என் மலர்
நீங்கள் தேடியது "chennai flight"
- விமான நிலைய பணியாளர்கள் காத்திருந்தனர்.
- விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து சென்னைக்கு இன்று காலை வந்த விமானத்தின் டயர் திடீரென வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக விமானத்தில் இருந்த அனைவரும் பத்திரமாக உயிர் தப்பியுள்ளனர்.
சென்னைக்கு வந்து கொண்டிருந்த விமானம் தரையிறக்கப்படுவதற்கு முன், அதன் டயரில் கோளாறு ஏற்பட்டு இருப்பதை விமானி கண்டறிந்துள்ளார். அதனைத் தொடர்ந்து, அவர் விமான நிலைய அதிகாரிகளுக்கு இது குறித்து தகவல் கொடுத்தார். ஓடுதளத்தில் உரிய முன்னேற்பாடுகளுடன் விமான நிலைய பணியாளர்கள் இருந்தனர்.
டயரில் கோளாறு ஏற்பட்ட நிலையில், சாதுரியமாக செயல்பட்ட விமானி அசம்பாவிதம் ஏற்படாத வகையில் விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார். தரையிறங்கிய பின் விமானத்தின் டயர்களை பரிசோதனை செய்ததில், 2-வது சக்கரத்திலுள்ள டயர் வெளியே வெடித்த நிலையில் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
- விமானத்தில் 184 பயணிகள் இருந்தனர்.
- விமானி, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.
குவைத்தில் இருந்து சென்னைக்கு நேற்று இரவு பயணிகள் விமானம் வந்து கொண்டு இருந்தது. அந்த விமானத்தில் 184 பயணிகள் இருந்தனர். விமானம் நடு வானில் பறந்து கொண்டிருந்த போது அந்த விமானத்தில் பயணம் செய்த மராட்டிய மாநிலம் தானே பகுதியைச் சேர்ந்த முகமத் சதாம்(32) என்பர் புகைபிடித்து ரகளையில் ஈடுபட்டார்.
இதுபற்றி விமானி, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். விமானம் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் தரையிறங்கியதும் பாதுகாப்பு அதிகாரிகள் முகமத் சதாமை அதிரடியாக கைது செய்து சென்னை விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர்.
- விமான நிலையத்திற்கு வந்த பல விமானங்கள் வேறு பகுதிகளுக்கு திருப்பி விடப்பட்டன.
- விமான நிலையத்திற்கு வந்து சேரும் சாலைகளும் நீரில் மூழ்கி இருந்தன.
ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் நேற்று பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், சாலைகளில் மழைநீர் தேங்கியது. பல இடங்களில் வாகன போக்குவரத்தும் முடங்கியது.
கனமழை மற்றும் வெள்ளம் எதிரொலியாக, விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. துபாயில் சர்வதேச பயணிகள் அதிகம் வரக்கூடிய, உலகில் பரபரப்புடன் இயங்க கூடிய துபாய் சர்வதேச விமான நிலையத்தில் வெள்ளநீர் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து, விமான நிலையத்திற்கு வந்த பல விமானங்கள் வேறு பகுதிகளுக்கு திருப்பி விடப்பட்டன.
விமான ஓடுபாதையில் வெள்ளம் புகுந்ததில், விமானங்கள் மற்றும் கார்கள், நீரில் பாதியளவு மூழ்கின. விமானங்கள் நிறுத்தும் பகுதியில் வெள்ளநீர் புகுந்தது. விமான நிலையத்திற்கு வந்து சேரும் சாலைகளும் நீரில் மூழ்கி இருந்தன.
கனமழை எதிரொலியால் சென்னையில் இருந்து துபாய் செல்லக்கூடிய 5 விமானங்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன. இதேபோல், மறு மார்க்கத்தில் இருந்து சென்னை வரும் 5 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் பெய்த கனமழையால் இன்று இரண்டாவது நாளாக சென்னையில் இருந்து விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து துபாய் செல்லும் விமானம் ரத்து தொடர்பாக தகவல் தெரிவிக்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது.
துபாய் செல்ல வந்த 300க்கும் மேற்பட்ட பயணிகள் விமான நிறுவன கவுன்டரில் வாக்குவாதம் நடைபெற்றது. விமான நிறுவன அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுவதாக பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
- சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து துபாய் செல்ல இருந்த இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வெடிகுண்டு மிரட்டல் காரணமாக இன்று காலை 7.20 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம் தாமதம் ஏற்பட்டுள்ளது. விமானத்தில் சுமார் 160 பயணிகள் இருந்த நிலையில், வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஆலந்தூர்:
சென்னையில் இருந்து அகமதாபாத்துக்கு இன்று காலை 6.50 மணிக்கு விமானம் புறப்பட தயாராக இருந்தது. 179 பயணிகள் அதில் இருந்தனர்.
ஓடுபாதையில் விமானம் சென்று கொண்டு இருந்தபோது எந்திரத்தில் கோளாறு இருப்பதை விமானி கண்டு பிடித்தார். உடனடியாக விமானத்தை மேலும் இயக்காமல் ஓடுபாதையிலேயே நிறுத்தி விட்டு விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து பயணிகள் அனைவரும் பத்திரமாக இறக்கப்பட்டு ஓய்வு அறையில் தங்க வைக்கப்பட்டனர்.
விமானத்தில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள். மாற்று விமானத்தில் பயணிகள் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று விமான நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதனால் குறித்த நேரத்துக்கு செல்ல முடியாமல் பயணிகள் தவித்தனர்.
விமானத்தில் கோளாறு ஏற்பட்டு இருப்பதை விமானி கடைசி நேரத்தில் கண்டு பிடித்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. #chennaiairport #chennaiflight