search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chanting Vedic mantras to Goddess Sri Paranjothi Mahadeepharatana"

    • பக்தர்கள் ஊர்வலமாக சென்று கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபட்டனர்
    • ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்

    வந்தவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த சென்னாவரம் கிராமத்தில் பரஞ்சோதி அம்மன் கோவிலில் ஆடி திருவிழா நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் ஊர்வலமாக சென்று கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபட்டனர்.

    மேலும் ஸ்ரீ பரஞ்சோதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பரஞ்சோதி அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    இது தொடர்ந்து ஸ்ரீ பரஞ்சோதி அம்மனுக்கு வேத மந்திரங்கள் முழங்க மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது.

    இந்த திருவிழாவில் முன்னாள் எம் பி மு. துரை, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கே.முனுசாமி, ஊராட்சி மன்ற தலைவர் வீரராகவன், மாவட்ட கவுன்சிலர் தங்கம் செ. சீ மணி,வ. மணி,விழா குழுவினர்கள் எஸ் பி வரதன், ஜேசிபி ராஜா,நா. செல்வம்,வி கோபி,சீனு, தாண்டவராயன், விவேக்,முனிசில், உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ×