என் மலர்
நீங்கள் தேடியது "chennimalai murugan temple"
- சென்னிமலை முருகன் கோவில் மற்றும் அதன் உப கோவில்களில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு நடை சாத்தப்படுகிறது.
- இந்நேரத்தில் மக்கள் அர்ச்சனை செய்யவோ, தரிசிக்கவோ அனுமதி இல்லை.
சென்னிமலை:
சென்னிமலை முருகன் கோவில் மற்றும் அதன் உப கோவில்களில் வருகிற 8-ந்தேதி சந்திர கிரகணத்தை முன்னிட்டு நடை சாத்தப்படுகிறது.
அதனால் காலசந்தி பூஜை, உச்சிகாலம், சாயரட்சை பூஜை நடைபெற்று பகல் 2 மணி முதல் இரவு 7.30 மணி வரை சென்னிமலை முருகன் கோவில் சுவாமி மூலஸ்தான கதவுகள் அடைக்கப்பட்டு நடை சாத்தப்படும்.
இந்நேரத்தில் மக்கள் அர்ச்சனை செய்யவோ, தரிசிக்கவோ அனுமதி இல்லை. இரவு 7.35 மணிக்கு நடை திறக்கப்பட்டு கிரகண தோஷ சாந்தி சிறப்பு பூஜை நடத்தப்படும்.
அதன் பின்பு பக்தர்கள் அனுமதிக்க–ப்படுவர். அன்று மட்டும் இரவு வேங்கை மர ரதம் உலா நடைபெறாது என கோவில் நிர்வாகம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- சென்னிமலை முருகன் கோவில் மற்றும் அதன் உப கோவில்களில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு நடை சாத்தப்பட்டது.
- பின்னர் இரவு 7.35 மணிக்கு நடை மீண்டும் திறக்கப்பட்டு கிரகண தோஷ சாந்தி சிறப்பு பூஜை நடத்தப்பட்டடது.
சென்னிமலை:
சென்னிமலை முருகன் கோவில் மற்றும் அதன் உப கோவில்களில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு நடை சாத்தப்பட்டது.
அதனால், காலசந்தி பூஜை, உச்சிகாலம், சாயரட்சை பூஜை நடைபெற்று பகல் 2 மணி முதல் இரவு 7.30 மணி வரை சென்னிமலை முருகன் கோவில் சாமி மூலஸ்தான கதவுகள் அடைக்கப்பட்டு நடை சாத்தப்பட்டது.
நேற்று செவ்வாய்கிழமை என்பதால் பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாக இருந்தது. இருந்தாலும் பக்தர்களை பகல் 1.30 மணியில் இருந்து கோவில் பணியாளர்கள் கொஞ்சம், கொஞ்சமாக வெளியேற்றி நடைசாத்தப்பட்டது.
பின்னர் இரவு 7.35 மணிக்கு நடை மீண்டும் திறக்கப்பட்டு கிரகண தோஷ சாந்தி சிறப்பு பூஜை நடத்தப்பட்டடது. அதன் பின்பு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இரவு வேங்கை மர ரதம் உலா நடைபெறவில்லை.
- சென்னிமலை முருகன் கோவிலில் உண்டியல்களின் திறப்பு நடைபெற்றது.
- காணிக்கை எண்ணும் பணி திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் உதவி ஆணையர் ரமணி காந்தன் முன்னி லையில் நடைபெற்றது
சென்னிமலை:
சென்னிமலை முருகன் கோவிலில் பொதுமக்கள் காணிக்கை செலுத்த உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உண்டியல்களின் திறப்பு நடைபெற்றது.
காணிக்கை எண்ணும் பணி திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் உதவி ஆணையர் ரமணி காந்தன் முன்னி லையில் நடைபெற்றது.
இந்த உண்டியல் திறப்பின் மூலம் ரொக்கமாக ரூ.48,87,159, தங்கம் 153 கிராமும், வெள்ளி 2, 215 கிராமும் இருந்தது. திருப்பணி உண்டியல் திறப்பின் மூலம் ரூ.92,167-ம் வரப்பெற்றது.
மேற்படி உண்டியல் திறப்பில் கோவில் தக்கார் அன்னக்கொடி, செயல் அலுவலர் சரவணன், பெருந்துறை ஆய்வர், கோவில் பணியாளர்கள், பெருந்துறை நந்தா கல்லூரி மாணவ, மாணவிகள், மகளிர் குழுவினர், வங்கி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
- சென்னிமலை மலை முருகன் கோவிலுக்கு செல்லக்கூடிய 2-வது கொண்டை ஊசி வளைவில் மண்சரிவு ஏற்பட்டு பெரிய கற்கள் ரோட்டில் கிடந்தது.
- இந்த மண்சரிவால் எவ்வித பாதிப்பும் இல்லை
சென்னிமலை:
சென்னிமலை பகுதியில் கடந்த 2 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் அதிகபட்சமாக 99 மில்லி மீட்டர் அளவு சென்னிமலையில் மழை பதிவாகியிருந்தது.
இந்த நிலையில் சென்னிமலை மலை முருகன் கோவிலுக்கு செல்லக்கூடிய 2-வது கொண்டை ஊசி வளைவில் மண்சரிவு ஏற்பட்டு பெரிய கற்கள் ரோட்டில் கிடந்தது.
இது குறித்து அறிந்த கோவில் பணியாளர்கள் உடனடியாக செயல் அலுவலருக்கு தகவல் தெரிவித்து பொக்லைலன் எந்திரம் மூலம் ஒரு மணி நேரத்தில் மண்சரிவு கற்களை அகற்றினர்.
இந்த மண்சரிவால் எவ்வித பாதிப்பும் இல்லை. தொடர்ந்து இடைவிடாது மழை பெய்ததால் மண் சரிவு ஏற்பட்டு கற்கள் சரிந்துள்ளதாக தெரிகிறது.
- சுபமுகூர்த்த தினம் என்பதால் சென்னிமலை முருகன் கோவிலில் 12 ேஜாடிகளுக்கு திருமணம் நடந்தது.
- இதனால் அதிகாலையில் இருந்தே கோவிலில் உறவினர்கள் கூட்டம் அலைமோதியது.
சென்னிமலை:
ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் புகழ் பெற்ற சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது.மலை மேல் அமைந்துள்ள இக் கோவிலில் சுபமுகூர்த்த நாட்களில் ஏராளமான திருமணங்கள் நடந்து வருகிறது.
இன்று கார்த்திகை மாத சுபமுகூர்த்த தினம் என்பதால் சென்னிமலை முருகன் கோவிலில் 12 ேஜாடிகளுக்கு திருமணம் நடந்தது. இதனால் அதிகாலையில் இருந்தே கோவிலில் உறவினர்கள் கூட்டம் அலைமோதியது.
12 திருமணம் நடந்ததால் கோவில் முழுவதும் நாதஸ்வர மங்கள இசை முழங்கியப்படி இருந்தது. திருமணம் முடிந்ததும் மணமக்கள் ேகாவிலை சுற்றி வந்து சுப்பிரமணி சாமியை தரிசனம் செய்தனர்.
பின்னர் அவர்கள் உறவினர்களுடன் போட்டோ எடுத்து கொண்டனர். கோவில் வளாகம் முழுவதும் திருமண கோஷ்டியினர் அதிகளவில் வந்திருந்தனர்.
திருமணத்தில் கலந்து கொள்ள உறவினர்கள் அதிகளவில் வந்ததால் மலைமீது அவர்கள் வந்த வாகனங்கள் அதிகளவில் நிறுத்தப்பட்டு இருந்தது.
- இன்று மார்கழி சிறப்பு வழிபாடு மற்றும் செவ்வாய்க்கிழமை வழிபாடு பக்தர்களும் ஒரே நேரத்தில் காலையில் திரண்டதால் கடும் கூட்டம் அலைமோதியது.
- ஒரு மணி நேரத்துக்கு மேல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
சென்னிமலை:
ஈரோடு மாவட்டத்தின் புகழ் பெற்ற சென்னிமலை முருகன் கோவிலில் வருடம் தோறும் மார்கழி மாதத்தில் அதிகாலை சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டும் தொடர்ந்து மார்கழி முதல் தேதியில் இருந்து சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது.
இன்று மார்கழி சிறப்பு வழிபாடு மற்றும் செவ்வாய்க்கிழமை வழிபாடு பக்தர்களும் ஒரே நேரத்தில் காலையில் திரண்டதால் கடும் கூட்டம் அலைமோதியது.
ஒரு மணி நேரத்துக்கு மேல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் மலைப்பாதையில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
6, 7-வது வளைவு களிலேயே பொதுமக்கள் இருசக்கர வாகனங்களையும், கார்களையும் ஓரமாக நிறுத்திவிட்டு நடந்து சென்று சாமி தரிசனத்துக்கு செல்லும் நிலை ஏற்பட்டது.
இது பற்றி உடனடியாக சென்னிமலை போலீசாருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு. சப்- இன்ஸ்பெக்டர் வேலுமணி தலைமையில் வந்த போலீசார் போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்தி மலைப்பாதையில் போக்கு வரத்து சீர் செய்தனர்.
அதன் பின்பு பொது மக்கள் 9 மணி அளவில் நிம்மதியாக சாமி தரிசனம் செய்வதற்கு சென்றனர். இந்த கடும் போக்குவரத்து நெருசலால் சென்னிமலை மலை கோவிலில் காலை நேரத்தில் பக்தர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.
- புதியதாக பக்தர்கள் காத்திருப்பபு கூடம் கட்ட முடிவு செய்யப்பட்டது.
- அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பணியினை தொடங்கி வைத்தார்.
சென்னிமலை:
சென்னிமலை முருகன் கோவில் மலை அடிவார த்தில் பஸ்சில் செல்லும் பக்தர்கள் வரிசையாக நிற்க காத்திருப்பு கூடம் கட்டும் பணியை செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமி நாதன் தொடங்கி வைத்தார்.
சென்னிமலை முருகன் கோவிலுக்கு வந்து மலை கோவிலுக்கு பஸ்சில் செல்லும் பக்தர்கள் வரிசையாக நிற்கவும், காத்திருக்கவும் காத்திருப்பு கூடம் மலை அடிவாரத்தில் அமைக்க வேண்டும் என நீண்ட நாட்களாக பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதை தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறையின் சார்பாக கோவில் நிதி ரூ. 64 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக பக்தர்கள் காத்திருப்பபு கூடம் கட்ட முடிவு செய்யப்பட்டது.
இதையொட்டி சென்னி மலை முருகன் கோவில் மலை அடிவாரத்தில் பக்தர்கள் காத்திருப்பபு கூடம் கட்டும் பணிக்கான பூமி பூஜை நடந்தது. விழாவிற்கு கலெக்டர் கிருஷ்ண ண்னுண்ணி தலைமை தாங்கினார்.
இதில் தமிழக செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு பணியினை தொடங்கி வைத்தார்.
விழாவில் திருப்பூர் 4-ம் மண்டல தலைவர் இல.பத்மநாபன், மாவட்ட கவுன்சிலர் எஸ். ஆர்.எஸ்.செல்வம், யூனியன் துணை தலைவர் பன்னீர் செல்வம், பேரூராட்சி தலைவர் ஸ்ரீ தேவி அசோக், சென்னிமலை கிழக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் பிரபு, நகர செயலாளர் ராமசாமி, கோவில் செயல் அலுவலர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- இன்று முருகப்பெருமானுக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.
- நாளை காலை தேரோட்டம் நடக்கிறது.
சென்னிமலை:
சென்னிமலை முருகன் கோவிலில் பங்குனி உத்திர தேர்திருவிழா நேற்று சேவல் கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.
விழாவையொட்டி மலை மேல் உயரத்தில் உள்ள கொடி மரத்தில் சேவல் கொடியை ஏற்றி பங்குனி உத்திர விழாவை தொடங்கி வைத்தனர்.
முன்னதாக நேற்று காலை சாமி புறப்பாடு நடந்தது, சென்னிமலை டவுன் கிழக்கு ராஜா வீதியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தி அங்கு இருந்து சேவல் கொடியுடன் உற்ச மூர்த்திகள் முருகப்பெ ருமான் சமேதராக புறப்ப ட்டு படி வழியாக மலை கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதை தொடர்ந்து மலை கோவிலில் யாக பூஜை நடந்தது. முருகன், வள்ளி, தெய்வானை, உற்சவ மூர்த்திகளுக்கும். மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கும் பஞ்சாமிருதம், பால், தயிர் உட்பட பல்ேவறு திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.
சாமி களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சிகள் நடந்தது. தலைமைக் குருக்கள் ஸ்ரீலஸ்ரீ ராமநாத சிவாச்சா ரியார் கொடி மரத்திற்கும் காப்பு கட்டி சிறப்பு பூஜை செய்ய சேவல் கொடியை ஏற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.
விழாவையொட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு டவுன் கிழக்கு ராஜா வீதி கைலாசநாதர் கோவிலில் முருகப்பெருமானுக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.
இதையடுத்த நாளை (புதன்கிழமை) காலை 6 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.
தொடர்ந்து மாலை 5 மணிக்கு தேர் நிலை சேரும் நிகழ்ச்சியும், 6-ந் தேதி காலை பரிவேட்டை நிகழ்ச்சியும், இரவு தெப்பத்தேர் உற்சவம் நடக்கிறது. 7-ந் தேதி காலை மகா தரிசனம் நடக்கிறது. இரவு மஞ்சள் நீர் நிகழ்ச்சியும் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை தக்கார் அன்னகொடி, செயல் அலுவலர் சரவணன் தலைமையில் பணியா ளர்கள், அர்ச்சகர்கள் செய்து வருகின்றனர்.
- வைகாசி மாத சுபமுகூர்த்த தினம் என்பதால் 9 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது.
- கோவில் முழுவதும் நாதஸ்வர மங்கள இசை முழங்கியப்படி இருந்தது.
சென்னிமலை:
சென்னிமலையில் புகழ் பெற்ற முருகன் கோவில் உள்ளது. மலை மேல் அமைந்துள்ள இக்கோவிலில் சுபமுகூர்த்த நாட்களில் ஏராளமான திருமணங்கள் நடந்து வருகிறது.
இந்நிலையில் இன்று வைகாசி மாத சுபமுகூர்த்த தினம் என்பதால் சென்னிமலை முருகன் கோவிலில் 9ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது.
இதனால் அதிகாலையில் இருந்தே கோவிலில் உறவினர்கள் கூட்டம் அலைமோதியது. 9 திருமணம் நடந்ததால் கோவில் முழுவதும் நாதஸ்வர மங்கள இசை முழங்கியப்படி இருந்தது.
திருமணம் முடிந்ததும் மணமக்கள் ேகாவிலை சுற்றி வந்து முருகன் சாமியை தரிசனம் செய்தனர்.
பின்னர் அவர்கள் உறவினர்களுடன் போட்டோ எடுத்து கொண்டனர். கோவில் வளாகம் முழுவதும் திருமண கோஷ்டியினர் அதிகளவில் வந்திருந்தனர்.
திருமணத்தில் கலந்து கொள்ள உறவினர்கள் அதிகளவில் வந்ததால் மலை மீது அவர்கள் வந்த வாகனங்கள் அதிகளவில் நிறுத்தப்பட்டு இருந்தது.
- ஒரு மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் முருகனை வழிபாடு செய்தனர்.
- மலைக்கோவில் பஸ்களும் பக்தர்கள் வசதிக்காக தொடர்ந்து இயக்கப்பட்டது.
சென்னிமலை:
சென்னிமலை முருகன் கோவிலில் இன்று செவ்வாய்க்கிழமை மற்றும், பள்ளி விடுமுறை தினம் மற்றும் அக்னி நட்சத்திரம் நிறைவு இதைத்தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் தரிசனம்.
கந்த சஷ்டி கவசம் அரங்கேறிய தலமாக விளங்கக்கூடிய சென்னிமலை முருகன் கோவிலில், வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக வருகை தருகிறார்கள்.
இன்று செவ்வாய்க்கி ழமை மற்றும் முருகனின் பிறந்த மாதமான வைகாசி மாதம் மற்றும் அக்னி நட்சத்திரம் நிறைவு, பள்ளி, கல்லூரிகள் விடுமுறை என்பதால் அதிகாலை முதலில் ஏராளமான பக்தர்கள் குவிய தொடங்கி னார்கள்.
அதிகாலை 5.30 மணிக்கு நடை திறந்த பொழுது பலர் கோவிலுக்கு முன்பு காத்திருந்து கோ பூஜை பார்த்து தரிசனம் செய்தனர். அதிகப்படியான பக்தர்கள் திரண்டதால் பொது தரிசனத்தில் சுமார் ஒரு மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் முருகனை வழிபாடு செய்தனர்.
சிறப்பு தரிசனத்திலேயும் அரை மணி நேரம் காத்திருந்து முருகப்பெருமானை வணங்கி சென்றனர். மலை மீது இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனம் எடுத்த இடத்தில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதை சரி செய்வதற்காக தனியார் செக்யூரிட்டிகளை கோவில் நிர்வாகம் சார்பாக ஏற்பாடு செய்தனர். மலைக்கோவில் பஸ்களும் பக்தர்கள் வசதிக்காக தொடர்ந்து இயக்கப்பட்டது.
- பாலபிஷேக பெருவிழா நாளை விசாக நட்சத்திரத்தில் நடக்கிறது.
- பக்தர்கள் அனைவருக்கும் மலை மீது அன்னதானம் வழங்கப்படுகிறது.
சென்னிமலை:
சென்னிமலையில் எழுந்தருளி உள்ள புகழ்பெற்ற முருகன் ேகாவில் சுப்பிரமணிய சாமிக்கு வருடந்தோறும் ஆடி மாதம் விசாக நட்சத்திரத்தில் சென்னிமலை கைத்தறி மற்றும் சாய சாலை உரிமையாளர்கள் சங்கம் சார்பாக பாலாபிஷேக விழா நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு 56-வது ஆண்டு பாலபிஷேக பெருவிழா நாளை (வியாழ க்கிழமை) விசாக நட்சத்திரத்தில் நடக்கிறது.
இதையொட்டி நாளை காலை 7.40 மணிக்கு சென்னிமலை கிழக்கு ராஜ வீதியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் இருந்து ஆயிரக்கணக்கான பால் குடங்கள் புறப்பட்டு மேள, தாளம் முழங்க காவடி ஆட்டத்துடன் சென்னிமலை நகரில் 4 ரத வீதிகளிலும் திருவீதி வலம் வந்து மலைமீதுள்ள முருகன் கோவிலை படி வழியாக கொண்டு செல்லப்படுகிறது.
தொடர்ந்து காலை 10 மணிக்கு மலை மேல் சுப்பிரமணி சாமிக்கு பால் அபிஷேகம் நடக்கிறது. பால் அபிேஷகத்தினை தொடர்ந்து சிறப்பு அலங்கா ரம், மகா தீபாராதனையும் இதையடுத்து மதியம் 1.30 மணிக்கு உற்சவ மூர்த்தி பிரகார உலாக்காட்சி நடக்கிறது. பக்தர்கள் அனைவருக்கும் மலை மீது அன்ன தானம் வழங்கப்படுகிறது.
பாலாபிஷேக பெரு விழா ஏற்பாடுகளை கைத்தறி மற்றும் சாய சாலை உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் செய்து வரு கின்றனர்.
- 17 திருமணம் நடந்ததால் கோவில் முழுவதும் நாதஸ்வர மங்கள இசை முழங்கியப்படி இருந்தது.
- கோவில் வளாகம் முழுவதும் திருமண கோஷ்டியினர் அதிகளவில் வந்திருந்தனர்.
சென்னிமலை:
சென்னிமலை மலை மேல் அமைந்துள்ள முருகன் கோவிலில் சுபமுகூர்த்த நாட்களில் ஏராளமான திருமணங்கள் நடந்து வருகிறது.
இன்று ஆவணி மாதத்தில் வருகின்ற முதல் சுபமுகூர்த்த தினம் என்பதால் சென்னிமலை முருகன் கோவிலில் 17 ஜோடிகளுக்கு ஒரே நேரத்தில் திருமணம் நடந்தது. இதனால் அதிகாலையில் இருந்தே கோவிலில் உறவினர்கள் கூட்டம் அலைமோதியது. 17 திருமணம் நடந்ததால் கோவில் முழுவதும் நாதஸ்வர மங்கள இசை முழங்கியப்படி இருந்தது.
திருமணம் முடிந்ததும் மணமக்கள் கோவிலை சுற்றி வந்து முருக பெருமானை தரிசனம் செய்தனர். பின்னர் அவர்கள் உறவினர்களுடன் போட்டோ, வீடியோ, செல்பி எடுத்து கொண்டனர். கோவில் வளாகம் முழுவதும் திருமண கோஷ்டியினர் அதிகளவில் வந்திருந்தனர்.
திருமணத்தில் கலந்து கொள்ள உறவினர்களும் அதிகளவில் வந்ததால் மலைமீது அவர்கள் வந்த வாகனங்கள் அதிகளவில் நிறுத்தப்பட்டு இருந்தது. கோவில் கூடுதல் பணியாளர்கள் மூலம் கூட்டத்தினை சரி செய்தனர். திருமண ஜோடி மற்றும் அவர்கள் உறவினர்களால் மலை கோவில் வளாகம் காலை நேரத்தில் கலை கட்டி இருந்தது.