search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "chance of rain"

    • சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை.

    சென்னை:

    தமிழகத்தில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தென் இந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    மேலும், நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 15-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொறுத்தவரையில், மத்திய மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகள், வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் இன்று (திங்கட்கிழமை) சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 11-ந் தேதி சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    மத்திய மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகள், வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    எனவே, மேற்கூறிய தினங்களில் மேற்கண்ட பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறார்கள்.

    நேற்று மதியம் 1.15 மணி வரையிலான 24 மணி நேர நிலவரப்படி நெல்லை மாவட்டம் நாலுமுக்கு, கோவை மாவட்டம் சோலையாறு ஆகிய இடங்களில் அதிகபட்சமாக தலா 11 செ.மீ மழை அளவு பதிவாகி உள்ளது. கோவை வால்பாறை, நெல்லை ஊத்து ஆகிய பகுதிகளில் தலா 9 செ.மீ மழை அளவு பதிவாகி உள்ளது.

    தஞ்சை கீழ் அணைக்கட்டு, மயிலாடுதுறை மணல்மேடு, நெல்லை காக்காச்சி ஆகிய இடங்களில் தலா 7 செ.மீ மழை அளவு பதிவாகி உள்ளது.

    மேலும் கன்னியாகுமரி, திருச்சி, கிருஷ்ணகிரி, நீலகிரி, தர்மபுரி, தென்காசி, திருப்பூர், கடலூர், மதுரை ஆகிய மாவட்டங்களின் பல்வேறு இடங்களில் 1 முதல் 5 செ.மீ மழை அளவு பெய்துள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தீவிர புயலாக வலுவடைந்த ரீமால் புயல் கரையை கடந்தது.
    • சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் அவ்வபோது வெயில் சுட்டெரித்து வருகிறது.

    வங்கதேசம், மேற்குவங்கம் கடற்கரையை ஒட்டிய சாகர் தீவுகளுக்கும் கேபுபாராவுக்கு இடையே ரீமால் புயல் கரையை கடந்தது.

    இந்நிலையில், தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அடுத்த 6 நாட்களுக்கு இடி, மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தமிழகத்தில் வெயிலின் தாக்கம் சற்று குறைந்தாலும், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் அவ்வபோது வெயில் சுட்டெரித்து வருகிறது.

    இதற்கிடையே, மேற்கு தொடர்ச்சி மழை பகுதிகளை ஒட்டிய மாவட்டங்கள், தென்மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.

    இந்நிலையில், தமிழகத்தின் ஓரிரு இடங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அடுத்த மாதம் (ஜூன்) 1ம் தேதி இடி, மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • நீலகிரி, கோவை, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு.
    • ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்.

    தமிழ்நாட்டில் கோடை மழை இன்று காலை வரை இயல்பை விட 28% கூடுதலாக பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

    தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு கோடை வெயில் சுட்டெரிக்கிறது. கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மக்கள் வெயிலின் தாக்கத்தால் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். இயல்பைவிட 4, 5 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாக தாக்கியது.

    இதற்கிடையில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இடிமின்னல் காற்றுடன் தற்போது கோடை மழை கொட்டி வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களுக்கு மழை அலர்ட் கொடுக்கப்பட்டது.

    இன்று நீலகிரி, கோவை, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது எனவும் ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மார்ச் 1 முதல் இன்று வரையிலான காலகட்டத்தில் 138.4 மி.மீ மழை பதிவாகியுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அந்த காலகட்டத்தில் இயல்பாக பெய்ய வேண்டிய மழை அளவு 108.6 மி.மீ ஆகும். ஆகவே தமிழ்நாட்டில் கோடை மழை இன்று காலை வரை இயல்பை விட 28% கூடுதலாக பெய்துள்ளது.

    • தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இடிமின்னல் காற்றுடன் கடந்த சில நாட்களாக கோடை மழை கொட்டி வருகிறது.
    • தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மார்ச் 1 முதல் இன்று வரையிலான காலகட்டத்தில் 114.5 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

    தமிழ்நாட்டில் கோடை மழை இன்று காலை வரை இயல்பை விட 9% கூடுதலாக பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

    தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு கோடை வெயில் சுட்டெரிக்கிறது. கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மக்கள் வெயிலின் தாக்கத்தால் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். இயல்பைவிட 4, 5 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாக தாக்கி வருகிறது.

    குறிப்பாக வட உள் மாவட்டங்களில் வெயிலின் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.

    இதற்கிடையில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இடிமின்னல் காற்றுடன் கடந்த சில நாட்களாக கோடை மழை கொட்டி வருகிறது. தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மார்ச் 1 முதல் இன்று வரையிலான காலகட்டத்தில் 114.5 மி.மீ மழை பதிவாகியுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அந்த காலகட்டத்தில் இயல்பாக பெய்ய வேண்டிய மழை அளவு 105.4 மி.மீ ஆகும். ஆகவே தமிழ்நாட்டில் கோடை மழை இன்று காலை வரை இயல்பை விட 9% கூடுதலாக பெய்துள்ளது.

    • தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்குவதற்கான சாதகமான சூழ்நிலை நிலவி வருகிறது.
    • கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதன் எதிரொலியால் தயார் நிலையில் பேரிடமர் மீட்பு குழு.

    தமிழகத்தில் கோடை மழை பெரும்பாலான மாவட்டங்களில் லேசாகவும், ஒரு சில மாவட்டங்களில் கனமழையும் பெய்து வருகிறது.

    அடுத்த 5 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

    இன்று (17-ந்தேதி) முதல் 21-ந்தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும். 20-ந்தேதி (திங்கட்கிழமை) ஒரு சில இடங்களுக்கு அதிகனமழை எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது.

    தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்குவதற்கான சாதகமான சூழ்நிலை நிலவி வருகிறது. தெற்கு அந்தமான் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் வருகிற 19-ந்தேதி தொடங்குவதற்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    தென் தமிழக கடலோர பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதாலும் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    தமிழகத்தில் 4 நாட்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதன் எதிரொலியால் நெல்லை, குமரி, நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு மாநில பேரிடர் மீட்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், தருமபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், கடலூர், ஈரோடு, கரூர், நாமக்கல், திருச்சி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு கோடை வெயில் சுட்டெரித்தது.
    • கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மக்கள் வெயிலின் தாக்கத்தால் பெரும் அவதிப்பட்டனர்.

    தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு கோடை வெயில் சுட்டெரித்தது. கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மக்கள் வெயிலின் தாக்கத்தால் பெரும் அவதிப்பட்டனர். அப்போது இயல்பைவிட 4, 5 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாக இருந்தது

    இதற்கிடையில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இடிமின்னல் காற்றுடன் கடந்த ஒரு வாரமாக கோடை மழை கொட்டி தீர்த்து வருகிறது.

    இந்நிலையில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட தென் மாநிலங்களில் கடந்த மே 9 முதல் 15 வரை இயல்பை விட கூடுதலாக 58% மழை பெய்துள்ளது.

    இந்த குறிப்பிட்ட நாட்களில் 16.4 சென்டி மீட்டர் மழை பெய்ய வேண்டிய நிலையில் 25.9 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    • வட உள் மாவட்டங்களில் வெயிலின் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.
    • தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இடிமின்னல் காற்றுடன் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது.

    தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு கோடை வெயில் சுட்டெரிக்கிறது. கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மக்கள் வெயிலின் தாக்கத்தால் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். இயல்பைவிட 4, 5 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாக தாக்கி வருகிறது.

    குறிப்பாக வட உள் மாவட்டங்களில் வெயிலின் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.

    இதற்கிடையில் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இடிமின்னல் காற்றுடன் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது.

    இந்நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மார்ச் 1 முதல் மே 12 வரையிலான காலகட்டத்தில் 38.3 மி.மீ மழை பதிவாகியுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த காலகட்டத்தில் இயல்பாக பெய்ய வேண்டிய மழை அளவு 85.5 மி.மீ ஆகும். ஆகவே கோடை மழை இதுவரை இயல்பை விட 55% குறைவாக பெய்துள்ளது.

    • வட உள் மாவட்டங்களில் வெயிலின் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
    • தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இடிமின்னல் காற்றுடன் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது.

    தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு கோடை வெயில் சுட்டெரிக்கிறது. கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மக்கள் வெயிலின் தாக்கத்தால் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். இயல்பைவிட 4, 5 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாக தாக்கி வருகிறது.

    குறிப்பாக வட உள் மாவட்டங்களில் வெயிலின் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிகபட்சமாக கரூர், பரமத்தி, மதுரை விமான நிலையத்தில் 43.8 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகி உள்ளது. அதாவது 111 டிகிரி வெப்பம் தாக்கி உள்ளது.

    இந்த நிலையில், அடுத்த சில தினங்களில் தென்னிந்தியாவில் வெப்ப அலை குறைய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இடிமின்னல் காற்றுடன் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது.

    இந்நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மார்ச் 1 முதல் மே 7 வரையிலான காலகட்டத்தில் 23.1 மி.மீ மழை பதிவாகியுள்ளது. அந்த காலகட்டத்தில் இயல்பாக பெய்ய வேண்டிய மழை அளவு 74.9 மி.மீ ஆகும். ஆகவே கோடை மழை இதுவரை இயல்பை விட 69% குறைவாக பெய்துள்ளது.

    • வட உள் மாவட்டங்களில் வெயிலின் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது
    • இயல்பைவிட 4, 5 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாக தாக்கி வருகிறது

    தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு கோடை வெயில் சுட்டெரிக்கிறது. கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மக்கள் வெயிலின் தாக்கத்தால் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். இயல்பைவிட 4, 5 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாக தாக்கி வருகிறது.

    குறிப்பாக வட உள் மாவட்டங்களில் வெயிலின் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிகபட்சமாக கரூர், பரமத்தி, மதுரை விமான நிலையத்தில் 43.8 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகி உள்ளது. அதாவது 111 டிகிரி வெப்பம் தாக்கி உள்ளது.

    இந்த நிலையில், மேலும் 4 நாட்களுக்கு வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்று வானிலை மையம் தெரி வித்துள்ளது. இதற்கிடையில் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இடிமின்னல் காற்றுடன் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது.

    இந்நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மே 1 முதல் மே 6 வரையிலான காலகட்டத்தில் 19.8 மி மீ மழை பதிவாகியுள்ளது. அந்த காலகட்டத்தில் இயல்பாக பெய்ய வேண்டிய மழை அளவு 71.4 மி மீ ஆகும். ஆகவே கோடை மழை இதுவரை இயல்பை விட 72% குறைவாக பெய்துள்ளது.

    • 14 மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் தாக்கியது.
    • வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபாட்டால் மழை பெய்து வருகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு கோடை வெயில் சுட்டெரிக்கிறது. கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மக்கள் வெயிலின் தாக்கத்தால் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். தினமும் இயல்பைவிட 4, 5 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாக தாக்கி வருகிறது.

    குறிப்பாக வட உள் மாவட்டங்களில் வெயிலின் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்கள் வெளியே நடமாட முடியாமல் வீடுகளில் முடங்கினார்கள். சாலைகள் வெறிச்சோடின. பகலில் வெப்ப உஷ்ணத்தால் உடலில் இருந்து வியர்வை கொட்டுகிறது. புழுக்கமும் காணப்படுகிறது.

    தண்ணீர் எவ்வளவு குடித்தாலும் ஒருவித சோர்வு ஏற்படுகிறது. நேற்று அதிகபட்சமாக கரூர், பாமத்தி, மதுரை விமான நிலையத்தில் 43.8 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகி உள்ளது. அதாவது 111 டிகிரி வெப்பம் தாக்கி உள்ளது.

    இந்த நிலையில், மேலும் 4 நாட்களுக்கு வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்று வானிலை மையம் தெரி வித்துள்ளது. ஈரோட்டில் 110 டிகிரி, வேலூர், திருப் பத்தூர் ஆகிய இடங்களில் 108 டிகிரி வெப்ப நிலை பதிவாகி உள்ளது. 14 மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் தாக்கியது.

    தமிழக உள் மாவட்டங்களில் இன்று வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மேலும் 3 நாட்களுக்கு 4 டிகிரி செல்சியஸ் இயல்பைவிட அதிகமாக இருக்கும். வட தமிழக உள் மாவட் டங்களில் இன்று மிக அதிக மாக வெப்பத்தின் தாக்கம் இருந்தது. தொடர்ந்து ஒரு சில மாவட்டங்களில் வெப்ப அலை வீசுவதற்கும் வாய்ப்பு உள்ளது.

    இதற்கிடையில் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இடிமின்னல்காற்றுடன் மழை பெய்து வருகிறது.

    நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ண கிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) கனமழை பெய்யக் கூடும்.

    வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபாட்டால் மழை பெய்து வருகிறது. இதுகுறித்து தனியார் வானிலை ஆய்வாளர் பிரதிப்ஜான் கூறியதாவது:-

    தமிழகத்தின் வட உள் மாவட்டங்களில் கரூர், ஈரோடு, நாமக்கல், வேலூர், திருத்தணி, திருவள்ளூர் ஆகிய இடங்களில் வெயில் அதிகமாக தாக்கும். 4 நாட்கள் வரை பல மாவட்டங்களில் வெப்ப நிலை அதிகமாக இருக்கும். அதன் பிறகு குறையத் தொடங்கும்.

    10, 12-ந் தேதி வாக்கில் வெப்ப நிலை குறைய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் கோடை மழை தொடர்ந்து பெய்வதற்கு வாய்ப்புள்ளது. அதனால் வெப்பம் தணியும்.

    மேலும் குமரி கடல் பகுதி யில் மேலடுக்கு சுழற்சி ஒன்று உருவாகும் சூழல் உள்ளது. அதனால் தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இன்று (சனிக்கிழமை) முதல் 5 நாட்களுக்கு நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.
    • இன்று முதல் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) முதல் 5 நாட்களுக்கு நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    இன்று முதல் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதன்படி இன்று 3 மி.மீட்டரும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) 6 மி.மீட்டரும், நாளை மறுநாள் (திங்கட்கிழமை) 15 மி.மீட்டரும், 24-ந் தேதி 12 மி.மீட்டரும், 25-ந் தேதி 40 மி.மீட்டரும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    இன்று முதல் 3 நாட்களுக்கு மணிக்கு 5 கி.மீட்டர் வேகத்தில் வடகிழக்கு திசையில் இருந்தும், 24 மற்றும் 25-ந் தேதிகளில் மணிக்கு 4 கி.மீட்டர் வேகத்தில் கிழக்கு திசையில் இருந்தும் காற்று வீசும்.

    இதனிடையே வெப்பநிலையை பொறுத்த வரையில் அதிகபட்சமாக 91.4 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 69.8 டிகிரியாகவும் இருக்கும். இதனிடையே காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக 80 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக 64 சதவீதமாகவும் இருக்கும்.

    மழைக்கு வாய்ப்பு

    சிறப்பு வானிலையை பொறுத்தவரை அடுத்த 5 நாட்களுக்கு வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் மாவட்டத்தில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    இதனிடையே கடந்த வாரம் இறந்த கோழிகள் இறக்கை அழுகல் மற்றும் ரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டு இறந்தது கோழியினை நோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆய்வகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. எனவே பண்ணையாளர்கள் கோழிகளுக்கு அளிக்கப்படும் தீவனத்தில் நுண்ணுயிர் கிருமிகளின் தாக்கம் உள்ளதா? என்பதை பரிசோதித்து அதற்கேற்ப தீவன மேலாண்மை முறைகளை கையாள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    ×