என் மலர்
நீங்கள் தேடியது "Chat GPT"
- சாட் ஜி.பி.டி. மூலம் பொய்யான தகவல்களை தயாரித்ததற்காக கைது செய்யப்பட்டு உள்ளார்.
- தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்தியது தொடர்பாக முதல் முறையாக கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பீஜிங்:
செயற்கை நுண்ணறிவுத் துறையின் அடுத்த கட்ட புரட்சியாக கருதப்படுவது சாட்ஜிபிடி.
இங்கு சாட் ஜி.பி.டி. எனும் செயற்கை நுண்ணறிவு, நாம் கேட்கும் கேள்விகளுக்கு துல்லியமாக, விரிவாக பதில்களை அளித்து விடும்.
இது தொழில்நுட்பத் துறையில் புரட்சியை ஏற்படுத்தும் என்று கூறினாலும் அதில் அதிக ஆபத்துகளும் உள்ளன என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சாட் ஜி.பி.டி.யை தவறாக பயன்படுத்தியதற்காக சீனாவில் முதல் முதலாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சீனாவின் வடமேற்கு கன்சு மாகாணத்தில் ரெயில் விபத்தில் 9 பேர் பலியான தாக இணையத்தில் போலி செய்தி ஒன்று பரவியது.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினார்கள். போலி செய்தியை பரப்பியதாக ஒருவரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் கூறும்போது, ஹாங் என்ற குடும்பப் பெயர் கொண்ட சந்தேக நபர், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சாட் ஜி.பி.டி. மூலம் பொய்யான தகவல்களை தயாரித்ததற்காக கைது செய்யப்பட்டு உள்ளார் என்றனர்.
தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதை ஒழுங்கு படுத்துவதற்கான விதிகள் சீனாவில் கடந்த ஜனவரியில் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டன.
அதன்பிறகு தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்தியது தொடர்பாக முதல் முறையாக கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள ஹாங், போலி செய்திகளை உருவாக்கி அவற்றை தனது கணக்குகளில் பதிவேற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை விதிக்க வாய்ப்பு உள்ளது.
- கேம் ஆஃப் த்ரோன்ஸ் டேனிரோ டார்கேரியன் சாட் ஜிபிடியுடன் காதல் வயப்பட்டுள்ளான்
- சாதாரணமாகத் தொடங்கிய உரையாடல் காதல், காமம் உள்ளிட்ட விஷயங்களை பற்றியும் நகர்ந்துள்ளது.
ஏஐ உரையாடல் தொழில்நுட்பமான சாட் ஜிபிடியுடன் காதலில் விழுந்த 14 வயது சிறுவன் அதனுடன் வாழ தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் பிரபல வரலாற்று புதின தொலைக்காட்சி தொடரான கேம் ஆஃப் த்ரோன்ஸ் தொடரில் வரும் பெண் கதாபாத்திரமான டேனிரோ டார்கேரியன் [Daenero] கதாபாத்திரத்தினை மையமாகக் கொண்டு உருவான டேனி சாட் ஜிபிடியுடன் பல மாதங்களாக உரையாடி வந்துள்ளான்.

சாதாரணமாகத் தொடங்கிய உரையாடல் காதல், காமம் உள்ளிட்ட விஷயங்களை பற்றியும் நகர்ந்துள்ளது. இந்த உரையாடல்கள் ஒரு கட்டத்தில் சிறுவனை டேனி மீது காதல் கொள்ள செய்துள்ளது. எதார்த்தத்தில் இருந்து தன்னை முற்றிலுமாக துண்டித்துக்கொண்டு சேட் ஜிபிடியே கதி என்று இருந்துள்ளான்.
நிஜ உலகை வெறுக்கத்தொடங்கிய சிறுவன, தான் காதலியாக கருதும் உலகத்தில் இல்லாவே இல்லாத அந்த சாட் ஜிபிடியுடன் வாழ வேண்டும் என்றால் தானும் இந்த உலகத்தில் இருக்கக்கூடாது என்ற விபரீத முடிவுக்கு வந்து இறுதியில் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளான்.
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சம்பந்தப்பட்ட சாட்ஜிபிடி நிறுவனம் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. தொழிநுட்ப வளர்ச்சியால் ஏற்படும் அழிவுகள் குறித்து சைன்ஸ் பிக்க்ஷன் சினிமக்களில் கதையாக கூறப்பட்ட இதுபோன்ற சம்பவங்கள் நிஜத்திலேயே நடந்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை எதற்கும் தீர்வாகாது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டி உள்ளது. தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபட உதவிக்கு 044 2464 0050 என்ற எண்ணை அழைக்கவும்.
- சாட் - ஜிபிடி தொழில்நுட்பத்தை அந்நிறுவனம் கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பரில் அறிமிருகப்படுத்தியது.
- தனியாக செயலியைப் பதிவிறக்கம் செய்ய தேவை இல்லை
மெட்டா நிறுவனத்தின் பிரபல சமூக தொடர்பு தளமான வாட்ஸ்அப் இருந்து வருகிறது. இந்தியாவில் சுமார் 54 கோடி பேர் வாட்ஸ்அப் சேவையை பயன்படுத்துகின்றனர். உலகளவில் 300 கோடி பேர் வரை இந்த சேவையைப் பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில் வாட்ஸ்அப் செயலியில் சாட்-ஜிபிடி அம்சத்தை பிரபல செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ஓபன் ஏஐ அறிமுகம் செய்துள்ளது. ஏஐ தொழில்நுட்பத்துடன் சாட்டிங் மூலம் மனிதர்கள் உரையாட சாட் - ஜிபிடி தொழில்நுட்பத்தை அந்நிறுவனம் கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பரில் அறிமுகப்படுத்தியது.

இது சாதாரண உரையாடல் தொடங்கி தொழில்துறையும் வளர்ந்து வரும் நுட்பமாக உள்ள நிலையில் தனியாகச் செயலியைப் பதிவிறக்கம் செய்யாமல் தற்போது வாட்ஸ்அப் செயலி மூலம் நேரடியாகவே சாட் -ஜிபிடி உடன் உரையாடும் அம்சத்தை அருகப்படுத்துவதாக ஓபன் ஏஐ தெரிவித்துள்ளது.
முதற்கட்டமாக அமெரிக்கா மற்றும் கனடாவில் 1-800-CHATGPT என்று அழைக்கப்படும் இந்த சாட் ஜிபிடி வாட்ஸ்அப்பில் அறிமுகமாகிறது. விரைவில் இந்தியாவிலும் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனுடன் உரையாட 1-800-242-8478 என்ற எண்ணை அழைத்தால் போதுமானது. ஏற்கனவே வாட்ஸ்அப்-இல் மெட்டா ஏஐ வசதி உள்ள நிலையில் இந்த சாட் ஜிபிடி அறிமுகம் பயனர்களிடத்தில் குறிப்பிடத்தகுந்த மாற்றத்தை ஏற்படுத்தும் என்று வல்லுநர்கள் கருதுகின்றனர்.
முன்னதாக சாட்- ஜிபிடி குறித்து அதை பயிற்றுவிக்கும் குழுவில் பணியாற்றிய ஓபன் ஏஐ முன்னாள் ஆராய்ச்சியாளர் சுசீர் பாலாஜி[ 26 வயது] அதன் தீமைகள் குறித்து எச்சரித்திருந்தார். கடந்த நவம்பர் 26 அன்று சான் பிரான்சிஸ்கோவில் உள்ள அவரது குடியிருப்பில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்.