என் மலர்
நீங்கள் தேடியது "Chepauk super gillies"
- முதல் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி, கோவை கிங்சை சந்திக்கிறது.
- கோவை, சேலம், நெல்லை, திண்டுக்கல் நத்தம் ஆகிய 4 இடங்களில் மொத்தம் 32 ஆட்டங்கள் நடைபெறுகிறது.
சென்னை:
9-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஜூன்- ஜூலையில் நடைபெறுகிறது. இதற்கான போட்டி அட்டவணையை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் வெளியிட்டது.
4 முறை சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ், நடப்பு சாம்பியன் திண்டுக்கல் டிராகன்ஸ், கோவை கிங்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ், திருப்பூர் தமிழன்ஸ், திருச்சி கிராண்ட் சோழாஸ், மதுரை பாந்தர்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டி ஜூன் 5-ந்தேதி கோவையில் தொடங்குகிறது.
முதல் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி, கோவை கிங்சை சந்திக்கிறது. அதே மைதானத்தில் ஜூன் 6-ந்தேதி நடக்கும் 2-வது லீக்கில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, திருப்பூர் தமிழன்சுடன் மோதுகிறது.
கோவை, சேலம், நெல்லை, திண்டுக்கல் நத்தம் ஆகிய 4 இடங்களில் மொத்தம் 32 ஆட்டங்கள் நடைபெறுகிறது. மகுடத்துக்கான இறுதிப்போட்டி ஜூலை 6-ந்தேதி திண்டுக்கல்லில் அரங்கேறுகிறது.
- ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 2 வீரர்களை தக்கவைத்துக் கொள்ளலாம்.
- ரூ.70 லட்சத்தில் இருந்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ்சின் கையிருப்பு தொகை ரூ.61 லட்சமாக குறைந்துள்ளது.
சென்னை:
8 அணிகள் இடையிலான 7-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதுவரை இந்த போட்டியில் பங்கேற்கும் அணிகளுக்கான வீரர்கள் ஒதுக்கீடு முறையில் தேர்வு செய்யப்பட்டனர். இந்த ஆண்டு முதல்முறையாக வீரர்கள் ஏலம் விடப்படுகிறார்கள்.
ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 2 வீரர்களை தக்கவைத்துக் கொள்ளலாம். மற்ற வீரர்கள் ஏலப்பட்டியலில் இடம் பெறுவார்கள். தக்கவைக்கப்படும் வீரர்கள் 4 வகையாக பிரிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி தக்கவைக்கப்படும் 'ஏ' பிரிவு வீரர்களின் (சர்வதேச போட்டியில் ஆடியவர்கள்) விலை ரூ.10 லட்சமாகவும், 'பி' பிரிவு வீரர்களின் (இந்திய கிரிக்கெட் வாரியத்தின் உள்ளூர் சீனியர் போட்டியில் பங்கேற்றவர்கள்) விலை ரூ.6 லட்சமாகவும், 'சி' பிரிவு வீரர்களின் (ஏ, பி, பிரிவில் இடம் பெறாதவர்கள், டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் 30 ஆட்டங்களுக்கு மேல் ஆடியவர்கள்) விலை ரூ. 3 லட்சமாகவும், 'டி' பிரிவு வீரர்களின் (மற்ற வீரர்கள்) விலை ரூ.1½ லட்சமாகவும் நிர்வாக கவுன்சில் நிர்ணயித்தது.
ஒவ்வொரு அணிகளும் தக்கவைத்து இருக்கும் வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
4 முறை சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் என்.ஜெகதீசன் (பி பிரிவு, ரூ.6 லட்சம்), மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சசிதேவ் (சி பிரிவு, ரூ.3 லட்சம்) ஆகியோரை தக்க வைத்து இருக்கிறது. இதனால் ஒதுக்கப்பட்ட ஏலத்தொகையான ரூ.70 லட்சத்தில் இருந்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ்சின் கையிருப்பு தொகை ரூ.61 லட்சமாக குறைந்துள்ளது.
திண்டுக்கல் டிராகன்ஸ் அணி ஆர்.அஸ்வினையும் (ஏ பிரிவு), திருப்பூர் தமிழன்ஸ் அணி துஷர் ரஹிஜாவையும் (டி பிரிவு), கோவை கிங்ஸ் அணி ஷாருக்கான் (பி பிரிவு), சுரேஷ் குமாரையும் (டி பிரிவு), நெல்லை ராயல் கிங்ஸ் அஜிதேஷ் (பி பிரிவு), கார்த்திக் மணிகண்டனையும் (டி பிரிவு), திருச்சி வாரியர்ஸ் அந்தோணி தாசையும் (பி பிரிவு), சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணி கணேஷ் மூர்த்தியையும் (சி பிரிவு), மதுரை பாந்தர்ஸ் கவுதமையும் (டி பிரிவு) தக்க வைத்துள்ளது.
டி.என் பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் சென்னையில் வருகிற 23, 24 ஆகிய தேதிகளில் நடக்கிறது.
ஏலத்தில் வீரர்களின் அடிப்படை விலை முறையே ரூ.3 லட்சம் (ஏ பிரிவு), ரூ.2 லட்சம் (பி), ரூ.1 லட்சம் (சி), ரூ.50 ஆயிரம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- முதலில் ஏ பிரிவு வீரர்கள் ஏலம் நடந்தது. இதில் இந்திய அணிக்காக விளையாடிய 5 வீரர்கள் இடம் பெற்றிருந்தனர்.
- சிவி வருணை மதுரை பாந்தர்ஸ் அணி ரூ.6.75 லட்சத்துக்கு வாங்கியது.
சென்னை:
டிஎன்பிஎல் போட்டியில் வீரர்களுக்கான ஏலம் நடைபெற்று வருகிறது. முதலில் ஏ பிரிவு வீரர்கள் ஏலம் நடந்தது. இதில் இந்திய அணிக்காக விளையாடிய 5 வீரர்கள் இடம் பெற்றிருந்தனர்.
அதில் விஜய் சங்கரை 10.25 லட்சத்துக்கு திருப்பூர் தமிழன்ஸ் அணியும் வாஷிங்டன் சுந்தரை மதுரை பாந்தர்ஸ் அணி ரூ.6.75 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது. மூன்றாவது வீரராக நடராஜனை 6.25 லட்சத்துக்கு திருச்சி அணி ஏலம் எடுத்தது. சந்தீப் வாரியரை நெல்லை அணி ரூ.8.5 லட்சத்துக்கு விலைக்கு வாங்கியது. சிவி வருணை மதுரை பாந்தர்ஸ் அணி ரூ.6.75 லட்சத்துக்கு வாங்கியது.
இதனை தொடர்ந்து பி பிரிவு வீரர்கள் ஏலம் நடைபெற்றது. ஏ பிரிவு வீரர்களில் ஆர்வம் காட்டாத சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பி பிரிவில் இடம் பெற்ற பாபா அப்ரஜித்தை 10 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது.
தொடர்ந்து ஏலம் நடைபெற்று வருகிறது.
- சோனு யாதவை ரூ.15.20 லட்சத்துக்கு நெல்லை ராயல் கிங்ஸ் அணி ஏலம் எடுத்தது.
- 12.80 லட்சத்துக்கு ஹரிஷ் குமாரை சேப்பாக் சூப்பர் கீல்லீஸ் விலைக்கு வாங்கியது.
சென்னை:
டிஎன்பிஎல் போட்டியில் வீரர்களுக்கான ஏலம் நடைபெற்று வருகிறது. முதலில் ஏ பிரிவு வீரர்கள் ஏலம் நடந்தது. இதில் இந்திய அணிக்காக விளையாடிய 5 வீரர்கள் இடம் பெற்றிருந்தனர்.
அதில் விஜய் சங்கர் 10.25 லட்சம், வாஷிங்டன் சுந்தர் ரூ.6.75 லட்சம், நடராஜன் 6.25 லட்சம், சந்தீப் வாரியர் ரூ.8.5 லட்சம், சிவி வருண் ரூ.6.75 லட்சம் என ஏலம் போனார்கள்.
இதனையடுத்து பி பிரிவு வீரர்கள் ஏலம் நடைபெற்றது. இதில் ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணிக்காக தேர்வாகி உள்ள சோனு யாதவை நெல்லை ராயல் கிங்ஸ் அணி ரூ.15.20 லட்சத்துக்கு ஏலம் எடுத்தனர்.
அப்போது வரை அதுவே அதிக தொகைக்கு ஏலம் போனதாக இருந்தது. இந்நிலையில் சஞ்சய் யாதவை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 17.60 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது. இதன் மூலம் இதுவரை நடந்த ஏலத்தில் அதிக தொகையாக இது இருந்துள்ளது. முன்னதாக ஹரிஷ் குமாரை 12.80 லட்சத்துக்கும் அபராஜித்தை ரூ.10 லட்சத்துக்கும் பிரதோஷ் 5 லட்சத்துக்கும் அதே அணி விலைக்கு வாங்கியது.
- கேள்விகளுக்கு பதில் அளிப்பதோடு போட்டியாளர்களுக்கு சில ‘டாஸ்க்’குகளும் கொடுக்கப்பட்டன.
- ஆறுதல் பரிசாக 100 பேருக்கு சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் ‘ஜெர்சி’ வழங்கப்பட்டு உள்ளது.
சென்னை:
டி.என்.பி.எல். தொடரில் அதிக முறை கோப்பை வென்ற அணி என்ற பெருமையுடன் வலம் வரும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் ஐ.பி.எல். தொடருக்காக இலவச டிக்கெட் போட்டி களை நடத்தி வருகிறது.
அதன்படி சென்னை சேப் பாக்கத்தில் நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் இடையிலான 55- வது ஐ.பி.எல் போட்டியை நேரில் பார்க்க ரசிகர்களுக்கு, இலவச டிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. இதற்காக கடந்த 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை சமூக வலைதள பக்கங்களில் கேள்விகள் கேட்கப்பட்டன.
கேள்விகளுக்கு பதில் அளிப்பதோடு போட்டியாளர்களுக்கு சில 'டாஸ்க்'குகளும் கொடுக்கப்பட்டன. அவை அனைத்தையும் சிறப்பாக நிறைவு செய்த 12 வெற்றியாளர்களுக்கு மொத்தம் 25 ஐ.பி.எல். டிக்கெட்டுகள் பரிசாக வழங்கப்பட்டன.
மேலும், ஆறுதல் பரிசாக 100 பேருக்கு சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் 'ஜெர்சி' வழங்கப்பட்டு உள்ளது. இந்த போட்டியில் ஐ.பி.எல். டிக்கெட்டை வென்ற பிரஷாந்த் என்பவர், 'தனது நண்பர்கள் யாருமே இந்தப் போட்டியில் பரிசு கிடைக்கும் என நம்பவில்லை. இருப்பினும் நம்பிக்கையோடு தொடர்ந்து முயற்சித்ததால் இந்த வெற்றியை பெற்றதாக' கூறினார்.
அதேபோல் சென் னையை சேர்ந்த ராகுல் என்பவர், '3 மணி நேரம் சேப்பாக்கத்தில் காத்தி ருந்தும் டிக்கெட் கிடைக்க வில்லை. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மூலமாக 2 டிக் கெட்டுகள் இலவசமாக கிடைத்துவிட்டது.' என்று கூறினார்.
- சேப்பாக் சூப்பர் கில்லீஸ் சமூக வலைதள பக்கங்களில் கேள்விகள் கேட்கப்படும்.
- ஆறுதல் பரிசாக 100 பேருக்கு சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் 'ஜெர்சி' வழங்கப்பட உள்ளது.
சென்னை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் நடத்தும் பரிசுப்போட்டியில் பங்கேற்று ஐ.பி.எல். கிரிக்கெட்டை நேரில் காண 25 இலவச டிக்கெட்களை தட்டி செல்லலாம்.
சென்னை டி.என்.பி.எல். தொடரில் அதிக முறை கோப்பை வென்ற அணி என்ற பெருமையுடன் வலம் வரும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் ஐ.பி.எல். தொடருக்காக இலவச டிக்கெட் போட்டிகளை நடத்தி வருகிறது.
அதன்படி சென்னை சேப்பாக்கத்தில் வரும் 14-ந் தேதி நடைபெறவிருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான 61-வது லீக் போட்டியை நேரில் பார்க்க ரசிகர்களுக்கு, இலவச டிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது.
இதற்காக சேப்பாக் சூப்பர் கில்லீஸ் சமூக வலைதள பக்கங்களில் கேள்விகள் கேட்கப்படும். அவற்றிற்கு பதில் அளிப்பதோடு போட்டியாளர்களுக்கு சில 'டாஸ்க்'குகளும் கொடுக்கப்படும். அவை அனைத்தையும் சிறப்பாக நிறைவு செய்த 12 வெற்றியாளர்களுக்கு 25 ஐ.பி.எல். டிக்கெட்டுகளை வெல்லலாம். மேலும், ஆறுதல் பரிசாக 100 பேருக்கு சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் 'ஜெர்சி' வழங்கப்பட உள்ளது.
- கேப்டன் ஜெகதீசன், பாபா அபராஜித், சஞ்சய் யாதவ், ஆர்.சதீஷ், சசிதேவ், சிலம்பரசன் உள்ளிட்ட சிறந்த வீரர்கள் உள்ளனர்.
- இரு அணிகளும் முதல் போட்டியிலேயே வெற்றி பெற கடுமையாக போராடும்
கோவை:
டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் 2-வது லீக் ஆட்டம் கோவையில் இன்று இரவு நடக்கிறது. இப்போட்டியில் ஜெகதீசன் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ், அபிஷேக் தன்வார் தலைமையிலான சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
4 முறை சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணியில் கேப்டன் ஜெகதீசன், பாபா அபராஜித், சஞ்சய் யாதவ், ஆர்.சதீஷ், சசிதேவ், சிலம்பரசன் உள்ளிட்ட சிறந்த வீரர்கள் உள்ளனர்.
சேலம் அணியில் கவுசிக் காந்தி, அபிஷேக், கணேஷ் மூர்த்தி உள்ளிட்ட சிறந்த வீரர்கள் உள்ளனர். இரு அணிகளும் முதல் போட்டியிலேயே வெற்றி பெற கடுமையாக போராடும் என்பதால் இந்த ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- ரஞ்சன் பால் 55 பந்துகளில் 12 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 88 ரன்கள் குவித்தார்.
- 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேலம் ஸ்பார்டன்ஸ் அணி களமிறங்குகிறது.
டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் 2-வது லீக் ஆட்டம் கோவையில் இன்று இரவு நடக்கிறது. இதில் ஜெகதீசன் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ், அபிஷேக் தன்வார் தலைமையிலான சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்று முதலில் ஆடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் குவித்தது.
துவக்க வீரர் பிரதோஷ் ரஞ்சன் பால் அதிரடியாக ஆடினார். சேலம் பந்துவீச்சாளர்களை திணறடித்த அவர் பவுண்டரிகளாக விளாசி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். 30 பந்துகளில் அரை சதம் கடந்த அவர், 55 பந்துகளில் 12 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 88 ரன்கள் குவித்தார். மறுமுனையில் கேப்டன் ஜெகதீசன் 35 ரன்கள், பாபா அபராஜித் 29 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர்.
ஹரிஷ் குமார் 8 ரன்களிலும், ராஜகோபால் சதீஷ் ரன் எதுவும் எடுக்காமலும் விக்கெட்டை இழந்தனர். சஞ்சய் யாதவ் 31 ரன்களுடனும், உதிரசாமி சசிதேவ் 4 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
சேலம் ஸ்பார்டன்ஸ் தரப்பில் சன்னி சந்து 2 விக்கெட் கைப்பற்றினார். அபிஷேக் தன்வார், மோகித் ஹரிஹரன் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
இதையடுத்து 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேலம் ஸ்பார்டன்ஸ் அணி களமிறங்குகிறது.
- முதலில் ஆடிய சேப்பாக் அணி 217 ரன்கள் குவித்தது.
- அந்த அணியின் பிரதோஷ் பால் 55 பந்தில் 88 ரன்கள் குவித்தார்.
கோவை:
டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் 2-வது லீக் ஆட்டம் கோவையில் இன்று இரவு நடந்தது. இதில் ஜெகதீசன் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ், அபிஷேக் தன்வார் தலைமையிலான சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்று முதலில் ஆடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 217 ரன்கள் குவித்தது. துவக்க வீரர் பிரதோஷ் பால் அதிரடியாக ஆடினார். அவர் 55 பந்துகளில் 12 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 88 ரன்கள் குவித்தார்.
கேப்டன் ஜெகதீசன் 35 ரன்கள், பாபா அபராஜித் 29 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர். ஹரிஷ் குமார் 8 ரன்களிலும், ராஜகோபால் சதீஷ் ரன் எதுவும் எடுக்காமலும் விக்கெட்டை இழந்தனர். சஞ்சய் யாதவ் 31 ரன்களுடனும், உதிரசாமி சசிதேவ் 4 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
சேலம் ஸ்பார்டன்ஸ் தரப்பில் சன்னி சந்து 2 விக்கெட் கைப்பற்றினார். அபிஷேக் தன்வார், மோகித் ஹரிஹரன் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
இதையடுத்து 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேலம் ஸ்பார்டன்ஸ் அணி களமிறங்கியது. சேப்பாக் அணியின் துல்லிய பந்துவீச்சில் சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தன.
இறுதியில் சேலம் அணி 9 விக்கெட்டுக்கு 165 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 52 ரன்கள் வித்தியாசத்தில் சேப்பாக் அணி அபார வெற்றி பெற்றது.
முகமது அட்னன் கான் மட்டும் தனி ஆளாகப் போராடி 47 ரன்கள் எடுத்தார்.
சேப்பாக் அணியின் பிரதோஷ் பால் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
- 20-வது ஓவரில் மொத்தமாக 26 ரன்கள் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
7-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடி சேப்பாக் அணி வீரர்கள் அதிரடியாக ரன்கள் குவிப்பில் ஈடுபட்டனர். இதனால் சேப்பாக் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் குவித்தது. இதனைத் தொடர்ந்து 218 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் களமிறங்கிய சேலம் அணியினர் 20 ஒவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன்மூலம் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 52 ரன்கள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அபார வெற்றிபெற்றது.
இந்நிலையில் சேலம் அணியின் கேப்டன் அபிஷேக் தன்வர் டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் மோசமான சாதனையை படைத்துள்ளார். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பேட்டிங் செய்த போது 20-வது ஒவரை வீசிய அபிஷேக் தன்வர் ஒரே பந்தில் 18 ரன்களை விட்டுக்கொடுத்துள்ளார்.
The most expensive delivery ever? 1 Ball 18 runs#TNPLonFanCode pic.twitter.com/U95WNslHav
— FanCode (@FanCode) June 13, 2023
20-வது ஓவரின் கடைசி பந்தில் விக்கெட் கிடைத்தது. ஆனால் அது நடுவரால் நோபால் என அறிவிக்கப்பட்டது. மீண்டும் ஒரு நோபால் வீசினார். அது சிக்சர் அடிக்கப்பட்டது. மறுபடியும் நோபாலில் 2 ரன்கள் எடுக்கப்பட்டது. அடுத்து வைடு பந்து வீசினார். மீண்டும் வீசிய பந்தில் சிக்சர் விளாசப்பட்டது. இதன்மூலம் ஒரு பந்தில் 18 ரன்கள் விட்டுக்கொடுக்கப்பட்டது.
20-வது ஓவரில் மொத்தமாக 26 ரன்கள் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- திருப்பூர் தமிழன்ஸ் முதல் ஆட்டத்தில் கோவையுடன் மோசமாக தோற்றதால் இன்றைய ஆட்டத்தில் திறமையை வெளிப்படுத்த போராடும்.
- சேலம் ஸ்பார்டன்சுக்கு எதிரான ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வீரர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டனர்.
கோவை:
7-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கோவை எஸ்.என்.ஆர்.கல்லூரி மைதானத்தில் கடந்த 12-ந் தொடங்கியது. முதல் ஆட்டத்தில் கோவை கிங்ஸ் 70 ரன் வித்தியாசத்தில் திருப்பூர் தமிழன்சை தோற்கடித்தது. நேற்று முன்தினம் நடந்த 2-வது போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 52 ரன் வித்தியாசத்தில் சேலம் ஸ்பார்டன்சை வீழ்த்தியது.
நேற்று நடைபெற்ற ஆட்டங்களில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி 6 விக்கெட்டில் மதுரை பாந்தர்சையும், திண்டுக்கல் டிராகன்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் பால்சி திருச்சியையும் வென்றன.
டி.என். பி.எல். போட்டியின் 5-வது லீக் ஆட்டம் கோவையில் இன்று இரவு 7.15 மணிக்கு நடக்கிறது. இதில் ஜெகதீசன் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் -சாய்கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுக்கும் இது 2-வது போட்டியாகும்.
4 முறை டி.என்.பி.எல். கோப்பையை வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி திருப்பூர் தமிழன்சை வீழ்த்தி தொடர்ந்து 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் இருக்கிறது. சேலம் ஸ்பார்டன்சுக்கு எதிரான ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வீரர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டனர்.
தொடக்க ஆட்டக்காரரான பிரதோஷ் ரஞ்சன் பால், கேப்டன் ஜெகதீசன், சஞ்சய் யாதவ் ஆகியோர் பேட்டிங்கிலும் , ஹரீஷ்குமார், ராக்கி பாஸ்கர், விஜூ அருள், ரஹில் ஷா ஆகியோர் பந்துவீச்சிலும் நல்ல நிலையில் உள்ளனர். ஆல்-ரவுண்டர் பணியில் பாபா அபராஜித் சிறப்பான நிலையில் இருக்கிறார். இது தவிர ஆர்.சதீஷ், சசிதேவ் போன்ற திறமையான வீரர்களும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் உள்ளனர்.
திருப்பூர் தமிழன்ஸ் முதல் ஆட்டத்தில் கோவையுடன் மோசமாக தோற்றதால் இன்றைய ஆட்டத்தில் திறமையை வெளிப்படுத்த போராடும். முதல் வெற்றியை பெறும் வேட்கையில் அந்த அணி இருக்கிறது.
கேப்டன் சாய் கிஷோர் , விஜய் சங்கர் போன்ற சிறந்த வீரர்கள் திருப்பூர் அணியில் உள்ளனர்.
- சேலம் ஸ்பார்டன்சுக்கு எதிரான ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வீரர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டனர்.
- திருப்பூர் தமிழன்ஸ் முதல் ஆட்டத்தில் கோவையிடம் தோல்வி அடைந்தது.
டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் 5-வது லீக் ஆட்டம் கோவையில் இன்று இரவு நடக்கிறது. இதில் ஜெகதீசன் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ், சாய்கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுக்கும் இது 2-வது போட்டியாகும். டாஸ் வென்ற திருப்பூர் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
4 முறை டி.என்.பி.எல். கோப்பையை வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி திருப்பூர் தமிழன்சை வீழ்த்தி தொடர்ந்து 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் இருக்கிறது. சேலம் ஸ்பார்டன்சுக்கு எதிரான ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வீரர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டனர்.
அதேசமயம், திருப்பூர் தமிழன்ஸ் முதல் ஆட்டத்தில் கோவையிடம் தோல்வி அடைந்ததால், இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற கடுமையாக போராடும்.