search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chengalpattu rain"

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் அதிகபட்சமாக செங்கல்பட்டில் 90 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. காஞ்சீபுரம் மாவட்டத்தில் அதிகபட்சமாக செங்கல்பட்டில் 90 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    அதேபோல் உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சீபுரம், திருக்கழுக்குன்றம், மகாபலிபுரம் பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது. கன மழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:-

    காஞ்சீபுரம் - 47

    ஸ்ரீபெரும்புதூர் - 49.90

    செய்யூர் - 22.30

    திருக்கழுக்குன்றம் - 64.20

    மகாபலிபுரம் - 49.20

    திருப்போரூர் - 31.07

    வாலாஜாபாத் - 14.50

    திருவள்ளூர் மாவட்டதில் நேற்று முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. விடியவிடிய பெய்து வரும் கன மழையால் சாலை முழுவதும் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    திருவள்ளூர் நகரில் எம்ஜிஆர் சிலை, ஜெயா நகர் செல்லும் சாலை, பஜார் வீதி உட்பட பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. சில இடங்களில் சாலைகளில் அரிப்பு ஏற்பட்டு குண்டும், குழியுமாக காணப்படுகிறது.கிராமப் பகுதிகளில் உள்ள வயல்வெளிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. தொடர் மழையினால் பொது மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் பதிவான மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-

    கும்மிடிப்பூண்டி 57 அம்பத்தூர் - 51

    பூந்தமல்லி - 43

    திருவள்ளூர் - 41

    ஆர்.கே.பேட்டை - 15

    மணலி புதுநகர் பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன். இவருக்கு சொந்தமான 4 மாடுகள் நேற்று இரவு 11 மணிக்கு அதே தெருவில் சென்றது. அப்போது உயர் அழுத்த மின்வயர் திடீரென்று அறுந்து மாடுகள் மீது விழுந்தது. இதில் 4 மாடுகளும் பலியாகின.

    ×