது உசேன் (வயது 45). இவர் சமூகத்தன்று இரவு மனைவி மற்றும் குழந்தைகளுடன், மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டு சென்றார்.

    அப்போது திருமங்கலம்-மதுரை ரோட்டில், தோப்பூர் அருகே, இன்னொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் கும்பல், ராஜா முஹம்மது மனைவியிடம் கைப்பையை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டது. அந்த கைப்பையில் செல்போன் மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவை இருந்தது. இது தொடர்பாக ராஜாமுகமதுஉசேன் ஆஸ்டின்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×