search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CHESS OLYMPIAD TOURNAMENT"

    • பெண்கள் அணி தஜிகஸ்தானை சந்திக்கிறது.
    • உலக செஸ் சாம்பியன் மாக்னஸ் கார்ல்சென் (நார்வே) உள்பட முன்னணி வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.

    சென்னை:

    சர்வதேச செஸ் சம்மேளனம் சார்பில் 1927-ம் ஆண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டி லண்டனில் அறிமுகம் செய்யப்பட்டது.

    44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்தும் சிறப்பு மிக்க வாய்ப்பை தமிழ்நாடு பெற்று உள்ளது.

    சென்னையை அடுத்த மாமல்லபுரம் பூஞ்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள "போர் பாயிண்ட்ஸ்" ரிசார்ட் பிரமாண்ட 5 நட்சத்திர தகுதி பெற்ற அரங்கத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து முடிந்தன.

    இப்போட்டி ஜூலை 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 10-ந்தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

    அதன்படி நேற்று செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.

    விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று கருப்பு மற்றும் வெள்ளை நிறத்திலான ராஜா, ராணி காய்களை அறிமுகம் செய்து 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை முறைப்படி தொடங்கி வைத்தார்.

    தொடக்க விழாவான நேற்று போட்டிகள் எதுவும் நடைபெறவில்லை. இன்று மாலை 3 மணி முதல் போட்டிகள் தொடங்கும்.

    செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள், நடுவர்கள், பயிற்சியாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    செஸ் ஒலிம்பியாட் வரலாற்றிலேயே சென்னை போட்டிக்குத்தான் 188 அணிகள் ஓபன் பிரிவிலும், பெண்கள் பிரிவில் 162 அணிகளும் பங்கேற்கின்றன. உலக செஸ் சாம்பியன் மாக்னஸ் கார்ல்சென் (நார்வே) உள்பட முன்னணி வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.

    செஸ் ஒலிம்பியாட் போட்டி மொத்தம் 11 சுற்றுகளை கொண்டது. சுவிஸ் முறையில் ஆட்டங்கள் நடைபெறும்.

    ஒவ்வொரு அணியிலும் 5 பேர் இடம் பெற்றுள்ளனர். இதில் ஒருவர் மாற்று வீரராக இருப்பார். 4 பேர் தான் ஆடுவார்கள். வெற்றி பெற்ற அணிகள் வெற்றி பெற்ற அணியுடனும், தோல்வி அடைந்த அணிகள் தோல்வி அடைந்த அணியுடனும் விளையாடும் வகையில் போட்டி முறை அமைக்கப்பட்டுள்ளது.

    வெற்றிக்கு 2 புள்ளியும், டிராவுக்கு அரை புள்ளியும் வழங்கப்படும். தோற்றால் புள்ளிகள் வழங்கப்பட மாட்டாது. 4 பேர் ஆடும் ஆட்டத்தின் முடிவில் யார் அதிக புள்ளி பெற்று இருக்கிறார்களோ அந்த அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு மொத்தத்தில் 2 புள்ளி வழங்கப்படும்.

    செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியா சார்பில் ஓபன் பிரிவில் 3 அணியும், பெண்கள் பிரிவில் 3 அணியும் ஆக மொத்தம் 6 அணிகள் பங்கேற்கின்றன.

    மகளிர் பிரிவில் இந்திய 'ஏ' அணி தர வரிசையில் முதல் இடத்தில் உள்ளது. மற்ற இரண்டு அணியும் முறையே 11, 16-வது இடங்களில் உள்ளன.

    ஓபன் பிரிவில் இந்திய 'ஏ' அணி தர வரிசையில் 2-வது இடத்தில் உள்ளது. மற்ற அணிகள் முறையே 11 மற்றும் 17-வது இடங்களில் உள்ளன.

    இன்று காலை 9.30 மணிக்கு அனைத்து அணி கேப்டன்கள் கூட்டம் நடைபெறும். மாலை 3 மணிக்கு தொடங்கும் ஓபன் பிரிவில் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய 'ஏ' அணி (2-வது தர வரிசை) ஜிம்பாப்வே அணியுடன் (94-வது தர வரிசை) மோதுகிறது.

    பதக்கம் வெல்லும் வாய்ப்புள்ள அணியாக கருதப்படும் இந்திய 'ஏ' அணி வெற்றியுடன் போட்டியை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்திய 'பி' அணி (2-வது இடம்) ஐக்கிய அரபு எமிரேட்சுடன் (103-வது இடம்) மோதுகிறது. தர வரிசையில் 16-வது இடத்தில் உள்ள இந்திய 'சி' அணி 109-வது இடத்தில் உள்ள தெற்கு சூடான் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

    பெண்கள் பிரிவில் தர வரிசையில் முதலிடத்தில் உள்ள இந்திய 'ஏ' அணி முதல் சுற்றில் 80-வது இடத்தில் உள்ள தஜிகஸ்தானுடன் மோதுகிறது. 11-வது இடத்தில் உள்ள இந்திய 'பி' அணி வேல்ஸ் (90-வது இடம்) அணியுடனும், இந்திய 'சி' அணி (16-வது இடம்) ஆங்காங்குடனும் (95-வது இடம்) மோதுகின்றன.

    நேற்றைய தொடக்க விழாவின்போது பிரதமர் மோடி, இந்திய பெண்கள் மற்றும் அமெரிக்க ஆண்கள் அணிகள் எந்த நிற காயுடன் விளையாட வேண்டும் என்பதை தேர்வு செய்தார். இதில் அவர் இரண்டையுமே கருப்பு நிற காய்களாக எடுத்தார். இதனால் இந்திய பெண்கள் அணி முதல் சுற்றில் கருப்பு நிற காயுடன் விளையாடுகிறது.

    முதல் சுற்று போட்டி மாலை 3 மணிக்கு தொங்குவதையடுத்து வீரர்-வீராங்கனைகள் தாங்கள் தங்கி இருந்த ஓட்டல்களில் இருந்து புறப்பட்டு போட்டி நடைபெறும் இடத்துக்கு மதியம் 2 மணியளவில் வருகின்றனர். அவர்கள் பஸ்களில் அழைத்து வரப்படுகின்றனர். இதையடுத்து செஸ் ஒலிம்பியாட் போட்டி உற்சாகத்துடன் தொடங்குகிறது.

    • ஹரிகாவிற்காக சிறப்பு ஆம்புலன்ஸ் வாகனம், மருத்துவக்குழு என தனி கவனம் செலுத்தப்பட்ட உள்ளது.
    • 2012, 2015, 2017 ஆகிய 3 ஆண்டுகள் பெண்கள் உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் வெண்கலப்பதக்கத்தை வென்று ஹரிகா சாதனை படைத்தார்.

    சென்னை:

    செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நாளை சென்னை மாமல்லபுரத்தில் உள்ள பூஞ்சேரி கிராமத்தில் தொடங்க உள்ளது. இதில் 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

    இதன்படி, இந்தியா ஓபன் பிரிவில் 3 அணிகளையும், பெண்கள் பிரிவில் 3 அணிகளையும் களம் இறங்குகிறது. மொத்தம் 30 வீரர்/வீராங்கனைகள் 6 அணிகளாக களமிறங்குகின்றனர். பெண்கள் பிரிவில் இந்தியா 1 அணியில் கோனேரு ஹம்பி, ஹரிகா, வைஷாலி, தானியா சச்தேவ், பாக்தி குல்கர்னி ஆகிய வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர்.

    அதில், ஆந்திராவை சேர்ந்த ஹரிகா துரோனவள்ளி (31 வயது) நிரைமாத கர்ப்பிணியாக செஸ் ஒலிம்பியாட்டில் களமிறங்குகிறார். உலக தரவரிசையில் ஹரிகா 11-வது இடத்தில் உள்ளார். ஹரிகா தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். இவர் தனது 9 வயதில் தேசிய செஸ் சாம்பியன் பட்டம் வெற்றார். தனது 10-வது வயதிலும் ஹரிகா மீண்டும் தேசிய அளவிலான செஸ் போட்டியில் பதக்கத்தையும் வென்றார்.

    செஸ் உலகின் வெற்றிநடைபோட்டு வரும் ஹரிகாவுக்கு 2008-ல் மத்திய அரசு அர்ஜூனா விருது வழங்கி கவுரவித்தது. 2012, 2015, 2017 ஆகிய 3 ஆண்டுகள் பெண்கள் உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் வெண்கலப்பதக்கத்தை வென்று ஹரிகா சாதனை படைத்தார். இவர் 2011- ல் நடந்த செஸ் போட்டியில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்றுள்ளார். இவரது சாதனைகளை மேலும் சிறப்பிக்கும் விதமாக 2019-ல் ஹரிகாவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

    இந்நிலையில் தற்போது மாமல்லபுரம் செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வெல்லும் முனைப்பில் ஹரிகா மனதளவிலும், உடலளவிலும் தயாராகி வருகிறார். ஹரிகா நிறைமாத கர்ப்பிணி என்பதால் அவருக்காக மாமல்லபுர செஸ் ஒலிம்பியாட்டில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    ஹரிகாவிற்காக சிறப்பு ஆம்புலன்ஸ் வாகனம், மருத்துவக்குழு என தனி கவனம் செலுத்தப்பட்ட உள்ளது. செஸ் விளையாட்டை பொறுத்தவரை நீண்ட நேரம் அமர்ந்து விளையாட வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்பதால் நிறைமாத கர்ப்பிணியான ஹரிகா மீது அனைவரின் கவனமும் திரும்பியுள்ளது.

    • திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு 28.07.2022 அன்று உள்ளூர் விடுமுறை.
    • சென்னை , திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் 27.08.2022 அன்று பணி நாள்.

    44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் மாமல்லபுரத்தில் நடைபெறுவதை முன்னிட்டு விளையாட்டின் தொடக்க நாளான 28.07.2022 அன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக அரசு செயலாளர் டி.ஜகந்நாதன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கூறப்பட்டுள்ளதாவது:

    மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட்டின் தொடக்க நாள் நிகழ்வு 28.07.2022 அன்று நடைபெறுவதை முன்னிட்டு அவ்விளையாட்டில் பங்கேற்கும் வீரர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் வருகையின் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் சென்னை , திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு 28.07.2022 அன்று ஒரு நாள் மட்டும் அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்குமாறு அரசு முதன்மை செயலாளர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் குறிப்பில் கேட்டுக் கொண்டுள்ளார்.

    மேற்காணும் கோரிக்கையினை அரசு கவனமுடன் பரிசீலித்து, மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட்டின் தொடக்க நாளான 28.07.2022 (வியாழக்கிழமை) அன்று ஒரு நாள் மட்டும் சென்னை , திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள அத்தியாவசிய சேவைகள் வழங்கும் அரசுத்துறைகள் தவிர்த்து மற்ற அரசு அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளித்து ஆணை வெளியிடப்படுகிறது.

    மேலும், அவ்விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் 27.08.2022 அன்று (நான்காவது சனிக்கிழமை) சென்னை , திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு பணி நாளாக அறிவித்து ஆணை வெளியிடப்படுகிறது.

    மேற்கண்ட உள்ளூர் விடுமுறை தினமானது செலாவணி முறிச்சட்டம் 1881 (Under Negotiable Instruments Act, 1881)-ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு சென்னை , காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள கருவூலம், சார்நிலைக் கருவூலகங்களும் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்பட தகுந்த ஏற்பாட்டினை செய்யுமாறு மேற்கண்ட மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்பதற்காக ஒவ்வொரு நாட்டு வீரர், வீராங்கனைகள் சென்னை வர தொடங்கி உள்ளனர்.
    • இன்று மேலும் 12 நாட்டு வீரர், வீராங்கனைகள் சென்னை வந்தனர்.

    சென்னை:

    44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரம் பூஞ்சேரி கிராமத்தில் உள்ள போர் பாயிண்ட்ஸ் ஷெரட்டன் நட்சத்திர விடுதி வளாகத்தில் வருகிற 28-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை நடக்கிறது.

    இந்தியாவில் முதல் முறையாக நடைபெறும் வரலாற்று சிறப்புமிக்க செஸ் ஒலிம்பியாட்டில் 187 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.

    செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்பதற்காக ஒவ்வொரு நாட்டு வீரர், வீராங்கனைகள் சென்னை வர தொடங்கி உள்ளனர்.

    முதல் அணியாக ஆப்பிரிக்க கண்டத்தைச் சேர்ந்த மடகாஸ்கர் தீவைச் சேர்ந்த வீரர்கள் வந்தனர். அதைத் தொடர்ந்து அங்கேரி, ஜாம்பியா நாட்டு அணிகள் வந்தன.

    அதைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா, நைஜீரியா, உருகுவே, டோகோ, இங்கிலாந்து, ஆங்காங், வேல்ஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், செர்பியா, வியாட்நாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் வந்தனர்.

    இன்று மேலும் 12 நாட்டு வீரர், வீராங்கனைகள் சென்னை வந்தனர். உகாண்டா, கோஸ்டாரிகா, மேகன்தீவு, கஜகஸ்தான், கயானா, தான்சானியா, போலந்து, எஸ்டோனியா, பல்கேரியா, செர்பியா, சோமோரோஸ் தீவு உள்ளிட்ட 12 நாடுகளைச் சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் இன்று அதிகாலையில் வந்தனர்.

    விமான நிலையத்தில் அவர்களை தமிழக அரசு அதிகாரிகள் வரவேற்றனர். தன்னார்வலர்கள் உதவியுடன் அவர்கள் ஓட்டலுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

    இன்று இரவுக்குள் செக்குடியரசு, ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, நியூசிலாந்து, பார்படோஸ், உக்ரைன், பப்புவா நியூ கினியா, ஈரான், கனடா, தென்ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 31 வீரர், வீராங்கனைகள் வருகிறார்கள்.

    • 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.
    • செஸ் ஆட்டத்தை அனைத்து தரப்பு மக்களிடமும் பிரபலப்படுத்தும் நோக்கிலும் போட்டிக்கான ஏற்பாடுகளை வெகுவிமரிசையாக செய்து வருகிறது.

    செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் வெளிநாட்டு வீரர், வீராங்கனைகள் இன்று முதல் மாமல்லபுரத்துக்கு வருகின்றனர் என்று அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார். மாமல்லபுரம், 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரம் பூஞ்சேரி கிராமத்தில் உள்ள போர்பாயிண்ட்ஸ் ஷெரட்டன் நட்சத்திர விடுதியில் வருகிற 28-ந் தேதி முதல் ஆகஸ்டு 10-ந் தேதி வரை நடக்கிறது. செஸ் விளையாட்டில் ஒலிம்பிக்காக கருதப்படும் செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியாவில் முதல்முறையாக நடைபெறுகிறது.

    இந்த போட்டியில் இந்தியா, நார்வே, பிரான்ஸ், ஜெர்மனி, அர்ஜென்டினா, ஸ்பெயின் உள்பட 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். கவுரவமிக்க செஸ் ஒலிம்பியாட்டை நடத்தும் வாய்ப்பை பெற்றுள்ள தமிழக அரசு இந்த போட்டியை என்றென்றும் நினைவில் நிலைத்து நிற்கும் வகையிலும், செஸ் ஆட்டத்தை அனைத்து தரப்பு மக்களிடமும் பிரபலப்படுத்தும் நோக்கிலும் போட்டிக்கான ஏற்பாடுகளை வெகுவிமரிசையாக செய்து வருகிறது.

    இந்த நிலையில் போட்டிக்காக அமைக்கப்பட்டுள்ள நவீன அரங்கம், விளையாட்டு வீரர்களுக்கு செய்யப்பட்டு இருக்கும் அடிப்படை வசதிகள் உள்ளிட்டவைகளை விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் நேற்று பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    செஸ் ஒலிம்பியாட் போட்டியை தமிழகம் முழுவதும் பிரபலப்படுத்தும் வகையில் அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறப்பினர்கள், மாவட்ட கலெக்டர்கள், சமூக அமைப்புகள், பள்ளி கல்வித்துறை, உயர்கல்வித்துறை என எல்லா துறைகளும் எல்லா இடத்துக்கும் பரவலாக கொண்டு போய் சேர்த்திருக்கிறார்கள். இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு 187 நாடுகளில் இருந்து 2,000 வீரர்கள், 200 நடுவர்கள், சர்வதேச செஸ் கூட்டமைப்பை சேர்ந்த 400 பேர் என மொத்தம் 3,000 பேர் சென்னைக்கு வர உள்ளனர். வெளிநாட்டு வீரர், வீராங்கனைகள் இன்று முதல் சென்னைக்கு வர இருக்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.

    வெளிநாட்டு செஸ் வீரர்களுக்கு தமிழக கலாசாரம், பண்பாட்டின்படி வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தங்குவதற்கு மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை மற்றும் ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள 29 நட்சத்திர விடுதிகளில் 2,600 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளன. அவர்களுக்கு 47 வகையான உணவு வகைகளும் தயார் செய்யப்பட்டு உபசரிக்கப்பட இருக்கிறது. தமிழ் கலாசாரம், பண்பாடு பற்றிய புத்தகங்களையும் வழங்க உள்ளோம். வெளிநாட்டு வீரர்கள் இங்கு வந்து அவர்களின் நாட்டிற்கு திரும்பி செல்லும் வரை 4,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

    வெளிநாட்டு வீரர்களின் உடல் நலத்தை காக்கும் பொருட்டு 198 டாக்டர்கள், 74 செவிலியர்கள், 163 பிற களப்பணியாளர்கள் என மொத்தம் 435 பேர் அடங்கிய 7 மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இவ்வாறு அமைச்சர் மெய்யநாதன் கூறினார். அப்போது செஸ் ஒலிம்பியாட் போட்டி அமைப்பு குழு தனி அதிகாரி சங்கர், மாமல்லபுரம் டி.எஸ்.பி. ஜெகதீஸ்வரன், மாவட்ட நில எடுப்பு பிரிவு வருவாய் அலுவலர் நாராயணன், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் வி.கணேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

    • கண்டமங்கலம் யூனியன் வளாகத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • சின்னம் அச்சிட்ட மஞ்சப்பையினை பொதுமக்களுக்கு வழங்கினார்.

    விழுப்புரம்:

    கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் மாவட்ட விளையா ட்டுத்துறை சார்பில் 44வது செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டி தொடர்பான, இலச்சினை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது. கண்டமங்கலம் யூனியன் தலைவர் ஆர்.எஸ்.வாசன் தலைமை தாங்கி இலச்சினை மற்றும் சின்னம் அச்சிட்ட மஞ்சப்பையினை பொதுமக்களுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கண்டமங்கலம் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் சிவக்குமார், சண்முகம் , ஒன்றிய கவுன்சிலர் பிரபாகரன் , மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். 

    • கரூர் ரயில் நிலைய சந்திப்பு (ஜங்ஷன்) முன்பிருந்து இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தொடங்கி வைத்து கலந்து கொண்டு இரு சக்கர வாகனத்தை ஓட்டி சென்றார்.
    • பேரணி கரூர் ரயில் நிலைய சந்திப்பில் தொடங்கி, சர்ச், திண்ணாப்பா முனைகள், பேருந்து நிலையம் வழியாக திருவள்ளுவர் மைதானம் சென்றடைந்தது.

    கரூர் :

    மாமல்லபுரத்தில் 44 சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் போட்டி நடைபெறுவதையொட்டி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இதன் ஒரு கட்டமாக கரூர் ரயில் நிலைய சந்திப்பு (ஜங்ஷன்) முன்பிருந்து இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தொடங்கி வைத்து கலந்து கொண்டு இரு சக்கர வாகனத்தை ஓட்டி சென்றார்.

    பேரணி கரூர் ரயில் நிலைய சந்திப்பில் தொடங்கி, சர்ச், திண்ணாப்பா முனைகள், பேருந்து நிலையம் வழியாக திருவள்ளுவர் மைதானம் சென்றடைந்தது.

    முன்னதாக, முதல்வர் பங்கேற்ற சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் போட்டி தொடர்பாக விழிப்புணர்வு குறும்படத்தை செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன எல்ஈடி வாகனத்தில் ஒளிபரப்பட்டதை கலெக்டர் பிரபுசங்கர் பார்வையிட்டார்.

    மாவட்ட வருவாய் அலுவலர் எம்.லியாகத், சமுக பாதுகாப்புத்திட்ட தனித்துனை ஆட்சியர் சைபுதீன், மாவட்ட விளையாட்டு அலுவலர் சுப்பிரமணியன், கரூர் வட்டாட்சியர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனார்.

    ×