என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Chavku Shankar"
- சவுக்கு சங்கர் தாயார் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
- அச்சுறுத்தல் கொடுக்கும் வகையில் நடந்து கொண்டாரா?
புதுடெல்லி:
சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டதை எதிர்த்து அவரது தாயார் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. சவுக்கு சங்கர் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் கொடுக்கும் வகையில் நடந்து கொண்டாரா? என்று சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பியது.
இது தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 18-ந்தேதிக்கு ஒத்திவைத்தது.
- காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் ஃபெலிக்ஸ் ஜெரால்ட் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
- யூட்யூப் சேனல்களை கட்டுப்படுத்துவதற்கான தகுந்த நேரம் இது.
காவல் உயர் அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் பிரபல யூட்யூபரான சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது ரெட்பிக்ஸ் யூட்யூப் சேனல் எடிட்டரான ஃபெலிக்ஸ் ஜெரால்டை காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். டெல்லியில் இருந்த அவரை போலீசார் கைது செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது
பிரபல யூட்யூபரான சவுக்கு சங்கர் காவல்துறை அதிகாரிகள் பெண் காவலர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். இது தொடர்பாக கோவை மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்திருந்தனர்.
காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் ஃபெலிக்ஸ் ஜெரால்ட் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தான் கைது செய்யப்படலாம் என முன் ஜாமின் கேட்டு ஏற்கனவே உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு விசாரணைக்கு வந்த போது நீதிபதி குமரேஷ் பாபு கடும் கண்டனங்களை தெரிவித்தார். மேலும் யூட்யூப் சேனல்களை கட்டுப்படுத்துவதற்கான தகுந்த நேரம் இது. நேர்காணல் தர வருபவர்கள் அவதூறான கருத்துக்களை கூற தூண்டும் விதமாக நேர்காணல் எடுப்பவர்களை முதல் எதிரியாக சேர்க்க வேண்டும் என கூறியிருந்தார்.
- சவுக்கு சங்கரின் தாயார் கமலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
- கோவை மத்திய சிறையில் இருந்து சென்னைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து சென்று கொண்டிருந்தனர்.
பெருந்துறை:
பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவரது கை உடைக்கப்பட்ட நிலையில் கோவை அரசு கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில் சவுக்கு சங்கரின் தாயார் கமலா சென்னை உயர்நீதிமன்ற த்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். கோவை மத்திய சிறையில் உள்ள தனது மகன் சவுக்கு சங்கருக்கு பாதுகாப்பு இல்லாததால் அவரை வேறு சிறைக்கு மாற்ற வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
அதன் அடிப்படையில் சவுக்கு சங்கரை வேறு சிறைக்கு மாற்றுவது குறித்த சிறைத்துறை பரிசீலிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இன்று காலை சவுக்கு சங்கரை கோவை போலீசார் சென்னைக்கு அழைத்து செல்ல முடிவு செய்துள்ளனர். அதன்படி சவுக்கு சங்கரை கோவை மத்திய சிறையில் இருந்து சென்னைக்கு பலத்த போலீஸ் பாது காப்புடன் அழைத்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது சவுக்கு சங்கர் தன்னுடைய கை வலிப்பதாகவும், உடனடியாக மருத்துவ சிகிச்சை தேவைப்படுவதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து ஈரோடு மாவட்டம் பெருந்துறை போலீஸ் நிலையத்து க்கு அழைத்து வரப்பட்ட சவுக்கு சங்கர் அங்கிருந்து நேரடியாக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு டாக்டர் சாந்தி உள்ளிட்ட மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கு பிறகு காலை 9.45 மணி அளவில் பெருந்துறை போலீஸ் நிலையத்தில் இருந்து சென்னைக்கு போலீஸ் வேனில் அழைத்து செல்லப்பட்டார்.
அப்போது அங்கிருந்த செய்தியாளர்கள் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா என்று சவுக்கு சங்கரை பார்த்து கேள்வி எழுப்பினர். அப்போது அவரை பேசவிடாமல் போலீசார் தடுத்து அழைத்து சென்றனர். சவுக்கு சங்கருக்கு தொடர்ந்து குளுக்கோஸ் ஏறிக் கொண்டிருந்தது. அதனை ஒரு காவலர் கையில் தூக்கி பிடித்த படி சென்று கொண்டிருந்தார்.
- கைது செய்ய சென்ற போலீசாரை தரக்குறைவாக பேசியது உள்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
- வழக்கு தேனியில் இருந்து மதுரை போதை பொருள் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட உள்ளது.
தேனி:
பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் யூ-டியூபர் சவுக்கு சங்கரை தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டியில் கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். பூதிப்புரம் ரோட்டில் உள்ள தங்கும் விடுதியில் கடந்த 3-ந் தேதி அதிகாலை சவுக்கு சங்கரை கைது செய்து கோவைக்கு அழைத்து சென்றனர். மேலும் அவருடன் தங்கி இருந்த சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ராம்பிரபு, பரமக்குடியைச் சேர்ந்த ராஜரத்தினத்தை விசாரித்தனர்.
அவர்கள் வந்த காரில் சோதனை செய்தபோது 2.6 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து நடமாடும் தய அறிவியல் ஆய்வு வாகனம் மூலம் ஆய்வு செய்த போலீசார் சவுக்கு சங்கர், ராம்பிரபு, ராஜரத்தினம் ஆகிய 3 பேர் மீதும் கஞ்சா கடத்தல் வழக்கு, கைது செய்ய சென்ற போலீசாரை தரக்குறைவாக பேசியது உள்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
சவுக்கு சங்கர் கோவைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் ராம்பிரபு, ராஜரத்தினம் ஆகியோர் கஞ்சா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு தேனி சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் இந்த வழக்கில் 4-வது நபராக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே ஆரைக்குடி வடக்குத் தெருவைச் சேர்ந்த திருமால் மகன் மகேந்திரன் (24) என்பவரை போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், சவுக்கு சங்கருக்கு மகேந்திரன் கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளார். இவரிடம் இருந்து 2.6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தேனி மாவட்ட நீதிமன்றத்தில் 1 கிலோவுக்கு உட்பட்ட கஞ்சா வழக்குகள் மட்டுமே விசாரிக்க முடியும். ஆனால் மொத்தம் 3 கிலோ கஞ்சா பிடிபட்டுள்ளதால் இந்த வழக்கு தேனியில் இருந்து மதுரை போதை பொருள் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட உள்ளது என்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்