என் மலர்
நீங்கள் தேடியது "Chennai ICF"
- மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களை சந்தித்தார்.
- ஹைப்பர்லூப் தொழில்நுட்பம் முழுக்க முழுக்க சென்னையில் உருவாக்கப்படுகிறது.
சென்னையில் ஐ.ஐ.டி. மாணவர்கள் உருவாக்கி இருக்கும் ஹைப்பர்லூப் தொழில்நுட்ப பணிகளை மத்திய ரெயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று ஆய்வு செய்தார். குறைந்த காற்றழுத்த குழாயில் அதிவேகமாக பயணிக்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்ட போக்குவரத்து முறை தான் ஹைப்பர்லூப் என அழைக்கப்படுகிறது.
இது உராய்வு மற்றும் எதிர்ப்பை குறைக்க மெக்னடிக் லீவியேஷன் (காந்த சக்தியில் மிதந்து செல்வது) மற்றும் உந்துவிசையை பயன்படுத்தி தற்போதைய போக்குவரத்து முறைகளை விட பலமடங்கு அதிவேகமாக செல்லும் திறனை ஹைப்பர்லூப் கொண்டிருக்கிறது.
தற்போதைய சோதனைகளின் படி ஹைப்பர்லூப் மூலம் மணிக்கு அதிகபட்சம் 1000 கிலோமீட்டர்கள் வேகத்தில் பயணிக்க முடியும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி ஹைப்பர்லூப் பயன்படுத்தி சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு கிட்டத்தட்ட 15 முதல் 20 நிமிடங்களில் சென்றடைய முடியும்.
இதற்காக சென்னையில் உள்ள ஐ.ஐ.டி. மெட்ராஸ் ஆய்வு குழு ஹைப்பர்லூப் பாட் ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்தத் திட்டம் மத்திய ரெயில்வே அமைச்சகத்துடன் இணைந்து உருவாகி வருகிறது. இந்த சோதனையை ஆய்வு செய்த மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "ஹைப்பர்லூப் ஒரு புதிய பரிசோதனை. இதில், ஒரு வெற்றிடம் உருவாக்கப்படுகிறது. இந்த பாட் வழக்கமாக ரெயில்கள் தண்டவாளத்தில் இயக்கப்படுவதை போல் இல்லாமல், காந்த லீவியேஷன் மூலம் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. தற்போது இந்தத் திட்டம் சோதனை நிலையில் உள்ளது. இந்த திட்டத்தை உருவாக்க ஐ.ஐ.டி. மெட்ராஸ் எங்களுக்கு ஆதரவளித்து வருகிறது," என்று தெரிவித்தார்.
தற்போது பரிசோதனை கட்டத்தில் உள்ள ஹைப்பர்லூப் தொழில்நுட்பம் முழுக்க முழுக்க சென்னையிலேயே, பெரும்பாலும் உள்நாட்டு தொழில்நுட்பங்களாலேயே உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்தத் திட்டம் சென்னையிலேயே துவங்கிய நிலையில், ஹைப்பர்லூப் தொழில்நுட்பம் முழுக்க முழுக்க சென்னை ஐ.சி.எஃப்.-இல் உருவாக்கப்பட உள்ளது.
Longest Hyperloop tube in Asia (410 m)… soon to be the world's longest.@iitmadras pic.twitter.com/kYknzfO38l
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) March 16, 2025


இந்தியாவில் ஓடும் ரெயில்களின் வேகத்தை அதிகரித்து வெளிநாடுகளில் உள்ளதைப்போல் பயண நேரத்தை மிச்சப்படுத்தும் வகையில் புல்லட் ரெயில் சேவையை விரைவில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
அவ்வகையில், கடந்த ஆண்டில் பல வழித்தடங்களில் மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் ரெயில்கள் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இதற்காக அதிவிரைவு ரெயில் பெட்டிகள் தயாரிக்க வெளிநாட்டு நிறுவனங்களிடம் டெண்டர் கோரப்பட்டது.
ஆனால், வெறும் 315 பெட்டிகளை தயாரிக்க எந்த நிறுவனமும் முன்வராததால் வெளிநாட்டு தொழில்நுட்பத்துடன் இந்தியாவில் தயாரிக்க தீர்மானிக்கப்பட்டது. முதல்கட்டமாக 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரு ரெயில்களுக்கான பெட்டிகளை சென்னை வில்லிவாக்கம் அருகில் உள்ள இணைப்பு பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கும் பணிகள் தொடங்கியது.
'Train-2018' என பெயரிடப்பட்டுள்ள இந்த ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு முதல் ரெயில் அழகாக நகர்ந்து செல்லும் வீடியோ யூ டியூப் மற்றும் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
முற்றிலும் குளிர்சாதன வசதி, பயோ கழிப்பறைகள், ரெயிலின் உள்ளே இலவச வைஃபை வசதி, விமானத்தில் உள்ளதுபோல் தானியங்கி கதவுகள், சொகுசான இருக்கைகள், ஓடும் ரெயிலினுள் முதல் பெட்டியில் இருந்து கடைசி பெட்டிவரை நடந்து செல்லும் வசதி, எவ்வளவு வேகத்தில் சென்றாலும் கடினமான அதிர்வு மற்றும் குலுங்கல்களை தவிர்க்கும் ஷாக் அப்சார்பர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த ரெயில் பெட்டிகளில் உள்ளன.
இதர ரெயில்களில் உள்ளதைப்போல் பெட்டிகளில் இருந்து என்ஜினை கழற்றி, மாட்டுவது போலன்றி, 16 பெட்டிகளுடன் என்ஜினும் ஒரே அமைப்பாக இணைந்தே இருக்கும் என்பது இதன் சிறப்பம்சமாகும்.