என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Chennai youth arrest"
- வித்யாதரனை சாதுர்யமாக கைது செய்வது என்று போலீசார் முடிவு செய்தனர்.
- புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது இளம்பெண் தனக்கு நடந்த கொடுமைகளை தெரிவித்தார்.
கோவை:
கோவை சூலூரை சேர்ந்த இளம்பெண் சென்னையில் தங்கி வேலை பார்த்தார். அவருக்கு அதே நிறுவனத்தில் டிரைவராக வேலைபார்த்த சென்னை பெரும்பாக்கத்தைச் சேர்ந்த வித்யாதரன் (வயது 33) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
அவருக்கு ஏற்கெனவே திருமணம் ஆகி மனைவி, குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சூலூர் பெண்ணை வித்யாதரன் காதலிப்பதாக கூறினார். அவரது காதலை இளம்பெண் ஏற்கவில்லை.
இந்த நிலையில் சூலூர் பெண்ணுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு, உறவினர் ஒருவருடன் திருமணம் நிச்சயமானது. இதனை எப்படியோ அறிந்து கொண்ட வித்யாதரன், இளம்பெண்ணை பழிவாங்குவது என முடிவு செய்தார்.
இதன் ஒரு பகுதியாக அந்த பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து, அவற்றை திருமணம் நிச்சயித்த வாலிபருக்கு செல்போன் மூலம் அனுப்பி வைத்து உள்ளார். எனவே இளம்பெண்ணின் திருமணம் பாதியில் நின்று போனது. இந்த நிலையில் வித்யாதரன் மீண்டும் சூலூர் பெண்ணுக்கு காதல் வலைவீசினார். அந்த பெண் ஒப்புக்கொள்ளவில்லை.
அப்போது வித்யாதரன், உனக்கு நிச்சயித்த மணமகனுக்கு நான்தான் உன் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து அனுப்பி வைத்தேன். என்னை தவிர வேறு யாரும் உன்னை திருமணம் செய்ய விடமாட்டேன் என மிரட்டினார்.
இது அந்த பெண்ணுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே அவர் சென்னையில் இருந்து கோவைக்கு வந்து விட்டார். இந்த நிலையில் சூலூர் பெண்ணுக்கு வேறு ஒரு வாலிபருடன் திருமணம் பேசி நிச்சயிக்கப்பட்டது.
இதையடுத்து வித்யாதரன் மீண்டும் கோவைக்கு புறப்பட்டு வந்தார். அப்போது அவர் இளம்பெண்ணிடம், நான் உன்னை இப்போதும் காதலிக்கிறேன். என்னை திருமணம் செய்து கொள் என்று மிரட்டி பார்த்தார். இளம்பெண் ஏற்கவில்லை.
இதனால் வித்யாதரன் திருமணம் நிச்சயமான 2-வது வாலிபருக்கும் இளம்பெண்ணின் ஆபாச புகைப்படங்களை அனுப்பினார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மணமகன் உடனடியாக திருமணத்தை பாதியில் நிறுத்தி விட்டார். எனவே பாதிக்கப்பட்ட இளம்பெண் சூலூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது இளம்பெண் தனக்கு நடந்த கொடுமைகளை தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து வித்யாதரனை சாதுர்யமாக கைது செய்வது என்று போலீசார் முடிவு செய்தனர். இதன்படி இளம்பெண் அந்த வாலிபருக்கு போன் செய்து, நான் உன்னை காதலிக்கிறேன். எனவே நீ உடனடியாக புறப்பட்டு கோவைக்கு வா என்று தெரிவித்து உள்ளார். அதன்படி வித்யாதரன் கோவைக்கு வந்து சேர்ந்தார். அப்போது அவரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
இன்றைய இளைஞர்கள், இளம்பெண்கள் பெரும்பாலும் சமூக வலைதளங்களான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் நேரத்தை செலவிடுகின்றனர். இதேப்போல் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளும் சமூகவலைத்தளங்களில் நேரத்தை செலவிட்டு வருகின்றனர். சில சமயம் இதில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
இந்நிலையில் சென்னை கிண்டி பகுதியை சேர்ந்த அஜித் (வயது 21). பிரிண்டிங் பட்டறை தொழிலாளி. இவர் பெரும்பாலும் சமூக வலைத்தளங்களில் நேரத்தை செலவிட்டு வந்துள்ளார். அப்போது ஈரோடு பி.பி.அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமியுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இருவரும் இன்ஸ்டாகிராமில் அடிக்கடி பேசி வந்துள்ளனர். அப்போது சிறுமியிடம் அஜித் ஆசைவார்த்தை கூறி பழகியுள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் 26-ந்தேதி சிறுமி திடீரென மாயமானார். அவரை பல்வேறு இடங்களில் தேடியும் எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கருங்கல்பாளையம் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அஜித் சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றது தெரியவந்தது. இதை தொடர்ந்து சிறுமி மீட்கப்பட்டார்.
அஜித் மீது கடத்தல், போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் நீதிமன்ற உத்தரவுபடி கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.
மலேசியாவில் இருந்து சென்னைக்கு நேற்று இரவு பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது சென்னையை சேர்ந்த சுரேஷ் என்ற பயணியை சந்தேகத்தின் அடிப்படையில் தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார். இதையடுத்து அவரை தனி அறைக்கு அழைத்து சென்று விசாரித்தனர். அவர் கொண்டு வந்த பையில் இரண்டு ஸ்பிக்கர்கள் இருந்ததை பார்த்த அதிகாரிகள் அதனை சோதனை செய்தனர்.
அதில் 200 கிராம் தங்கம் மறைத்து கடத்தி வந்திருப்பதை கண்டுபிடித்தனர். இதன் மதிப்பு ரூ.7 லட்சம் ஆகும். தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து சுரேஷிடம் விசாரனை நடத்தி வருகின்றனர். #ChennaiAirport
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் கடம்பூரை சேர்ந்தவர் பிரசாந்தகுமார் (வயது 32). இவர் சென்னையில் வசித்து வருகிறார். சென்னையில் இருந்து தனியார் கூரியர் சர்வீஸ் மூலம் கொச்சிக்கு துணி பண்டல்களை பார்சல் செய்தார்.
கொச்சிக்கு பார்சல் சென்றதும் அங்கு வந்து பார்சல்களை பெற்றுக்கொண்ட பிரசாந்தகுமார் அவைகளை மலேசியாவுக்கு அனுப்ப வேறொரு பார்சல் கூரியரை அணுகினார்.
அப்போது பார்சல் ஊழியருக்கு சந்தேகம் ஏற்பட்டது. சென்னையில் இருந்து நேரடியாக மலேசியாவுக்கு பார்சல்களை அனுப்பலாமே? ஏன் சென்னையில் இருந்து இங்கு கொண்டு வந்து, இங்கிருந்து மலேசியாவுக்கு பார்சல்களை அனுப்ப வேண்டும் என்று கேட்டார். அதற்கு பிரசாந்தகுமார் முறையாக பதில் கூறவில்லை.
இதனையடுத்து கூரியர் ஊழியர் எர்ணாகுளம் மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து குறிப்பிட்ட பார்சல்களை பிரித்து பார்த்தபோது ரூ.200 கோடி மதிப்புள்ள 32 கிலோ மெத்தடின் என்ற போதை பொருள் இருந்தது. இதனையடுத்து பிரசாந்தகுமார் தலைமறைவனார். அவரை கேரள போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் சென்னையில் வைத்து பிரசாந்தகுமாரை கேரள போலீசார் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருள் குறித்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்