search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "chess player"

    • செஸ் வீராங்கனை அமினா போட்டி நடைபெறும் இடத்திற்குள் நுழைகிறார்.
    • அவர் எதிராளியின் மேசையை அணுகி செஸ் போர்டில் பாதரசம் தெளிப்பது பதிவானது.

    மாஸ்கோ:

    ரஷியாவின் தாகெஸ்தானில் நடந்த செஸ் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியின் போது வீராங்கனையான ஒஸ்மானோவா திடீரென நோய்வாய்ப்பட்டார். இதையடுத்து அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இந்த விவகாரம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், இந்தப் போட்டியில் ரஷிய வீராங்கனை அமினா அபகராவோ தனது எதிரிக்கு விஷம் வைத்ததாக குற்றம் சாட்டப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதுதொடர்பாக போட்டி அமைப்பாளர்கள் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    மேலும் அங்கிருந்த சி.சி.டி.வி. கேமராவையும் ஆய்வு செய்தனர்.

    அதில், செஸ் வீராங்கனை அமினா போட்டி நடைபெறும் இடத்திற்குள் நுழைகிறார். போட்டி தொடங்கும் முன் அமினா அபகரோவா தனது எதிராளியின் மேசையை அணுகி செஸ் போர்டில் பாதரசத்தை தெளிப்பது பதிவாகியுள்ளது.

    இதையடுத்து, அமினா அபகராவோவுக்கு விளையாட தடை விதிக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

    இதுதொடர்பாக அந்நாட்டு விளையாட்டு மந்திரி கூறுகையில், பலரைப் போலவே நானும் என்ன நடந்தது என்பதில் குழப்பம் அடைந்துள்ளேன். அமினா அபகரோவா போன்ற அனுபவம் வாய்ந்த போட்டியாளரின் நோக்கங்கள் புரிந்துகொள்ள முடியாதவை. அவர் நிச்சயம் இதற்கு பதிலளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    • 'செஸ்' சாதனை வீரர் பிரக்ஞானந்தா மற்றும் அவரது பெற்றோரை நேரில் அழைத்து 'மின்சார காரை பரிசாக வழங்கினார்.
    • கார் பரிசு வழங்கிய தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவுக்கு பிரக்ஞானந்தா குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்

    உலகக் கோப்பை 'செஸ்' போட்டி கடந்த ஆகஸ்ட் மாதம் அஜர்பைஜானில் நடந்தது. இந்த போட்டியில் உலகின் முதல்நிலை வீரரான மேக்னஸ் கார்ல்சனுக்கு எதிராக விளையாடிய பிரக்ஞானந்தா 2-ம் இடம் பிடித்து சாதனை படைத்தார்.

    'செஸ்' வீரர் பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி உள்பட பலர் பாராட்டு தெரிவித்தனர். இந்நிலையில் மஹிந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் மஹிந்திரா பிரக்ஞானந்தாவை 'எக்ஸ்' வலைதளத்தில் பாராட்டினார். மேலும் பிரக்ஞானந்தாவுக்கு கார் பரிசு வழங்கப்போவதாகவும் அவர் அறிவித்திருந்தார்.

    இந்நிலையில் இன்று'செஸ்' சாதனை வீரர் பிரக்ஞானந்தா மற்றும் அவரது பெற்றோரை நேரில் அழைத்து 'மஹிந்திரா XUV 400' மின்சார காரை மஹிந்திரா நிறுவன அதிபர் ஆனந்த் மஹிந்திரா பரிசாக வழங்கினார். அதனை அவர்கள் மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டனர்.

    கார் பரிசு வழங்கிய தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவுக்கு பிரக்ஞானந்தா குடும்பத்தினர் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

    ×