search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chalice"

    • வானத்தில் கருடன் வட்டமிட கடத்தில் இருந்த புனிதநீரை கலசத்திற்கு ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
    • வட மேற்கில் நாகராஜாவும், வட கிழக்கில் ஆஞ்சநேயரும், தென்மேற்கில் விநாயகரும் அமைந்துள்ள தனிச்சிறப்பாகும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறைமஹா தான தெருவில்உள்ள ருக்குமணி சத்தியாபாமா உடனாகிய வேணுகோபால சாமி கோவிலில் கும்பாபி ஷேகம் நடைபெற்றது.

    விழாவிற்கு அம்பாபாய் டிரஸ்ட் மற்றும் விழாக்குழு தலைவர் பிரபாகர் தலைமையில் நாகராஜா ஆச்சாரியார் முன்னிலையில் தண்தரசா ரெந்தம் மத்வாச்சாரியா முறைப்படி ஐந்து காலயாகசாலை பூஜைகளுடன் வேத மந்திரங்கள் ஓத கடம் புறப்பாடு நடைபெற்று, மங்கள வாத்தியங்கள் முழங்க, பக்தர்கள் கிருஷ்ணா.. கிருஷ்ணா.. என கோஷம் எழுப்பினர்.

    பின்னர், வானத்தில் கருடன் வட்டமிட கடத்தில் இருந்த புனிதநீரை கலசத்திற்கு ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.

    பின்னர் கருவறையில் உள்ள கிருஷ்ணன் சிலைக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.

    கோவில் உள் வளாகத்தின் மையத்தில் கருடன், துளசி மாடம், வட மேற்கில் நாகராஜாவும், வட கிழக்கில் ஆஞ்சநேயரும், தென்மேற்கில் விநாய கரும் அமைந்துள்ள தனிச்சிறப்பாகும்.

    விழாவில் ஆர்.எஸ்.கே. பாண்டுரெங்கன், நகர மன்ற துணைத்தலைவர் எஸ்.எஸ்.குமார், நகர மன்ற உறுப்பினர் காந்திமதி தனபால், கலியமூர்த்தி, கவி மற்றும் பக்தர்கள் பலர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ×