search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chennai Open Women's Tennis"

    • இன்று நடைபெறும் கால் இறுதியில் கர்மன் தண்டி-ருதுஜா போசலே ஜோடி லூயிசா ஸ்டெபானி (பிரேசில்) கேப்ரியேபா டப்ரோவ்ஸ்கி (கனடா) ஜோடியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
    • ரியா பாட்டியா, ஷர்மதா பாலு, இந்தியாவின் அங்கிதா ரெய்னா, நெதர்லாந்தின் வான்டெர் ஹோக் ஜோடி முதல் சுற்றில் தோற்றன.

    சென்னை ஓபன் மகளிர் டென்னிசில் இரட்டையர் பிரிவில் நேற்று நடந்த முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய ஜோடியான கர்மன் தண்டி-ருதுஜா போசலே 3-6, 7-6 (7-5), 10-4 என்ற செட் கணக்கில் ஜெசி ரோம்பிஸ் (இந்தோனேசியா) பிரார்த்தனா தோம்பரே (இந்தியா) ஜோடியை வீழ்த்தி கால் இறுதிக்கு தகுதி பெற்றது.

    இன்று நடைபெறும் கால் இறுதியில் கர்மன் தண்டி-ருதுஜா போசலே ஜோடி லூயிசா ஸ்டெபானி (பிரேசில்) கேப்ரியேபா டப்ரோவ்ஸ்கி (கனடா) ஜோடியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

    ரியா பாட்டியா - ஷர்மதா பாலு

    ரியா பாட்டியா - ஷர்மதா பாலு

    மற்றொரு இந்திய ஜோடியான ரியா பாட்டியா, ஷர்மதா பாலு, இந்தியாவின் அங்கிதா ரெய்னா, நெதர்லாந்தின் வான்டெர் ஹோக் ஜோடி முதல் சுற்றில் தோற்றன.

    • போட்டியின் தர வரிசையில் 4-ம் இடத்தில் இருக்கும் மரியா கால் இறுதிக்கு தகுதி பெறுவாரா என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • இன்று நடைபெறும் 2-வது சுற்றில் வெற்றி பெறுவோர் கால் இறுதிக்கு முன்னேறுவார்கள்.

    சென்னை:

    சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கம் எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

    இன்று நடைபெறும் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் மக்டா லிஸெட் (போலந்து)-ஒக்சானா செலக்மெட்தேவா (ரஷியா) மோதுகிறார்கள்.

    மற்றொரு ஆட்டத்தில் கேட்டி ஸ்வான் (இங்கிலாந்து) அனஸ்டசிய கசனோவா (ரஷியா) பலப்பரீட்சை நடத்துகிறார்கள். இந்த இரு ஆட்டங்களும் மாலை 5 மணிக்கு தொடங்குகிறது.

    மாலை 6.15 மணிக்கு நடக்கும் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தர வரிசையில் 85-ம் இடத்தில் இருக்கும் ஜெர்மனியின் தட்ஜானா மரியா, அர்ஜென்டினாவின் பொடோரோஸ் காவுடன் மோதுகிறார்.

    போட்டியின் தர வரிசையில் 4-ம் இடத்தில் இருக்கும் மரியா கால் இறுதிக்கு தகுதி பெறுவாரா என்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்றொரு ஆட்டத்தில் கரோல் ஜாவோ (கனடா) வர்வரா கிராச்சேவா (ரஷியா) மோதுகிறார்கள்.

    கால் இறுதிக்கு யூஜெனி புசார்ட் (கனடா), நாவ் ஹிபிளோ (ஜப்பான்), லின்டா புரவிர்தோவா (செக் குடியரசு) ஆகியோர் தகுதி பெற்றனர்.

    நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டத்தில் கனடாவின் ரெபேக்கா மரினோ 7-5, 6-3 என்ற நேர்செட் கணக்கில் கதர்சினா காலாவை (போலந்து) வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறினார்.

    இன்று நடைபெறும் 2-வது சுற்றில் வெற்றி பெறுவோர் கால் இறுதிக்கு முன்னேறுவார்கள். ஒற்றையர் பிரிவில் நேற்று இந்திய வீராங்கனை கர்மன் தண்டி தோல்வி அடைந்ததன் மூலம் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது.

    • வைல்டு கார்டு மூலம் நுழைந்த இந்திய வீராங்கனை அங்கீதா ரெய்னா முதல் சுற்றிலேயே தோற்று வெளியேறினார்.
    • அலிசன் ரிஸ்கே (அமெரிக்கா) முதல் சுற்றிலேயே அதிர்ச்சிகரமாக தோற்று வெளியேறினார்.

    சென்னை:

    சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கம் எஸ்.டி.ஏ.டி. மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    இந்த போட்டியின் தர வரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் வார்வரா கிராசேவா நேற்றைய முதல் சுற்று ஆட்டத்தில் சக நாட்டை சேர்ந்த மரியா தகச்சேவாவை எதிர் கொண்டார். இதில் கிராசேவா 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    அவர் 2-வது சுற்றில் கனடாவை சேர்ந்த கரோல் ஜாவ்வை சந்திக்கிறார். கரோல் முதல் சுற்றில் 6-1, 6-1 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒலிவியாவை எளிதில் வீழ்த்தினார்.

    மற்றொரு ஆட்டத்தில் 3-வது வரிசையில் இருக்கும் மக்டா லினெட் (போலந்து) 6-4, 6-0 என்ற செட் கணக்கில் ஜப்பானை சேர்ந்த மயூக்காவை வீழ்த்தினார். அவர் 2-வது சுற்றில் ரஷியாவின் ஒக்சானா செலக்மேடாவை சந்திக்கிறார். ஒக்சானா முதல் சுற்றில் 6-3, 6-1 என்ற கணக்கில் இங்கிலாந்து வீராங்கனை டெஸ்பினாவை வீழ்த்தினார்.

    இந்த போட்டியின் முதல் நிலை வீராங்கனையான அலிசன் ரிஸ்கே (அமெரிக்கா) முதல் சுற்றிலேயே அதிர்ச்சிகரமாக தோற்று வெளியேறினார். ரஷியாவை சேர்ந்த அனஸ்டசியா கசனோவா 6-2, 6-3 என்ற கணக்கில் அவரை வீழ்த்தினார்.

    வைல்டு கார்டு மூலம் நுழைந்த இந்திய வீராங்கனை அங்கீதா ரெய்னாவும் முதல் சுற்றிலேயே தோற்று வெளியேறினார்.

    போட்டியின் 3-வது நாளான இன்று 2-வது சுற்று ஆட்டங்கள் நடக்கிறது. இரவு 7 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் இந்திய வீராங்கனை கர்மன் தண்டி முன்னணி வீராங்கனைகளில் ஒருவரான யூஜின் பவுச்சர்ட்டை (கனடா) எதிர் கொள்கிறார். பவுச்சர்ட்டை அதிர்ச்சிகரமாக வீழ்த்தி கர்மன் தண்டி கால் இறுதிக்கு தகுதி பெறுவாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மற்ற ஆட்டங்களில் ரெபேக்கா பீட்டர்சன் (சுவீடன்) லின்டா (செக் குடியரசு), கவா (போலந்து)-ரெபோக்கா மரினோ (கனடா), ஹிபினோ (ஜப்பான்) கியாங் வாங் (சீனா) மோதுகிறார்கள்.

    • இந்திய வீராங்கனை கர்மன்தண்டி முதல் சுற்றில் 4-6, 6-4, 6-3 என்ற கணக்கில் பிரான்சின் பேக்கியூட்டை அதிர்ச்சி கரமாக வீழ்த்தினார்.
    • 5-வது வரிசையில் உள்ள ரெபேக்கா பீட்டர்சன் (சுவீடன்) 6-2, 7-6 (7-4) என்ற கணக்கில் ஜிம்மென்ஸ் விக்டோரியாவை வென்றார்.

    சென்னை:

    சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கம் எஸ்.டி.ஏ.டி ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கிது.

    சென்னையில் முதல் முறையாக நடைபெறும் இந்த டென்னிஸ் திருவிழாவில் உலகின் முன்னணி வீராங்கனைகள் பங்கேற்று உள்ளனர்.

    இந்த போட்டின் 6-வது தர வரிசையில் இருக்கும் சீனாவை சேர்ந்த கியாங் வாங் முதல் சுற்றில் பெல்ஜியத்தை சேர்ந்த யாமினா விக்மேயரை எதிர்கொண்டார்.

    இதில் வாங் 6-4, 1-6, 6-4 என்ற செட் கணக்கில் வென்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். அவர் 2-வது ரவுண்டில் தகுதிச் சுற்று வீராங்கனையான ஹிபினோவை (ஜப்பான்) சந்திக்கிறார்.

    ஹிபினோ தொடக்க சுற்றில் மற்றொரு தகுதி சுற்று வீராங்கனையான ஜானா பெட்டை (செக்குடி யரசு) 6-0, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தினார்.

    7-ம் நிலை வீராங்கனையான ரெபேக்கா மரினோ (கனடா)7-5, 6-2 என்ற கணக்கில் அனா பிஸின்கோ வாவை (ரஷியா) தோற்கடித்தார். அவர் அடுத்த சுற்றில் போலந்தை சேரந்த கதர்சினா கவாவை எதிர் கொண்டார். சுவா 6-4, 6-3 என்ற கணக்கில் அஸ்ட்ரா சர்மாவை (ஆஸ்திரேலியா) வீழ்த்தினார்.

    5-வது வரிசையில் உள்ள ரெபேக்கா பீட்டர்சன் (சுவீடன்) 6-2, 7-6 (7-4) என்ற கணக்கில் ஜிம்மென்ஸ் விக்டோரியாவை வென்றார். அவர் 2-வது சுற்றில் செக்குடியரசை சேர்ந்த லிண்டாவை எதிர் கொள்கிறார். லிண்டா 4-6, 6-1, 6-3 என்ற கணக்கில் லியாங்கை (சீன தைபே) தோற்கடித்தார்.

    முதல் சுற்றில் வெற்றி பெற்ற இந்திய வீராங்கனை கர்மன் கவூர் தண்டி

    முதல் சுற்றில் வெற்றி பெற்ற இந்திய வீராங்கனை கர்மன் கவூர் தண்டி

    இந்திய வீராங்கனை கர்மன்தண்டி முதல் சுற்றில் 4-6, 6-4, 6-3 என்ற கணக்கில் பிரான்சின் பேக்கியூட்டை அதிர்ச்சி கரமாக வீழ்த்தினார். அவர் 2-வது சுற்றில் யூஜின் பவுச்சர்ட்டை (கனடா) சந்திக்கிறார்.

    இந்த போட்டியில் முதல் நிலை வீராங்கனையான அலிசன் ரிஸ்கே (அமெரிக்கா), ரஷியாவை சேர்ந்த அனஸ்டசியா கசனோவை இன்று சந்திக்கிறார். மற்றொரு இந்திய வீராங்கனையான அங்கீதா ரெய்னா தொடக்க சுற்றில் 4-வது வரிசையில் இருக்கும் தாட்ஜினா மரியாவை (ஜெர்மனி) எதிர்கொள்கிறார்.

    ×