என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » charged
நீங்கள் தேடியது "charged"
ராமேசுவரம்-தனுஷ்கோடி செல்லும் வாகனங்களுக்கு 3 இடங்களில் கட்டண வசூலிப்பதால் பக்தர்கள்-சுற்றுலா பயணிகள் வேதனை அடைகின்றனர்.
ராமேசுவரம்
ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலுக்கு தினசரி வாகனத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சுற்றுலாபயணிகளும் வருகை தருகின்றனர். இவர்கள் ராமேசுவரம் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு தனுஷ்கோடி செல்கின்றனர்.
தனுஷ்கோடிக்கு வாகனத்தில் செல்லும் போது அப்பகுதியில் புது ரோடு அருகே ஜடாயு தீர்த்தம் பகுதியில் வனத்துறையினர் சுங்கச் சாவடி அமைத்து 1 வாகனத்திற்கு ரூ. 20 வசூல் செய்கின்றனர். இதனால் வாகன ஓட்டுனர்கள் அதிர்ச்சி அடைகின்றனர்.ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் நுழைவு பகுதியில் அமைந்துள்ள சுங்கச்சாவடியில் வாகனத்திற்கு ரூ.150 முதல் ரூ.200 வரை கட்டணம் செலுத்தி வருகிறோம். அதன் பின்னர் தனுஷ்கோடி பகுதிக்கு செல்லவும் 2-வது சுங்கச்சாவடியில் ரூ.20 கட்டணம் செலுத்தி செல்வது மன உளைச்சலை ஏற்படுத்தி வருகிறது என்று கூறுகின்றனர்.
ராமேசுவரத்திற்கு வரும் வாகனங்களுக்கு நுழைவு வாயிலிலேயே நகராட்சி நிர்வாகம் சுங்கச் சாவடி அமைத்து கட்டணம் வசூல் செய்து வருகிறது.இதற்கு தேசிய நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் எந்த அனுமதியும் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த சுங்கச்சாவடியில் பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் கட்டணம் செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தனுஷ்கோடி செல்லும் போது அங்கேயும் ஒரு தேசிய நெடுஞ்சாலையில் வனத்துறையினர் ஒரு சுங்கச் சாவடி அமைத்து கட்டணம் வசூல் செய்து வருகின்றனர்.
இதனால் சுற்றுலாபயணிகள் மற்றும் பக்தர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே கலெக்டர் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து தரப்பு மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஊழல் பணத்தை சட்ட விரோதமாக பரிமாற்றம் செய்தது தொடர்பாக மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. #Malaysia #NajibRazak
கோலாலம்பூர்:
மலேசியாவில் 60 ஆண்டு காலம் ஆட்சி அதிகாரத்தில் இருந்து வந்த பரிசன் நேஷனல் கூட்டணி (பி.என்.), கடந்த மே மாதம் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்தது. அதைத் தொடர்ந்து நஜிப் ரசாக் பிரதமர் பதவியை இழந்தார். உடனே அவர் மீதான ஊழல் புகார்களில் விசாரணை முடுக்கி விடப்பட்டது.
‘1 எம்.டி.பி.’ என்று அழைக்கப்படுகிற 1 மலேசிய அபிவிருத்தி வாரியத்தின் அங்கமான எஸ்.ஆர்.சி. இன்டர்நேஷனல் நிதி 10.3 மில்லியன் டாலரை ( சுமார் ரூ.69 கோடி) தன் வங்கிக்கணக்குகளுக்கு மாற்றி ஊழலில் ஈடுபட்டார் என்பதுதான் நஜிப் ரசாக் மீது உள்ள முக்கிய குற்றச்சாட்டு.
இந்த ஊழல் பணத்தை அவர் சட்ட விரோதமாக பரிமாற்றம் செய்து உள்ளதாக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
அந்த வழக்கு, கோலாலம்பூர் ஐகோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நஜிப் ரசாக் மீது நீதிபதி, சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழான குற்றச்சாட்டுகளை வாசித்துக் காட்டி பதிவு செய்தார்.
அப்போது கோர்ட்டில் குற்றவாளிக்கூண்டில் அமைதியாக நின்ற நஜிப் ரசாக், பின்னர் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார்.
இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்து வந்த நீதிபதியின் சகோதரர், நஜிப் ரசாக் கட்சியில் முக்கிய பதவி வகித்தவர். எனவே அவர் இப்போது மாற்றப்பட்டு, புதிய நீதிபதி நியமிக்கப்பட்டு நேற்று விசாரணை நடந்தது குறிப்பிடத்தக்கது. #Malaysia #NajibRazak #Tamilnews

×

X