என் மலர்
நீங்கள் தேடியது "Chennai Flood"
- சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் முதல் கட்டமாக முடிக்கப்பட்ட பிறகு இப்போது தான் ஓரளவு கனமழை பெய்துள்ளது.
- சென்னையில் கனமழை தொடரும் நிலையில், மீட்பு மற்றும் நிவாரணபணிகளை தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் விரைவுபடுத்த வேண்டும்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு பெய்த மழையால், மாநகரத்தின் பெரும்பான்மையான பகுதிகள் வெள்ளக்காடாக மாறியிருக்கின்றன.
சென்னை மாநகரத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் அவர்களின் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டாலும் மற்ற பகுதிகளை மாநகராட்சியோ, அமைச்சர்களோ கண்டுகொள்ளவில்லை. மழை பாதிப்புகள் குறித்து மாநகராட்சி அறிவித்துள்ள தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தாலும் உடனடியாக நடவடிக்கை இல்லை.
சென்னையில் பெய்துள்ள மழை ஒப்பீட்டளவில் அதிகம் இல்லை. அதிலும் குறிப்பாக கடந்த இரு ஆண்டுகளாக சென்னை மாநகரத்தில் 800 கி.மீக்கும் கூடுதலான தொலைவுக்கு மழைநீர் வடிகால்கள் புதிதாக அமைக்கப்பட்ட நிலையில், சென்னையில் மழைநீர் தேங்காது என்று பலரும் நம்பிக் கொண்டிருந்தனர். ஆனால், அந்த நம்பிக்கை நேற்றைய மழையில் பொய்த்துப் போயிருக்கிறது. மழைநீர் வடிகால்கள் அமைக்கப்படுவதற்கு முன்பாக ஒவ்வொரு பகுதியிலும் எந்த அளவுக்கு தண்ணீர் தேங்கி நின்றதோ, இப்போதும் அதே அளவுக்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது.
நேற்று மாலை தொடங்கி இரவு வரை மிக அதிக மழை பெய்தாலும், இரவில் மழை பெய்யவில்லை. ஆனாலும், மழை நீர் வடியவில்லை. இன்று காலை முதல் மீண்டும் கடுமையான மழை பெய்யத் தொடங்கியுள்ள நிலையில், அடுத்து வரும் நாட்களில் சென்னை மாநகரின் நிலை என்னவாகுமோ? என்ற அச்சமும், கவலையும் ஏற்படுகிறது.
சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் முதல் கட்டமாக முடிக்கப்பட்ட பிறகு இப்போது தான் ஓரளவு கனமழை பெய்துள்ளது. இந்த மழையால் பெருக்கெடுத்த தண்ணீரை வெளியேற்ற மழைநீர் வடிகால்கள் திணறுகின்றன என்பது தான் உண்மை. எனவே, மழைநீர் வடிகால்களின் அமைப்பு, அமைக்கப்படும் முறை ஆகியவற்றை ஆய்வு செய்து, தேவையான மாற்றங்களை செய்ய வேண்டும்.
சென்னையில் கனமழை தொடரும் நிலையில், மீட்பு மற்றும் நிவாரணபணிகளை தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் விரைவுபடுத்த வேண்டும். மழை-வெள்ளத்தால் துண்டிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் மக்களை மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- தமிழக அரசின் தவறுகளுக்கு பொதுமக்கள் கொடுத்துக் கொண்டிருக்கும் விலை மிக அதிகம்.
- ஒவ்வொரு அரசும், மழைநீர் வடிகால் பணிகள் என்று கூறி செலவிட்ட பல்லாயிரம் கோடி நிதி என்ன ஆனது என்ற கேள்வியை பொதுமக்கள் கேட்கத் தொடங்கிவிட்டார்கள்.
சென்னை:
தமிழக பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
சென்னை மாநகரம், உலக அளவில் பல்வேறு துறைகளில் முக்கியமான நகரங்களில் ஒன்று. ஆனால், ஒவ்வொரு ஆண்டும், மழைக்காலத்தில் சென்னை தத்தளிப்பது வாடிக்கை ஆகிவிட்டது. தமிழக அரசின் தவறுகளுக்கு பொதுமக்கள் கொடுத்துக் கொண்டிருக்கும் விலை மிக அதிகம்.
அதிகாரத்தில் இருக்கும் அரசியல்வாதிகள், மழை வெள்ளத்தில் வேட்டியை மடித்துக் கட்டி இறங்கி நடந்தால் மட்டுமே போதும் என்ற எண்ணத்தில் இருப்பதால், ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை என்ற நிலையே இருக்கிறது. ஒவ்வொரு அரசும், மழைநீர் வடிகால் பணிகள் என்று கூறி செலவிட்ட பல்லாயிரம் கோடி நிதி என்ன ஆனது என்ற கேள்வியை பொதுமக்கள் கேட்கத் தொடங்கிவிட்டார்கள்.
சென்னை மாநகரம், உலக அளவில் பல்வேறு துறைகளில் முக்கியமான நகரங்களில் ஒன்று. ஆனால், ஒவ்வொரு ஆண்டும், மழைக்காலத்தில் சென்னை தத்தளிப்பது வாடிக்கை ஆகிவிட்டது. தமிழக அரசின் தவறுகளுக்கு பொதுமக்கள் கொடுத்துக் கொண்டிருக்கும் விலை மிக அதிகம்.
— K.Annamalai (@annamalai_k) November 30, 2023
அதிகாரத்தில் இருக்கும் அரசியல்வாதிகள், மழை…
அதிகாரிகள் கடுமையாக உழைத்தும், நிலைமையை முழுமையாகச் சீர்செய்ய முடியவில்லை என்றால், அடிப்படையிலேயே தவறு இருக்கிறது என்பதுதான் பொருள். சென்னை முழுவதும் பழுதான சாலைகளும், எங்கும் தேங்கி நிற்கும் மழைநீரும், இத்தனை ஆண்டு காலமாக, தமிழக ஆட்சியாளர்கள் செய்ததாகக் கூறிய மழை நீர் வடிகால் பணிகளைக் கேள்விக்குரியதாக்கியிருக்கின்றன.
தமிழக அரசு பாடம் கற்க, இன்னும் எத்தனை மழைக் காலங்கள் வேண்டும்?
இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.
- ஆட்சிக்கு வந்த இரண்டரை ஆண்டுகளில் மழைநீர் பாதிப்பிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க எவ்வித நடவடிக்கைகளையும் திமுக அரசு மேற்கொள்ளவில்லை.
- தோண்டப்பட்ட பள்ளங்கள் முறையாக மூடப்படாமல் இருப்பதன் மூலம் விபத்து ஏற்படும் அபாயமும் இருப்பதாக சென்னையைச் சேர்ந்த பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
சென்னை :
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இடைவிடாமல் பெய்துவரும் கனமழை காரணமாக சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீரால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வீடுகளுக்குள்ளேயே முடங்கியிருக்கும் சூழல் உருவாகியுள்ளது.
ஆட்சிக்கு வந்த இரண்டரை ஆண்டுகளில் மழைநீர் பாதிப்பிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க எவ்வித நடவடிக்கைகளையும் திமுக அரசு மேற்கொள்ளவில்லை என்பதற்கு முதலமைச்சர் அவர்களின் தொகுதியான கொளத்தூரில் குளம்போல தேங்கியிருக்கும் மழைநீரே சிறந்த உதாரணம் .
சாலைகள் மற்றும் குடியிருப்புகளை சூழந்திருக்கும் மழைநீரால் சுகாதார சீர்கேடு நிலவுவதோடு, மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் முறையாக மூடப்படாமல் இருப்பதன் மூலம் விபத்து ஏற்படும் அபாயமும் இருப்பதாக சென்னையைச் சேர்ந்த பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
எனவே, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் தேங்கியிருக்கும் மழைநீரை வெளியேற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதோடு, மழைநீர் பாதிப்பிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க நிரந்தர வெள்ளத் தடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.
- சென்னையில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.
- காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் குன்றத்தூர் தாலுகாக்களிலும் நாளை விடுமுறை.
மிச்சாங் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்தது.
பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் எல்லா இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. தற்போது மழை ஓய்ந்துள்ள நிலையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கனமழை காரணமாக திங்கள், செவ்வாய், புதன் ஆகிய 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது.
தொடர்ந்து, கனமழை, வெள்ள பாதிப்பு காரணமாக சென்னையில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டது.
புயல், வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்படும் நிலையில், மாணவர்களின் நலன் கருதி நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை விடுத்து மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் அறிவித்துள்ளார்.
இதேபோல், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் குன்றத்தூர் தாலுகாக்களிலும் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் 6 தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- அமைச்சர் ராஜ்நாத் சிங், ஹெலிகாப்டரில் பாதிப்புகளை பார்வையிட உள்ளார்.
- மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்கிறார்.
மிக்சாங் புயல் எதிரொலியால் சென்னையில் மழை வெளுத்து வாங்கியது. இதனால், பல்வேறு இடங்களில் மழை நீர் சூழ்ந்து வீடுகளுக்குள்ளும் புகுந்தது.
குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை இரவும் திங்கட்கிழமையும் இடைவிடாமல் 30 மணி நேரத்துக்கு மேல் அடைமழை பெய்ததால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
புயலுக்கு பிறகு தமிழக அரசு தரப்பில் மீட்பு பணிகள் ஒரு புறம் துரிதமாக நடைபெற்று வந்தாலும், இன்னும் பல இடங்களில் தண்ணீர் தேங்கி இருக்கிறது.
மின் வெட்டு, உணவு கிடைக்காமலும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை மழை வெள்ள பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை சென்னை வருகிறார்.
மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன், அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஹெலிகாப்டரில் பாதிப்புகளை பார்வையிடுகின்றனர்.
மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ராஜ்நாத் சிங் சந்திக்க உள்ளார்.
- மழை ஓய்ந்துள்ள நிலையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
- மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, படகு மூலம் நிவராண பொருட்கள் அனுப்பி வைப்பு.
மிச்சாங் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்தது.
பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் எல்லா இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. தற்போது மழை ஓய்ந்துள்ள நிலையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அமைச்சர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் களத்தில் இறங்கி ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களையும் வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். அங்குள்ள குக்ஸ் சாலை பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, படகு மூலம் நிவராண பொருட்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுப்பி வைத்தார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் கூறியிருப்பதாவது:-
கொளத்தூர், திரு. வி.க.நகர் மற்றும் எழும்பூர் தொகுதிகளில் மிச்சாங் புயல் பெருமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டேன்.
வெள்ளநீர் தேங்கியிருக்கும் நிலையில், மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும், உயிரிழப்புகளைத் தடுக்கவும்தான் சில இடங்களில் மின்சாரம் இன்னும் வழங்கப்படவில்லை.
மின் இணைப்புகள் வழங்கும் பணிகள் கவனத்தோடு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அமைச்சர்கள், அதிகாரிகள் முதல் கடைநிலைப் பணியாளர்கள் வரை மக்களைப் பாதுகாக்கக் களத்தில் ஓய்வின்றி உழைத்து வருகிறார்கள். விரைவில் நிலைமை சீரடையும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
- சமுதாய நலக்கூடங்கள், அம்மா உணவகங்கள், நிவாரண முகாம்களில் தினமும் உணவு தயாரித்து வழங்கப்படுகிறது.
- நிவாரண முகாம்கள் மட்டுமின்றி அடுக்குமாடி வீடுகளில் வசிப்பவர்களுக்கும் உணவு வினியோகம் செய்து வருகிறோம்.
சென்னை:
சென்னையில் பெய்த கனமழை பாதிப்பில் 4-வது நாளாக இன்னும் பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டுதான் இருக்கிறது. அவர்களுக்கு மாநகராட்சி சார்பில் உணவுகள் வினியோகிக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
இது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-
சென்னையில் சில தாழ்வான பகுதிகளில் மண்டலம் வாரியாக 369 பாயிண்ட்களில் தண்ணீர் தேங்கி இருப்பதால் அதை அகற்றி வருகிறோம். ஒரு மணி நேரத்துக்கு 25 பாயிண்ட் அளவில் மழைநீர் வடிகிறது.
எங்களுக்கு சவாலாக உள்ள பகுதியாக பள்ளிக்கரணை, பெருங்குடி, பெரும்பாக்கம் பகுதிகள் உள்ளன. சென்னைக்குள் ராயபுரம், பட்டாளம், புளியந்தோப்பு, மணலி, சடையங்குப்பம், கொரட்டூர், பெரம்பூர், ஜமாலியா பகுதிகள் உள்ளன.
சென்னையில் தேங்கிய மழைநீரை அகற்ற சென்னை மாநகராட்சி எல்லையில் 955 மோட்டார்கள் இயங்கி கொண்டிருக்கிறது. வெளி மாவட்டங்கள் மற்றும் புதிதாக வாங்கப்பட்ட 90 மோட்டார்களும் நீரை அப்புறப்படுத்தி வருகின்றன. இதில் அதிக உந்துதிறன் கொண்ட 52 மோட்டார்கள், 100 எச்.பி. மோட்டார்கள், 50 எச்.பி. மோட்டார்களும் இயங்கி கொண்டிருக்கிறது.
தண்ணீர் சூழ்ந்த பகுதிகளில் ஒரு வேளைக்கு 4 லட்சம் பேர்களுக்கு உணவு தயாரித்து வழங்கி வருகிறோம். சமுதாய நலக்கூடங்கள், அம்மா உணவகங்கள், நிவாரண முகாம்களில் தினமும் உணவு தயாரித்து வழங்கப்படுகிறது. நிவாரண முகாம்கள் மட்டுமின்றி அடுக்குமாடி வீடுகளில் வசிப்பவர்களுக்கும் உணவு வினியோகம் செய்து வருகிறோம்.
15 மண்டலங்களுக்கு நியமிக்கப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், மேற்பார்வையில் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. சென்னை மாநகரில் 85 சதவீத இடங்களில் தண்ணீர் வடிந்துள்ளது. மற்ற பகுதிகளில் தண்ணீரை வடிய வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- புயல், மழை பாதிப்புக்கு இதுவரை சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 22 பேர் பலியாகி உள்ளனர்.
- மழையால் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் 372 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சென்னை:
சென்னையில் மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளும், நிவாரண பணிகளும் முழு வீச்சில் நடந்து வருகின்றன.
வடசென்னை மற்றும் தென்சென்னை பகுதியில் மிக கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய சென்னை பகுதியில் இயல்பு நிலை திரும்பி விட்ட நிலையில் தென் சென்னையிலும், வட சென்னையிலும் வீடுகளை சூழ்ந்துள்ள வெள்ளத்தை அகற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மாதவரம், மணலி, எண்ணூர், கொரட்டூர், தாம்பரம், வேளச்சேரி, பீர்க்கங்கரணை, பெரும்பாக்கம், மடிப்பாக்கம் ஆகிய பகுதிகளில் இன்னமும் பல்லாயிரக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்து அபாயகரமான அளவில் நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் இருப்பவர்களை படகுகளின் மூலம் மீட்கும் பணி இன்று 3-வது நாளாக தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதுவரை 4,500 பேர் நேற்றும், இன்றும் படகுகள் மூலம் மீட்கப்பட்டனர். அடுக்குமாடிகளில் யாராவது சிக்கி தவிக்கிறார்களா என்பதை டிரோன்கள் மூலம் ஆய்வு செய்யும் பணி நேற்றும், இன்றும் நடந்தது. டிரோன்கள் மூலம் அதிக பாதிப்பு பகுதிகள் கண்டறியப்பட்டு மீட்பு படையினர் அனுப்பப்பட்டு வருகிறார்கள்.
தென்சென்னை பகுதியில் கடுமையான வெள்ளப்பெருக்கில் இருந்து வெளிவர முடியாமல் சிக்கி தவிக்கும் மக்களுக்கு நேற்று ஹெலிகாப்டர் மூலம் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன. இன்றும் 2-வது நாளாக விமானப் படை வீரர்கள் ஹெலிகாப்டர்களில் சென்று உணவு பொட்டலங்களை வழங்கினார்கள்.
புயல், மழை பாதிப்புக்கு இதுவரை சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 22 பேர் பலியாகி உள்ளனர். தண்ணீரை முழுமையாக அகற்றிய பிறகு பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் உயரலாம் என்று அஞ்சப்படுகிறது.
மழையால் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் 372 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இன்று காலை நிலவரப்படி சுமார் 42 ஆயிரம் பேர் முகாம்களில் உள்ளனர். அவர்களுக்கு உணவு மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
நேற்று மாலை வரை வடசென்னை, தென் சென்னை பகுதிகளில் 866 இடங்களில் மழை தண்ணீர் தேங்கி இருந்தது. நேற்று இரவு ராட்சத எந்திரங்கள் மூலம் சுமார் 60 இடங்களில் தண்ணீர் முழுமையாக அகற்றப்பட்டது. அங்கு நிவாரண பணிகள் முடுக்கி விடப்பட்டன.
இன்று காலை நிலவரப்படி இன்னமும் 800 இடங்களில் வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. அவற்றை அகற்றும் பணியும் நடந்து வருகிறது. இந்த இடங்களில் இருந்து இதுவரை சுமார் 20 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மீட்பு பணி மற்றும் நிவாரண பணிகளில் அனைத்து துறைகளையும் சேர்ந்த சுமார் 1 லட்சம் பேர் ஈடுபட்டு உள்ளனர். சென்னையில் மட்டும் சுமார் 50 ஆயிரம் பேர் நிவாரண பணிகளை மேற்கொண்டுள்ளனர். வெளி மாவட்டங்களில் இருந்து வந்திருப்பவர்களும் நிவாரண பணிகளை செய்து வருகிறார்கள்.
சென்னையில் குப்பைகளை அகற்றும் பணியில் சுமார் 25 ஆயிரம் துப்புரவு தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
மிச்சாங் புயல் மழைக்கு சுமார் 400 இடங்களில் மரங்கள் விழுந்தன. அவற்றில் நேற்று இரவு வரை சுமார் 350 இடங்களில் மரங்கள் அகற்றப்பட்டு விட்டன. 50 மரங்கள் இன்று அகற்றப்பட்டு வருகின்றன. இந்த பணி இன்று அல்லது நாளை நிறைவுபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் உள்ள 2 சுரங்கப்பாதைகளில் 16 பாதைகளில் போக்குவரத்து தொடங்கி விட்டது. இன்னும் 6 சுரங்க பாதைகள் மட்டும் சீரமைக்கப்பட வேண்டி உள்ளது.
சென்னையில் பஸ் போக்குவரத்து 90 சதவீதம் சீரடைந்து விட்டது. 488 பஸ் வழித்தடங்களில் 56 வழித் தடங்களில் மட்டும் இன்னமும் தண்ணீர் தேங்கி உள்ளது. நாளைக்குள் அந்த வழித்தடங்களும் சீராகும் என்று தெரிகிறது.
அதுபோல மின்சாரமும் தொடர்ந்து சீரமைக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. சென்னையில் 97 சதவீத இடங்களில் மின் இணைப்புகள் வழங்கப்பட்டு விட்டதாக மின் வாரியம் தெரிவித்து உள்ளது. இன்று இரவுக்குள் முழுமையாக அனைத்து பகுதிகளுக்கும் மின்சாரம் கொடுக்கப்பட்டு விடும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னையில் தினமும் சராசரியாக 19 லட்சம் லிட்டர் பால் வினியோகம் செய்யப்படும். நேற்று 14 லட்சம் லிட்டர் பால்தான் வினியோகம் செய்யப்பட்டது. 5 லட்சம் லிட்டர் பால் குறைந்ததால் கடைகளில் பால் கிடைக்காத நிலை ஏற்பட்டது.
இன்றும் 19 லட்சம் லிட்டர் பால் வழங்கப்படவில்லை. இதனால் இன்றும் பல பகுதிகளில் கடைகளில் பால் கிடைக்கவில்லை. தனியார் நிறுவன பால்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டன.
முகவர்கள் மூலம் வீடுகளுக்கு வழங்கப்படும் ஆவின் பால் வினியோகம் இன்று சீரடைந்தது. நாளைக்குள் பால் வினியோகம் முழுமையாக சீரடைந்து விடும் என்று கூறப்பட்டுள்ளது.
சென்னையில் சுமார் 900 பெட்ரோல் பங்க்குகள் உள்ளன. பல இடங்களில் பெட்ரோல், டீசல் லாரிகள் வராததால் பங்க்குகள் மூடும் நிலை ஏற்பட்டது. இன்று காலை நிலவரப்படி 850 பெட்ரோல் பங்க்குகள் வழக்கம் போல் இயங்கின.
புயல், மழை காரணமாக தொலை தொடர்பு சென்னையில் கடுமையாக துண்டிக்கப்பட்டு இருந்தது. இன்று காலை 90 சதவீதம் தொலைத்தொடர்பு சீரமைக்கப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பல பகுதிகளில் மழைநீர் வடிந்து வந்தாலும் இன்னும் 3500 தெருக்களில் தண்ணீர் வடியாமல் தேங்கி கிடக்கிறது.
குறிப்பாக பெரம்பூர், ஜமாலியாவை சுற்றி உள்ள பகுதிகள், ராயபுரம், வியாசர்பாடியை சுற்றி உள்ள பகுதிகள் பட்டாளம், புளியந்தோப்பு அங்காளம்மன் கோவில் தெரு, மணலி சடையாங்குப்பம், கொரட்டூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகள், பாடி, அயப்பாக்கம் கொளத்தூரில் சில பகுதிகள், மாணிக்கம் நகர் சுரங்கப்பாதை வியாசர்பாடி சுரங்கப்பாதை, கணேசபுரம், ஸ்டான்லி நகர், ரங்கராஜபுரம், சுரங்கப் பாதை உள்ளிட்ட பகுதிகளிலும் தண்ணீர் இன்னும் வடியாமல் உள்ளது.
இது தவிர சிட்கோ நகர், அம்பத்தூர் மேனாம்பேடு, கருக்கு பகுதிகளிலும் மழை நீர் வடியவில்லை. மிக அதிக அளவு தண்ணீர் நிறைந்த பகுதிகளாக பள்ளிக்கரணை, பெருங்குடி பெரும்பாக்கம், அனகாபுத்தூர், வேளச்சேரி, முடிச்சூர், சேலையூர், சோழிங்கநல்லூர், நாவலூர், திருவேற்காடு, ராஜாங்குப்பம், நசரத்பேட்டை, மாங்காடு, ஓம் சக்தி நகர் பகுதிகளில் வெள்ளநீர் இன்னும் வடியாமல் தத்தளித்த வண்ணம் உள்ளது.
இங்குள்ள மக்கள் உணவின்றி தவியாய் தவித்து வருகின்றனர்.
- சென்னையைச் சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் வெள்ளம் வடியாமல், மழை நீர் வடியாமல், கழிவுநீருடன் கலந்து தொற்று நோய் பரவும் அபாயத்தில் உள்ளது.
- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலைகளை உடனடியாக சீரமைக்க வலியுறுத்துகிறேன்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்குப் பருவமழை துவங்குவதற்கு முன்பாக சென்னை மற்றும் பிற மாவட்டங்கள் உட்பட, மாநில அளவில் புயல் அல்லது கனமழை குறித்து எனது தலைமையிலான அரசில் முன்னெச்சரிக்கைக் கூட்டங்கள் நடத்தப்படும்.
சென்னை மாநகரத்தில் ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஐஏஎஸ் அதிகாரிகள், கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டு, வடகிழக்குப் பருவமழையினை எதிர்கொள்வதற்கு தக்க ஆலோசனை வழங்கப்படும். ஒவ்வொரு மண்டலத்திற்கும் நியமிக்கப்படும் ஐஏஎஸ் அதிகாரிகள் அந்த மண்டலத்தில் உள்ள வார்டுகளுக்கு நேரடியாகச் சென்று அங்குள்ள வருவாய், மாநகராட்சி, காவல்துறை, பெருநகர குடிநீர் வாரியம், நெடுஞ்சாலை, பொதுப்பணி, மக்கள் நல்வாழ்வுத் துறை,
மின்சார வாரியம் போன்ற தொடர்புடைய அதிகாரிகளின் ஆலோசனைகளைப் பெற்று, தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கினால் அதை எப்படி அப்புறப்படுத்துவது என்பது பற்றியெல்லாம் முன்கூட்டியே ஆய்வு செய்து, மழைக் காலங்களில் தேங்கும் நீரை உடனடியாக அப்புறப்படுத்தத் திட்டமிடுவார்கள்.
இப்பணிகள் எல்லாம் வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன்னதாகவே திட்டமிடப்படும். மேலும், கால்வாய்களில் தேங்கியுள்ள மண் (சில்ட்) பருவமழைக்கு முன்னதாகவே அப்புறப்படுத்தப்படும்.
இந்திய வானிலை ஆய்வு மையம் கனமழை மற்றும் புயல் பற்றிய தகவலை வழங்கியவுடன், பாதுகாப்பு ஏற்பாடுகள், நிவாரண மையங்கள், உணவு ஏற்பாடுகள், சுகாதார வசதிகள், படகுகள் தயார் நிலையில் இருப்பதோடு, மீட்புப் பணிகளில் ஈடுபட மாநில மற்றும் மத்திய அரசின் பணியாளர்களை தயார் நிலையில் வைத்திருப்பார்கள். இதனால், மீட்பு பணிகள் எங்கள் ஆட்சியில் சுணக்கமின்றி நடைபெற்றது.
மேலும் எங்கள் அரசு, மக்களுக்கு 5 நாட்களுக்குத் தேவையான மருந்துகள், உணவுப் பொருட்கள், காய்கறிகள், டார்ச்லைட், மெழுகுவர்த்தி, குழந்தைகளுக்குத் தேவையான பால் பொருட்கள், போதுமான அளவு குடிநீர் மற்றும் அவர்களின் வீடுகளில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளை நிரப்பிக்கொள்வது போன்றவற்றையும் மற்றும் முக்கிய ஆவணங்கள், மாணவர்களின் பள்ளிச் சான்றிதழ்கள் போன்றவற்றை பாதுகாப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவிப்பு செய்யும். ஆனால், இந்த விடியா திமுக அரசு முன்னெச்சரிக்கையினையும் மக்களிடம் செய்யத் தவறிவிட்டது.
இந்திய வானிலை மையம் ஐந்து நாட்களுக்கு முன்பே ரெட் அலர்ட் எச்சரிக்கை வழங்கிய பின்பும், விடியா திமுக அரசு மழை பெய்த பின்பு ராட்சத மோட்டாருக்கு ஏற்பாடு செய்வதும், மற்ற ஏற்பாடுகளை செய்வதும் இந்த பொம்மை முதலமைச்சரின் நிர்வாகத் திறமையின்மையை வெளிப்படுத்துகிறது.
4.12.2023 அன்று தலைமைச் செயலாளர் தொலைக்காட்சிகளுக்கும், பத்திரிகைகளுக்கும் பேட்டி அளித்தபோது, மழை நீரை அகற்றுவதற்கு பல்வேறு இடங்களில் ராட்சத மோட்டார்களை ஏற்பாடு செய்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். இந்த ராட்சத மோட்டார்கள் எப்போது வந்து தேங்கிய தண்ணீரை அகற்றும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. ஏற்கெனவே, தேங்கிய தண்ணீரை அகற்றுவதற்கு ராட்சத மோட்டார்கள் தயார் நிலையில் இல்லை என்பதையே இது காட்டுகிறது. மேலும், தேங்கியுள்ள வெள்ள நீரை வெளியேற்றுவதற்கு, வாடகைக்கு வாங்கப்பட்ட சிறுசிறு மோட்டார் பம்ப் செட்டுகளுக்கு டீசல் வாங்குவதற்கு பணம் தரவில்லை என்பதால் பல இடங்களில் அந்த மோட்டார்கள் இயங்காமல் இருந்ததாக அப்பகுதி மக்கள் விடியா திமுக அரசை குறை கூறிய நிகழ்வுகளும் 5.12.2023 அன்று நடந்தன.
மழை நின்று மூன்று நாட்கள் ஆன நிலையில், இப்போது வரை சென்னை மாநகரப் பகுதிகளில் உள்ள சுமார் 38,500 பிரதான உட்புற சாலைகளில், சுமார் 20 ஆயிரம் சாலைகளில் மழை வெள்ளம் தேங்கியுள்ளது. அதேபோல், சென்னையைச் சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் வெள்ளம் வடியாமல், மழை நீர் வடியாமல், கழிவுநீருடன் கலந்து தொற்று நோய் பரவும் அபாயத்தில் உள்ளது.
எங்கள் ஆட்சிக் காலத்தில், கனமழை மற்றும் புயல் காலங்களில் முன்னெச்சரிக்கையாக நிவாரண முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, அங்கு தங்க வைக்கப்படுபவர்களுக்கு உணவு மற்றும் பாய், போர்வை போன்ற பொருட்களும் வழங்கப்படும். ஆனால், தற்போது இந்த ஆட்சியில் 5.12.2023 அன்று தான் ஒருசில இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டதாக செய்திகள் தெரிய வருகின்றன.
5.12.2023 அன்று வெள்ளத்தில் மூழ்கிய பகுதிகளை நான் நேரில் சென்று பார்வையிட்டு, கழகத்தின் சார்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினேன். 6.12.2023 காலை வரை அரசின் சார்பில் எந்தவிதமான நிவாரணப் பொருட்களும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படவில்லை என்று தெரிய வருகிறது. எனவே, உடனடியாக நிவாரண உதவிகளை வழங்கிட வலியுறுத்துகிறேன்.
6.12.2023 அன்று வெளிவந்த மாலை பத்திரிகைகள், 24 மணிநேர ஊடகச் செய்திகள் மற்றும் சமூக ஊடகங்கள் அனைத்திலும், இன்னும் பல பகுதிகள் மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளதை சுட்டிக்காட்டி உள்ளன. குறிப்பாக, ஒரு லட்சம் வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது என்று செய்திகள் தெரிவித்தன.
அம்பத்தூர் தொழிற்பேட்டை மற்றும் பாடி, கொரட்டூர், முகப்பேர் ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. குறிப்பாக, இந்த விடியா திமுக அரசின் இரண்டு முறை மின் கட்டண உயர்வால் ஏற்கெனவே தள்ளாடிக்கொண்டிருந்த இத்தொழிற்சாலைகளுக்குள் தற்போதைய மழை வெள்ளம் புகுந்து இயந்திரங்கள் இயங்க முடியாத நிலையில் உள்ளதாகவும், வெள்ள நீரை அகற்றி, மீண்டும் தொழிற்சாலைகள் முழுமையாக இயங்குவதற்கு குறைந்தபட்சம் ஒரு மாதமாவது ஆகும் என்று தொழிற் கூட்டமைப்பினர் மிகுந்த வேதனையுடன் தெரிவிக்கின்றனர். எனவே, இந்த விடியா திமுக அரசு இத்தொழிற்பேட்டைகளில் தேங்கியுள்ள வெள்ள நீரை உடனடியாக அப்புறப்படுத்துவதோடு, அவர்களுக்கு நிவாரணம் வழங்கவும், மின்கட்டண சலுகை அளிக்கவும் வலியுறுத்துகிறேன்.
ஒருசில இடங்களில் மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கும் பணிகளை மேற்கொண்ட இந்த விடியா திமுக அரசு, பணிகள் முடிவுற்ற கால்வாய்களை சரியான முறையில் இணைக்கத் தவறியதால், தாழ்வான பகுதிக்கு குறுகிய காலத்தில் அதிக தண்ணீர் தேங்கியுள்ளது என்று தெரிய வருகிறது. எனவே, இதை உடனடியாக ஆய்வு செய்ய வலியுறுத்துகிறேன். இந்த மழையினால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டதற்கு நிர்வாகத் திறமையற்ற விடியா திமுக அரசே பொறுப்பேற்க வேண்டும்.
இந்த விடியா திமுக அரசின் முதலமைச்சர் மற்றும் மந்திரிகளும் வாய்ச் சொல்லில் ஜாலம் காட்டுகிறார்கள். இதுபோன்ற இயற்கைச் சீற்றங்களை முறையாகக் கையாளாமல், இன்று இம்மழையினால் பொதுமக்கள் அவதியுற்று வருகின்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த விடியா திமுக அரசின் பொம்மை முதலமைச்சரும், மந்திரிகளும் ஊடகங்களுக்கு தங்கள் முகங்களை காண்பிப்பதற்கு முனைப்பாக உள்ளனர். இதுவே அம்மா ஆட்சியில், எங்களது அமைச்சர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அனைத்துத் துறை அலுவலர்களுடன் தங்கி நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.
இந்த மழையின் போது மின் கம்பங்கள், மின் கோபுரங்கள் பெருமளவில் சேதமடைந்ததாகத் தெரியவில்லை. ஆனாலும், மின் துண்டிப்பு முழுமையாக நடைபெற்றது. மின் இணைப்பு இல்லாத காரணத்தால் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வீடுகளில் உள்ள பொதுமக்கள், மின் மோட்டார்கள் இயங்காமல் குடிதண்ணீருக்கும், இயற்கை உபாதைகளுக்கும் போதிய தண்ணீர் இன்றி கடும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். மேலும், இந்த விடியா திமுக அரசு திட்டமிட்டே மழையின் பாதிப்புகள் மற்றும் இந்த அரசின் அவலங்களை, ஊடங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் வாயிலாக மக்கள் தெரிந்துகொள்ளக் கூடாது என்ற எண்ணத்துடன் 6.12.2023 மாலை வரை 50 சதவீத மின் இணைப்புகள் வழங்கப்படவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும், பால் கிடைக்காமல் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி உள்ளனர். மின்சாரமும் இல்லாமல், ஒருசிலர் வாங்கிய அதிக எண்ணிக்கையிலான பாலும் கெட்டுவிட்டதாகவும், இதற்கு இந்த விடியா திமுக அரசே பொறுப்பு என்றும், பாலுக்காக மக்கள் பால் விற்பனையாளர்களுடன் சண்டை போடுகின்ற நிகழ்வுகளை செய்திகள் தெரிவிக்கின்றன. எனவே, விடியா திமுக அரசு, உடனடியாக அனைத்து இடங்களுக்கும் மின் இணைப்பை வழங்க வலியுறுத்துகிறேன்.
எங்கெங்கு தண்ணீர் தேங்கி உள்ளதோ, அதனை உடனடியாக சிறப்பு முயற்சி எடுத்து மழைநீரை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலைகளை உடனடியாக சீரமைக்க வலியுறுத்துகிறேன்.
வெள்ள நீரை அப்புறப்படுத்தியவுடன், உடனடியாக ப்ளீச்சிங் பவுடர், பினாயில் கொண்டு சுத்தம் செய்து, நோய்த் தொற்று ஏற்படா வண்ணம் துப்புரவுப் பணிகளை மேற்கொள்வதுடன், 500 வீடுகளுக்கு ஒரு முகாம் என்று சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்திட வலியுறுத்துகிறேன்.
சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆவின் பால் விநியோகத்தை சீர் செய்யவும், அண்டை மாநிலங்களில் இருந்து பாலை உடனடியாகக் கொள்முதல் செய்து மக்களுக்குத் தங்கு தடையின்றி பால் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்துகிறேன்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் வகையில் அரிசி, பருப்பு, பால், மளிகைப் பொருட்கள் மற்றும் தேவையான மருத்துவ வசதிகளை உடனடியாக வழங்கிட வலியுறுத்துகிறேன்.
சென்னை மாநகரில் சுமார் 4,000/- கோடி ரூபாய் மதிப்பீட்டில் வெள்ளநீர் வடிகால் பணிகள் நடந்தாக இந்த விடியா திமுக அரசு மக்களை ஏமாற்றி வருகிறது. நடந்து முடிந்த பணிகளின் பட்டியலை வெளியிட இந்த அரசு தயாரா? பணி முடிந்த ஒவ்வொரு இடத்துக்கும் செலவிட்ட தொகை கணக்கை தரத் தயாரா? பணிகள் 100 சதவீதம் முடிந்த இடங்கள், தொடர்ந்து பணி நடைபெறும் இடங்கள் குறித்து வெள்ளை அறிக்கை ஒன்றை விடியா திமுக அரசின் முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட வேண்டும்.
ஏதாவது சொல்லி, ஏமாற்றி தப்பித்துவிடலாம் என்று இந்த நிர்வாகத் திறனற்ற ஆட்சியாளர்கள் நினைத்தால், அதற்குண்டான பதிலை பாதிக்கப்பட்ட மக்கள் விரைவில் வெளிப்படுத்துவார்கள் என்று எச்சரிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- பாதிப்படைந்த பல பகுதிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்று நிவாரண உதவிகளை மக்களுக்கு வழங்கினார்.
- வெள்ள பாதிப்பில் இருந்து மக்களை மீட்க அரசு எந்திரம் முடுக்கி விடப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னையில் மிச்சாங் புயலால் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பு நிவாரண பணிகளில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டு உள்ளது போல மத்திய அரசும் தனது தரப்பில் நிவாரண உதவிகளை செய்து வருகிறது.
இந்த நிலையில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், இங்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பார்வையிடுவதற்காக சென்னைக்கு இன்று வந்தார்.
இதற்காக மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் டெல்லியில் இருந்து இன்று காலை 9.30 மணிக்கு விமானம் மூலம் புறப்பட்டார். பிற்பகல் 12.15 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தார்.
அங்கு அவரை அமைச்சர் தங்கம் தென்னரசு வரவேற்றார். அதன்பிறகு மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் ராணுவ ஹெலிகாப்டரில் வெள்ளப்பாதிப்பு பகுதியை பார்வையிட்டார். அவருடன் மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை இணை மந்திரி எல்.முருகன், தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆகியோர் உடன் சென்றிருந்தனர்.
பிற்பகல் 12.20 மணி முதல் 1.10 மணிவரை பாதிக்கப்பட்ட பகுதிகளை அவர்கள் பார்வையிட்டனர்.
மழை பாதித்த பகுதிகளை சுமார் 30 நிமிடங்கள் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் ஹெலிகாப்டரில் பறந்தபடி ஆய்வு செய்தார். பின்னர் ஐ.என்.எஸ். அடையாறில் ராஜ்நாத் சிங்கின் ஹெலிகாப்டர் இறங்கியதும் அங்கிருந்து கார் மூலம் தலைமைச் செயலகத்திற்கு மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் வந்தார். அங்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.
மதியம் 1.30 மணி முதல் 2 மணி வரை மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்கிற்கு, மிச்சாங் புயல் மழை ஏற்படுத்திய பாதிப்புகள் பற்றியும், அதை எதிர்கொண்டு தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நிவாரண பணிகள் பற்றியும் தலைமைச் செயலகத்தில் வீடியோ படக்காட்சி மற்றும் புகைப்படங்கள் காண்பிக்கப்படுகிறது.
பின்னர் தலைமைச் செயலகத்தில் இருந்து பிற்பகல் 2 மணிக்கு மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் புறப்படுகிறார். 2.30 மணிக்கு சென்னை விமான நிலையத்திற்கு செல்கிறார். அங்கிருந்து அவர் 2.40 மணிக்கு விமானம் மூலம் புறப்பட்டு மாலை 5.25 மணிக்கு டெல்லி சென்றடைகிறார்.
- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி வருகிறார்.
- பல்லாவரம், பம்மல் வழியாக அனகாபுத்தூர் சென்று வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டார்.
சென்னை:
மிச்சாங் புயல் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தி விட்டது.
சென்னை மற்றும் புறநகரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி வருகிறார்.
நேற்று முன்தினம் சென்னை, கண்ணப்பர் திடல், ஓட்டேரி உள்ளிட்ட பல பகுதிகளுக்கு சென்று நிவாரண உதவிகள் வழங்கினார். நேற்று 2-வது நாளாக தரமணி, துரைப்பாக்கம் பகுதிகளுக்கு சென்று நிவாரண பொருட்களை வழங்கினார். நேப்பியர் பாலம் அருகே கூவம் ஆற்றின் முகத்துவாரம் பகுதிக்கும் சென்று பார்வையிட்டார்.
இன்று 3-வது நாளாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்லாவரம் பகுதிக்கு சென்று வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டார்.
பல்லாவரம், பம்மல் வழியாக அனகாபுத்தூர் சென்று வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டார்.
கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனகாபுத்தூரில் ஏற்பாடு செய்திருந்த நிவாரண முகாமில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுக்கு போர்வை, வேட்டி, சேலை, அரிசி, பிரட், மளிகை பொருட்கள், பால் மற்றும் சாப்பாடும் வழங்கினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் குறு-சிறு தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் அமைச்சர் சக்கரபாணி, பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி ஆகியோர் வெள்ள பாதிப்பு குறித்து எடுத்துக் கூறினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ., கலெக்டர் ராகுர் நாத், தாம்பரம் மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் கோ.காமராஜ், தி.மு.க. பகுதி செயலாளர்கள் நரேஷ்கண்ணா, வே.கருணாநிதி, பல்லாவரம் இ.ஜோசப் அண்ணாதுரை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- மிச்சாங் புயல் பாதிப்புகளை பார்வையிட மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் இன்று சென்னை வந்தார்.
- மழை பாதித்த பகுதிகளை சுமார் 30 நிமிடங்கள் ஹெலிகாப்டரில் பறந்தபடி அவர் ஆய்வு செய்தார்.
சென்னை:
மிச்சாங் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிடுவதற்காக மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று சென்னை வந்தார். மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் ராணுவ ஹெலிகாப்டரில் வெள்ள பாதிப்பு பகுதியை பார்வையிட்டார். அவருடன் மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை இணை மந்திரி எல்.முருகன், தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆகியோர் உடன் சென்றிருந்தனர்.
பிற்பகல் 12.20 மணி முதல் 1.10 மணிவரை பாதிக்கப்பட்ட பகுதிகளை அவர்கள் பார்வையிட்டனர். மழை பாதித்த பகுதிகளை சுமார் 30 நிமிடங்கள் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் ஹெலிகாப்டரில் பறந்தபடி ஆய்வு செய்தார். அங்கிருந்து கார் மூலம் தலைமைச் செயலகத்திற்கு மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் வந்தார். அங்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.
இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் முதல் மந்திரி முக ஸ்டாலின் மற்றும் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது ராஜ்நாத் சிங் கூறியதாவது:
நான் ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு மேற்கொண்டேன். தொடர்ந்து முதலமைச்சரைச் சந்தித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தினேன்.
தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும். தமிழக மக்களின் நல்வாழ்வுக்கு இந்திய அரசு உறுதிபூண்டுள்ளது என்பதை பிரதமர் சார்பாக உறுதியளிக்கிறேன்.
தமிழ்நாடு மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு இரண்டாம் தவணையாக ரூ.450 கோடியை வழங்குமாறு உள்துறை அமைச்சகத்திற்கு பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
நகர்ப்புற வெள்ளப் பிரச்சினையை சென்னை சமீப வருடங்களில் அடிக்கடி சந்தித்து வருவதால், நகர்ப்புற வெள்ள மேலாண்மை நடவடிக்கைகளுக்காக மத்திய அரசு ரூ.510 கோடி நிதியுதவிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
மழை வெள்ள பாதிப்பில் இருந்து மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளனர் என தெரிவித்தார்.
#WATCH | Defence Minister Rajnath Singh conducts an aerial survey of flood-affected areas of Tamil Nadu #CycloneMichuang pic.twitter.com/dmXUSpJS2c
— ANI (@ANI) December 7, 2023