search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chidambarapuram"

    • சிதம்பரபுரம் ஊராட்சியில் உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு ஊராட்சி மன்ற தலைவர் பேபி முருகன் தலைமையில் தூய்மை நடைபயண விழிப்புணர்வு முகாம் ஆத்துக்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் முருகன், சிதம்பரபுரம் முன்னாள் ஊராட்சி மன்ற துணை தலைவர் முருகன், வார்டு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    வள்ளியூர்:

    ராதாபுரம் யூனியனுக்கு உட்பட்ட சிதம்பரபுரம் ஊராட்சியில் உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு ஊராட்சி மன்ற தலைவர் பேபி முருகன் தலைமையில் தூய்மை நடைபயண விழிப்புணர்வு முகாம் ஆத்துக்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக ராதாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் பிச்சையா மற்றும் பிளாரன்ஸ் விமலா கலந்து கொண்டனர். கழிப்பறையால் ஏற்படும் நன்மைகள் குறித்தும், கழிப்பறைகளை எப்படி பராமரிக்க வேண்டும் எனவும், கழிப்பறைகளினால் சுகாதாரம் எந்த அளவுக்கு மேம்படுகிறது என்பது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் பிச்சையா எடுத்துக் கூறினார்.

    பின்பு உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தூய்மை நடை பயணம் மேற்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் முருகன், சிதம்பரபுரம் முன்னாள் ஊராட்சி மன்ற துணை தலைவர் முருகன், வார்டு உறுப்பினர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். ஆசிரியர் மகேஷ் நன்றி கூறினர்

    • நெல்லை மாவட்டத்தில் ஊராட்சி பகுதிகளில் மக்கும், மக்காத குப்பைகளை சேகரித்து பாதுகாப்பாக அகற்றும் திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது
    • சிதம்பராபுரம் ஆகிய கிராமத்தைச் சேர்ந்த 620 குடும்பத்தினருக்கு மக்கும், மக்காத குப்பைகளை சேகரித்து அகற்றும் விதமாக தலா 2 வீதம் 1,240 கூடைகள் வழங்கினார்.

    பணகுடி:

    நெல்லை மாவட்டத்தில் ஊராட்சி பகுதிகளில் மக்கும், மக்காத குப்பைகளை சேகரித்து பாதுகாப்பாக அகற்றும் திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக ராதாபுரம் யூனியன் சிதம்பரபுரம் ஊராட்சி பிரகாசபுரம் கிராமத்தில் குப்பைகளை சேகரித்து அகற்றும் நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கூடைகள் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் பங்கு பெற்ற மாவட்ட திட்ட அலுவலர் பழனி பிரகாசபுரம், ஆத்துகுறிச்சி , சிதம்பராபுரம் ஆகிய கிராமத்தைச் சேர்ந்த 620 குடும்பத்தினருக்கு மக்கும், மக்காத குப்பைகளை சேகரித்து அகற்றும் விதமாக தலா 2 வீதம் 1,240 கூடைகள் வழங்கினார். இதில் ராதாபுரம் பங்குத்தந்தை ராபின் பிளாஸ்டிக்கினால் ஏற்படும் தீமைகள் குறித்தும், மரக்கன்றுகள் நடுவதன் பலன் குறித்தும், பொதுமக்களிடம் விளக்கம் அளித்தார். வீடுகள் தோறும் துண்டு பிரசுரம் அளித்தும் வீடுகளில் ஒட்டியும் பிரசார பேரணி நடத்தப்பட்டது. பிளாஸ்டிக் பைகளை ஒழிக்கும் நடவடிக்கையாக அனைத்து பொதுமக்களுக்கும் மஞ்சள் பை வழங்கப்பட்டு பயன்படுத்துமாறு வலியுறுத்தப்பட்டது. இதையொட்டி 200 மரக்கன்றுகள் நடப்பட்டு அதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டது. மேலும் சுகாதார குறித்த பணிகளை மேற்கொள்வது சம்பந்தமாக அனைத்து பொதுமக்களும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

    ×