என் மலர்
நீங்கள் தேடியது "Chennai metro"
- கம்பா் தெருவில் இருந்து வரும் வாகனங்கள் ஜவஹா் சாலையை நோக்கி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
- ரமணா நகா் பிரதான தெருவில் இருந்து ஜவஹா் சாலை நோக்கி வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னை பெருநகர போக்குவரத்து போலீஸ் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-
பெரம்பூா் மாா்க்கெட் அருகே மெட்ரோ ரெயில் பணி நடைபெற உள்ளது. இப்பணி காரணமாக இன்று (சனிக்கிழமை), நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்கள் சோதனை அடிப்படையில், அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
இதன்படி, மாதவரம் நெடுஞ்சாலை, மேல்பட்டி பொன்னப்பன் தெரு, லட்சுமி அம்மன் கோவில் தெருவில் இருந்து ஜவஹா் சாலை நோக்கி வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதற்கு பதிலாக அந்த வாகனங்கள், சுப்பிரமணியம் தெருவில் திரும்பி வீர சாவா்க்கா் சாலை வழியாக செல்லலாம். அதேபோல, ஜவஹா் சாலையில் உள்ள மேற்குத் தெருக்களான ஆசாத் தெரு, திருவள்ளுவா் தெரு, ஜீவானந்தன் தெரு ஆகியவை மூடப்படும்.
இந்த தெருக்களிலிருந்து வரும் வாகனங்கள் சுப்பிரமணியம் தெரு, சுபாஷ் சந்திரபோஸ் தெரு வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
கம்பா் தெருவில் இருந்து வரும் வாகனங்கள் ஜவஹா் சாலையை நோக்கி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனவே, கம்பா் தெரு, இளங்கோ தெரு, சிதம்பரம் தெரு ஆகிய இடங்களிலிருந்து வரும் வாகனங்கள் கவுதமா் தெரு, அசோகா் தெரு வழியாக ஜவஹா் சாலை அல்லது மாதவரம் நெடுஞ்சாலை வழியாகச் சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
மேலும், ரமணா நகா் பிரதான தெருவில் இருந்து ஜவஹா் சாலை நோக்கி வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாற்றாக வாகனங்கள், எஸ்.எஸ்.வி.கோவில் சாலை, வீர சாவா்க்கா் தெரு வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அக்டோபர் மாதத்தில் 90,83,996 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.
- அதிகபட்சமாக 6.11.2024 அன்று 3,35,189 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.
சென்னை:
மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரெயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை வழங்கி வருகிறது. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் 83,61,492 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணித்துள்ளனர்.
நடப்பாண்டு ஜனவரி மாதத்தில் 84,63,384 பயணிகளும், பிப்ரவரி மாதத்தில் 86,15,008 பயணிகளும், மார்ச் மாதத்தில் 86,82,457 பயணிகளும், ஏப்ரல் மாதத்தில் 80,87,712 பயணிகளும், மே மாதத்தில் 84,21,072 பயணிகளும், ஜூன் மாதத்தில் 84,33,837 பயணிகளும், ஜூலை மாதத்தில் 95,35,019 பயணிகளும், ஆகஸ்ட் மாதத்தில் 95,43,625 பயணிகளும், செப்டம்பர் மாதத்தில் 92,77,697 பயணிகளும் மற்றும் அக்டோபர் மாதத்தில் 90,83,996 பயணிகளும் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.
அதிகபட்சமாக 6.11.2024 அன்று 3,35,189 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.
2024, நவம்பர் மாதத்தில் மட்டும் பயண அட்டைகளை (Travel Card Ticketing System) பயன்படுத்தி 27,50,030 பயணிகள், டோக்கன்களை பயன்படுத்தி 599 பயணிகள், குழு பயணச்சீட்டு (Group Ticket) முறையை பயன்படுத்தி 6,208 பயணிகள், க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 35,62,463 பயணிகள் (Online QR 1,57,016; Paper QR 18,40,921; Static QR 2,24,276; Whatsapp - 5,40,257; Paytm 3,90,030; PhonePe – 2,99,396; ONDC – 1,10,567),சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 20,42,192 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மெட்ரோ ரெயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யுஆர் குறியீடு (OR Code) பயணச்சீட்டு, பயண அட்டைகள் (Travel Card), வாட்ஸ்அப் டிக்கெட், Paytm App, PhonePe மற்றும் சிங்கார சென்னை அட்டை போன்ற அனைத்து வகையான பயணச்சீட்டுகளுக்கும் 20% கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது. சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் வாட்ஸ்அப் டிக்கெட் (+91 83000 86000) மூலமாக மற்றும் Paytm App மூலமாகவும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை பெற்றுகொள்ளலாம்.
மெட்ரோ ரெயில்கள் மற்றும் மெட்ரோ ரெயில் நிலையங்களை பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கிவரும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி.
- முதல் மெட்ரோ இரயில் 2026-ஆம் ஆண்டில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும்.
- மீதமுள்ள அனைத்து மெட்ரோ இரயில்களும் மார்ச் 2027 முதல் ஏப்ரல் 2029 வரை ஒவ்வொரு கட்டமாக ஒப்படைக்கப்படும்.
ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரெயில்களை தயாரிக்கும் ஒப்பந்தத்தை BEML நிறுவனத்திற்கு சென்னை மெட்ரோ நிர்வாகம் அளித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தியில், "சென்னை மெட்ரோ இரயில் இரண்டாம் கட்ட திட்டத்தில் ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் மெட்ரோ இரயில்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் ரூ.3,657.53 கோடி மதிப்பில் வழங்கப்பட்டது
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், இரண்டாம் கட்ட திட்டத்தில் வழித்தடம் 3 மற்றும் 5-ல் ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் 3 இரயில் பெட்டிகளை கொண்ட 70 மெட்ரோ இரயில்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் BEML நிறுவனத்திற்கு ரூ.3,657.53 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பு கடிதம் (LOA) 28.11.2024 அன்று BEML நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திரு.எம்.ஏ.சித்திக், இ.ஆ.ப., அவர்களின் முன்னிலையில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் சார்பாக இயக்குநர் திரு. ராஜேஷ்சதுர்வேதி (அமைப்புகள் மற்றும் இயக்கம்) மற்றும் BEML நிறுவனத்தின் இயக்குநர் (இரயில் மற்றும்மெட்ரோ) திரு.ராஜீவ் குமார் குப்தா ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் ஆலோசகர் திரு.எஸ்.ராமசுப்பு (இயக்கம் மற்றும் மெட்ரோ இரயில்), தலைமை பொது மேலாளர் திரு.ஏ.ஆர்.ராஜேந்திரன், (மெட்ரோ இரயில்), இணை பொது மேலாளர் திரு.எஸ்.சதீஷ் பிரபு (இயக்கம் மற்றும் மெட்ரோ இரயில்), சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மற்றும் BEML நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.
இந்த ஒப்பந்தத்தில், வடிவமைப்பு, உற்பத்தி, வழங்கல், சோதனை, ஆணையிடுதல், பணியாளர்களுக்கான பயிற்சி, மெட்ரோ இரயில் மற்றும் பணிமனை இயந்திரங்களுக்கு 15 ஆண்டுகள் முழுமையான பராமரிப்பு உள்ளிட்ட ஒட்டுனர் இல்லாத மெட்ரோ இரயில்களை வழங்குதல் போன்றவை உள்ளடங்கும்.
இந்த ஒப்பந்ததின் கீழ், முதல் மெட்ரோ இரயில் 2026-ஆம் ஆண்டில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும். அதைத் தொடர்ந்து கடுமையான பாதைகள் மற்றும் ஓட்டுநர் இல்லாத இரயில் இயக்கத்திற்கான சோதனைகள் நடத்தப்படும். அதன்பின் மீதமுள்ள அனைத்து மெட்ரோ இரயில்களும் மார்ச் 2027 முதல் ஏப்ரல் 2029 வரை ஒவ்வொரு கட்டமாக சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும்.
BEML நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட மேற்கண்ட ஒப்பந்தம், இரண்டாம் கட்ட திட்டத்திற்கான ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் மெட்ரோ இரயில்களை கொள்முதல் செய்வதற்கான மூன்று ஒப்பந்தங்களின் வரிசையில் இரண்டாவது ஒப்பந்தமாகும். முன்னதாக, முதல் ஒப்பந்தம் வழங்கப்பட்டது, மேலும் முன்மாதிரி இரயில் ஏற்கனவே சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் பூந்தமல்லி பணிமனைக்கு வழங்கப்பட்டுள்ளது. மூன்றாவது ஒப்பந்தம் செயல்பாட்டில் உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- குறுகிய காலக்கட்டத்திலேயே மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.
- வழக்கத்திற்கு மாறாக 18 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வருகிறது.
சென்னை நகரில் மெட்ரோ ரெயில்கள் இரண்டு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. பொதுவாக மெட்ரோ ரெயில் சேவை குறுகிய கால இடைவெளியில் இயக்கப்படும். விடுமுறை நாட்களில் கூட ஓரளவுக்கு குறுகிய கால இடைவெளியிலேயே மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை இயக்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. சென்னை விமான நிலையம் மற்றும் விம்கோ நகர் பணிமனை இடையிலான மெட்ரோ ரெயில் சேவை வழக்கத்திற்கு மாறாக 18 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வருகிறது.
இதேபோல் சென்னை விமான நிலையம் மற்றும் சென்னை சென்ட்ரல் இடையிலான ரெயில் சேவை 7 நிமிட இடைவெளியிலும், சென்னை விமான நிலையத்தில் இருந்து வண்ணாரப்பேட்டை இடையே 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
- சிறப்பு சலுகை ஒரு சுற்றுப் பயணத்திற்கு (2 நுழைவு மற்றும் 2 வெளியேறுதல்) பயன்படுத்தலாம்.
- பயணிகள் கடைசி ரெயில் புறப்படுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னதாகவே மீனம்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலையத்திற்குள் வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
சென்னை:
மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னை, AM ஜெயின் கல்லூரி மைதானத்தில், நாளை "Vijay Antony 3.0 -இன்னிசை கச்சேரி" நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் ரசிகர்களுக்கு தடையில்லா போக்குவரத்தை வழங்குவதற்காக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தென்னிந்தியாவின் முன்னணி ஊடக தயாரிப்பு நிறுவனமான Noise and Grains Private Limited உடன் இணைந்து கட்டணமில்லா பயணத்தை வழங்குவதற்காக உடன்பாடு செய்துள்ளது.
"Insider" or "District" தளங்கள் மூலம் முன்பதிவு செய்யப்பட்ட டிஜிட்டல் டிக்கெட்டுகளுடன் நிகழ்வில் பங்கேற்பவர்களுக்கு மட்டுமே இந்த ஸ்பான்சர் செய்யப்பட்ட பயணம் வழங்கப்படும். இந்த முன்பதிவு செய்யப்பட்ட டிஜிட்டல் டிக்கெட்டுகளை பயன்படுத்தி பயணிகள் எந்த ஒரு மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்தும் நிகழ்வு நடைபெறும் இடத்திற்கு மிக அருகில் உள்ள மீனம்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு சென்று திரும்ப முடியும்.
நிகழ்வில் பங்கேற்பவர்கள் தங்கள் முன்பதிவு செய்யப்பட்ட டிஜிட்டல் டிக்கெட்டுகள் உள்ள தனித்துவமான QR குறியீட்டை தானியங்கி நுழைவு இயந்திரத்தில் ஸ்கேன் செய்து மெட்ரோவில் பயணிக்கலாம். இந்த சிறப்பு சலுகை ஒரு சுற்றுப் பயணத்திற்கு (2 நுழைவு மற்றும் 2 வெளியேறுதல்) பயன்படுத்தலாம்.
நிகழ்ச்சி பங்கேற்பாளர்களின் கவனத்திற்கு, மீனம்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து விம்கோ நகர் பணிமனை மெட்ரோ நிலையம் வரை செல்லும் கடைசி மெட்ரோ ரெயில் இரவு 12:00 மணிக்குபுறப்படும். பயணிகள் கடைசி ரெயில் புறப்படுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னதாகவே மீனம்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலையத்திற்குள் வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பச்சை வழித்தடத்தில் பயணிக்கும் பயணிகள் அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் வழித்தடம் மாற்றம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டடை தொடர்ந்து விஜய் ஆண்டனியின் இன்று நடைபெற இருந்த இசை கச்சேரி ரத்து செய்யப்பட்டுள்ளது.
- விஜய் ஆண்டனி வருத்தம் தெரிவித்து எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
சென்னை, மீனம்பாக்கத்தில் உள்ள ஏஎம் ஜெயின் கல்லூரி மைதானத்தில், இன்று "Vijay Antony 3.0 -இன்னிசை கச்சேரி" நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. அதற்கான டிக்கெட்டுகளும் விற்பனை செய்யப்பட்டது. விஜய் ஆண்டனியின் ரசிகர்கள் ஏராளமானோர் இசை கச்சேரியில் பங்கேற்க ஆவலுடன் இருந்தனர்.
இந்நிலையில், காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டடை தொடர்ந்து விஜய் ஆண்டனியின் இன்று நடைபெற இருந்த இசை கச்சேரி ரத்து செய்யப்பட்டுள்ளது. இது மற்றொரு நாளில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தேதி விபரங்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை.
இதுதொடர்பாக விஜய் ஆண்டனி வருத்தம் தெரிவித்து எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், " சில எதிர்பாராத காரணங்களாலும், மற்றும் தற்போது சென்னையில் நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டும், அரசு அதிகாரிகள் வழங்கிய ஆலோசனையின் அடிப்படையில், இன்று நடைபெறவிருந்த விஜய் ஆண்டனி 3.0 Live Concert, வேறு ஒரு தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது.
இதனால் உங்களுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு மிகவும் வருத்தப்படுகிறேன்.
புதிய நிகழ்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும். உங்கள் புரிதலுக்கு நன்றி" என குறிப்பிட்டிருந்தார்.
இதற்கிடையே, விஜய் ஆண்டனியின் இசை நிகழ்ச்சியை முன்னிட்டு, இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் ரசிகர்களுக்கு தடையில்லா போக்குவரத்தை வழங்குவதற்காக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தென்னிந்தியாவின் முன்னணி ஊடக தயாரிப்பு நிறுவனமான Noise and Grains Private Limited உடன் இணைந்து கட்டணமில்லா பயணத்தை வழங்குவதற்காக உடன்பாடு செய்தது.
அதன்படி, "Insider" or "District" தளங்கள் மூலம் முன்பதிவு செய்யப்பட்ட டிஜிட்டல் டிக்கெட்டுகளுடன் நிகழ்வில் பங்கேற்பவர்களுக்கு மட்டுமே இந்த ஸ்பான்சர் செய்யப்பட்ட பயணம் வழங்கப்படும் என்றும் இந்த முன்பதிவு செய்யப்பட்ட டிஜிட்டல் டிக்கெட்டுகளை பயன்படுத்தி பயணிகள் எந்த ஒரு மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்தும் நிகழ்வு நடைபெறும் இடத்திற்கு மிக அருகில் உள்ள மீனம்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு சென்று திரும்ப முடியும் என்றும் சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்திருந்தது.
விஜய் ஆண்டனியின் இசை கச்சேரி ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மெட்ரோ ரெயில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் கூறியிருப்பதாவது:-
சென்னை 28 டிசம்பர் 2024 (இன்று) மீனம்பாக்கம் ஏஎம் ஜெயின் கல்லூரி மைதானத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட "விஜய் ஆண்டனி 3.0 - லைவ் இன் கச்சேரி, எதிர்பாராத சூழ்நிலைகளால் ரத்து செய்யப்பட்டுள்ளது.
எனவே, நிகழ்ச்சிக்கான மெட்ரோ பயண டிக்கெட்டுகளை ரசிகர்கள் இன்று பயன்படுத்த முடியாது.
மெட்ரோ ரயில் சேவை வழக்கமான கால அட்டவணைப்படி மட்டுமே கிடைக்கும்.
M/s Noise & Grains Private Limited மூலம் மேற்கொண்டு தகவல்கள் விரைவில் வெளியிடப்படும்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பெண் பொறியாளர்களுக்கான 8 உதவி மேலாளர் பணியிடங்கள் நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியீடு.
- 30 வயதை தாண்டாத குறைந்தபட்சம் 2 ஆண்டு அனுபவம் உள்ள பெண் பொறியாளர்கள் விண்ணப்பிக்கலாம்.
பெண் பொறியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பை சென்னை மெட்ரோ வெளியிட்டுள்ளது.
அதன்படி, பெண் பொறியாளர்களுக்கான 8 உதவி மேலாளர் பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பை சென்னை மெட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ளது.
30 வயதை தாண்டாத குறைந்தபட்சம் 2 ஆண்டு அனுபவம் உள்ள பெண் பொறியாளர்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அதற்கு மாத சம்பளம் ரூ.62 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விரிவான வேலைவாய்ப்பு அறிவிப்பு chennaimetrorail.org என்ற இணைய முகவரியில் வரும்10ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பத்தை சமர்பிக்க வேண்டிய கடைசி தேதி பிப்ரவரி 10 எனவும் தகுதியடைந்த விண்ணப்பதாரர்களுக்கு சம்பளத்தொகை பரிசீலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அதிவிரைவான பயண அனுபவத்தை மெட்ரோ ரெயில் உறுதி செய்து வருகிறது.
- பொங்கல் பண்டிகையை ஒட்டி மெட்ரோ ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டது.
சென்னை மெட்ரோ ரெயில் சேவை பயணிகளுக்கு போக்குவரத்து நெரிசல் இல்லா பயணத்தை வழிவகை செய்து வருகிறது. சென்னையில் இரண்டு வழித்தடங்களில் இயக்கப்படும் மெட்ரோ ரெயில்களில் தினந்தோரும் ஆயிரக்கணக்கானோர் பயணம் செய்து வருகின்றனர். போக்குவரத்து நெரிசல் இல்லாத, அதிவிரைவான பயண அனுபவத்தை மெட்ரோ ரெயில் உறுதி செய்து வருகிறது.
இந்த நிலையில், சென்னை மெட்ரோ ரெயில் சேவை விடுமுறை நாட்களில் சிறப்பு அட்டவணைப்படி இயக்கப்படுவது வழக்கம். வார நாட்களில் அதிக பயணிகள் பயன்படுத்துவதால், குறைந்த கால இடைவெளியிலும், வார விடுமுறை நாட்களில் சற்றே அதிக நேர இடைவெளியிலும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
அந்த வகையில், பொங்கல் பண்டிகையை ஒட்டி சென்னை மெட்ரோ ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி பொங்கல் தினமான ஜனவரி 14, மாட்டுப் பொங்கல் தினமான ஜனவரி 15 மற்றும் காணும் பொங்கல் தினமான ஜனவரி 16 ஆகிய தேதிகளில் சென்னை மெட்ரோ ரெயில் ஞாயிறு / விடுமுறை நாள் அட்டவணைப்படி இயக்கப்பட்டது.
இன்று (ஜனவரி 17) சென்னை மெட்ரோ ரெயில் சேவை சனிக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்து இருக்கிறது. அதன்படி இன்று காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.
இதில் காலை 5.00 மணி முதல் 8.00 மணி வரை காலை 11.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10.00 மணி வரை 7 நிமிடங்கள் இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும். 8.00 மணி முதல் 11.00 மணி வரை மற்றும் மாலை 5.00 மணி முதல் இரவு 8 மணி வரை 6 நிமிடங்கள் இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.
இரவு 10.00 மணி முதல் 11.00 மணி வரை 15 நிமிடங்கள் இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும். பயணிகள் தேவைக்கு ஏற்ப கூடுதல் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- தினமும் லட்சக்கணக்கானோர் பயணம் செய்து வருகிறார்கள்.
- நாளுக்கு நாள் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
சென்னை:
சென்னையில் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் குறிப்பிட்ட நேரத்திற்குள் ஒரு இடத்திற்கு செல்வதற்கு மெட்ரோ ரெயில் சேவை மிகவும் கை கொடுத்து வருகிறது.
மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து விமான நிலையம், புறநகர் ரெயில் நிலையம், பஸ் நிலையம் போன்றவற்றை இணைக்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. 2 வழித்தடங்கள் மூலம் மெட்ரோ ரெயில்கள் தற்போது இயக்கப்பட்டு வருகிறது.
இதனால் தினமும் லட்சக்கணக்கானோர் பயணம் செய்து வருகிறார்கள். மெட்ரோ ரெயிலில் பயணிகள் எளிதாக செல்ல பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. இதனால் நாளுக்கு நாள் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், இன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக Whatsapp Chatbot மூலம் ஆன்லைன் டிக்கெட்டுகள் பெறுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து தொழில்நுட்பக் கோளாறு சீர் செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் இப்போது சென்னை மெட்ரோ ரெயில் டிக்கெட்டுகளை வாட்ஸ்அப் மூலம் வாட்ஸ்அப் சாட்பாட் - 8300086000 ஐப் பயன்படுத்தி வாங்கிக்கொள்ளலாம் என்றும் சி.எம்.ஆர்.எல் ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிப்பு என நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
முன்னதாக, தொழில்நுட்ப கோளாறு காரணமாக பயணிகள் அனைவரும் CMRL மொலைப் ஆப், Paytm, Phonepe, சிங்கார சென்னை கார்டு, CMRL டிராவல் கார்டுகள், பயணச்சீட்டு வழங்குமிடம் ஆகிய மற்ற வழிகள் மூலம் டிக்கெட்டுகளை பெறுமாறு மெட்ரோ ரெயில் நிர்வாகம் கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
- வில்லிவாக்கத்தில் இருந்து மாதவரம் பணிமனையை இணைக்கும் வகையில் மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
- வில்லிவாக்கத்தில் இருந்து இயக்கப்பட்ட மினி பஸ் தடம் எண்கள் எஸ்43, எஸ்44 பயணிகள் வசதிக்காக வழக்கம் போல் வில்லிவாக்கம் பஸ் நிலையத்தில் இருந்தே இயக்கப்படும்.
அம்பத்தூர்:
வில்லிவாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து பிராட்வே, அண்ணாசாலை, திருவல்லிக்கேணி, அம்பத்தூர், ஆவடி, பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு மாநகர பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது.
அப்பகுதியில் வில்லிவாக்கத்தில் இருந்து மாதவரம் பணிமனையை இணைக்கும் வகையில் மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் சாலையின் ஒரு புறம் இருந்த வீடு மற்றும் கடைகள் அகற்றப்பட்டு சாலை விரிவாக்க பணிகளும் மெட்ரோ ரெயில் பணிகளும் நடைபெறுவதால் அந்த வழியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு உள்ளது.
இதனால் வில்லிவாக்கம் பஸ் நிலையத்திற்கு வரும் பஸ்கள் மேற்கு மாட வீதி வழியாக வில்லிவாக்கம் பஸ் நிலையத்திற்கு வரும் போது கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.
இதைத்தொடர்ந்து மெட்ரோ ரெயில் பணிகள் முடியும் வரை வில்லிவாக்கம் பஸ்நிலையம் தற்காலிகமாக ஐ.சி.எப். ரெயில்வே முன்பதிவு மையத்தை ஒட்டியுள்ள சர்வீஸ் சாலையில் மாற்றப்பட்டுள்ளது. இதனால் வில்லிவாக்கத்தில் இருந்து செல்லும் பஸ்கள் தற்போது ஐ.சி.எப். பஸ்நிலையத்தில் இருந்து புதிய ஆவடி சாலைவழியாக சென்று நாதமுனி வழியாக வில்லிவாக்கம் வந்து மீண்டும் வழக்கமான வழித்தடத்திலேயே செல்லும் என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இது தொடர்பாக மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
வில்லிவாக்கம் பஸ் நிலையத்தில் மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற உள்ளதால் இந்த பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்ட 7 வழித்தடங்களின் 63 பஸ்கள் தற்காலிகமாக நேற்று முதல் ஐ.சி.எப். பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டது.
அதன்படி தடம் எண். 20, 27டி, 23வி ஆகிய பஸ்கள் ஐ.சி.எப். பஸ் நிறுத்தத்தில் இருந்து புறப்பட்டு புதிய ஆவடி சாலை வழியாக நாதமுனி சென்று 'யூ டர்ன்' எடுத்து வில்லிவாக்கம் (கல்பனா) பஸ் நிறுத்தம் வழியாக அதன் அடிப்படை வழித்தடத்திலேயே இயக்கப்படும்.
வில்லிவாக்கத்தில் இருந்து இயக்கப்பட்ட மினி பஸ் தடம் எண்கள் எஸ்43, எஸ்44 பயணிகள் வசதிக்காக வழக்கம் போல் வில்லிவாக்கம் பஸ் நிலையத்தில் இருந்தே இயக்கப்படும். தடம் எண்.22 வில்லிவாக்கம் வரை இயக்கப்பட்ட பஸ் வழித்தடம் நீட்டிக்கப்பட்டு கொரட்டூர் வரையும், தடம் எண். 63 திருவேற்காடு முதல் வில்லிவாக்கம் வரை இயக்கப்பட்ட பஸ் தடம் நீட்டிக்கப்பட்டு ஐ.சி.எப். வரை இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மெட்ரோ ரெயில் டிக்கெட்டுகளை நேரடியாகவும் வழியாகவும் ஆன்லைன் வழியாகவும் பெறலாம்.
- மெட்ரோ டிக்கெட்டுகளை காகித முறையில் வாங்கினால் 10% தள்ளுபடி வழங்கப்பட்டு வந்தது.
சென்னை மெட்ரோ ரெயில்களில் தினமும் லட்சக்கணக்கானோர் பயணம் செய்து வருகிறார்கள். மெட்ரோ ரெயிலில் பயணிகள் எளிதாக செல்ல பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. இதனால் நாளுக்கு நாள் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
பயணிகள் மெட்ரோ ரெயில் டிக்கெட்டுகளை நேரடியாகவும் வழியாகவும் ஆன்லைன் வழியாகவும் பெறலாம். மேலும் மெட்ரோ கார்டுகளில் ரீசார்ஜ் செய்தும் பயணம் மேற்கொள்ளலாம்.
மெட்ரோ ரெயிலில் 20 மற்றும் அதற்கு மேற்பட்ட மெட்ரோ டிக்கெட்டுகளை காகித முறையில் வாங்கினால் 10% தள்ளுபடி வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த சலுகை மார்ச் 1 ஆம் தேதி (1.3.2025) முதல் திரும்பப் பெறப்படும் என்று மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
டிஜிட்டல் முறையில் பயணிகள் டிக்கெட் வாங்குவதை ஊக்குவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு மாற்றாகCMRL மொபைல் ஆப் மூலம் QR முறையில் குரூப் டிக்கெட் எடுத்தால் 20% தள்ளுபடி பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தினமும் லட்சக்கணக்கானோர் பயணம் செய்து வருகிறார்கள்.
- நாளுக்கு நாள் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
சென்னை:
சென்னையில் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் குறிப்பிட்ட நேரத்திற்குள் ஒரு இடத்திற்கு செல்வதற்கு மெட்ரோ ரெயில் சேவை மிகவும் கை கொடுத்து வருகிறது.
மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து விமான நிலையம், புறநகர் ரெயில் நிலையம், பஸ் நிலையம் போன்றவற்றை இணைக்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. 2 வழித்தடங்கள் மூலம் மெட்ரோ ரெயில்கள் தற்போது இயக்கப்பட்டு வருகிறது.
இதனால் தினமும் லட்சக்கணக்கானோர் பயணம் செய்து வருகிறார்கள். மெட்ரோ ரெயிலில் பயணிகள் எளிதாக செல்ல பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. இதனால் நாளுக்கு நாள் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், இன்று "தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, சென்னை மெட்ரோ ரெயில் வாட்ஸ்அப் டிக்கெட் Bot தற்காலிகமாக வேலை செய்யவில்லை. பிற ஆன்லைன் தளங்கள் மூலம் மெட்ரோ டிக்கெட்டுகளைப் பெறுமாறு பயணிகளைக் கேட்டுக் கொள்கிறோம். உங்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம்" மெட்ரோ ரெயில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.