search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cholavanthan"

    • 300-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
    • அரசுக்கு எதிராக கோஷமிட்டதால் பரபரப்பு.

    சோழவந்தான்:

    மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள முள்ளிபள்ளம் கிராமத்தில் விதிகளை மீறி ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டிருப்பதாக புகார் எழுந்தது.

    முள்ளிபள்ளம் அய்யப்பன் கோவில் முதல் இளங்காளியம்மன் கோவில் வரை ஆக்கிரமித்து 128 வீடுகள் கட்டப்பட்டுள்ள தாகவும், இதனை அகற்ற வேண்டுமென தனி நபர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

    இதையடுத்து சம்பந்தப்பட்ட வீட்டின் ஆக்கிரமிப்பாளர்களுக்கு காலி செய்யுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர். ஆனால் அவர்கள் வீடுகளை காலி செய்யாமல் அகற்றக் கூடாது என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

    ஆனாலும் கோர்ட்டு உத்தரவுப்படி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என அதிகாரிகள் தரப்பில் கண்டிப்புடன் தெரிவிக்கப்பட்டது.

    அதன்படி, இன்று காலை நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ராதா முத்துக் கிருஷ்ணன், வாடிப்பட்டி வட்டாட்சியர் ராமச்சந்திரன், சமயநல்லூர் டி.எஸ்.பி. ஆனந்தராஜ், சோழவந்தான் இன்ஸ்பெக்டர் செல்லப்பாண்டி ஆகியோர் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

    அதனைத்தொடர்ந்து பலத்த பாதுகாப்புடன் 4 ஜே.சி.பி. எந்திரங்களின் உதவியுடன் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.

    வீடுகளை இடிக்கும் போது அந்தப்பகுதிகளை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த முயன்றனர். ஆனால் போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். மேலும் சிலர் அரசுக்கு எதிராக கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இருப்பினும் கோர்ட்டு உத்தரவுப்படி இன்று மதியம் வரை ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கப்பட்டது. முள்ளிப்பள்ளம் அய்யப்பன் கோவில் முதல் இளங்காளியம்மன் கோவில் வரை 1.2 கிலோ மீட்டரில் கட்டப்பட்டிருந்த 128 ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இன்று மதியம் வரை ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கப்படும். நாளையும் ஆக்கிரமிப்பை அகற்றும் பணிகள் தொடரும் என அறிவிக்கப்பட்டது.

    இதுகுறித்து சுமார் 50 ஆண்டுகாலம் குடியிருந்து வந்த வீடுகள் இடிக்கப்பட்டதால் அந்தப்பகுதி பொதுமக்கள் சோகத்துடன் காணப்பட்டனர். தொடர் ந்து முள்ளிப்பள்ளத்தில் பதற்றம் நீடிப்பதால் பாதுகாப்புக்காக போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

    • உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.
    • ஊராட்சி மன்றத்தலைவர் பூங்கொடி பாண்டி தலைமை தாங்கினார்.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே செல்லம்பட்டி ஒன்றியம் முதலைக்குளம் ஊராட்சி யில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.

    இந்த கூட்டத்திற்கு ஊராட்சி மன்றத்தலைவர் பூங்கொடி பாண்டி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ரேவதி பெரிய கருப்பன், பற்றாளர் ரோஸ்லின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஊராட்சி செயலாளர் பாண்டி திட்டங்கள் குறித்து அறிக்கை வாசித்தார்.

    இதே போல் விக்கிர மங்கலம் ஊராட்சியில் செக்கான்கோவில்பட்டி கிராமத்தில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு தலைவர் கலியுக நாதன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் செல்விசெல்வம், பற்றாளர் செல்வமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் பால்பாண்டி அறிக்கை வாசித்தார்.

    வாடிப்பட்டி ஒன்றியம் காடுபட்டி ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு தலைவர் ஆனந்தன் தலைமை தாங்கினார். ஊராட்சி செயலாளர் ஒய்யனன் அறிக்கை வாசித்தார். மன்னாடிமங்கலம் ஊராட்சியில் தலைவர் பவுன் முருகன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் பாக்கியம் செல்வம் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் திருச்செந்தில் அறிக்கை வாசித்தார். தென்கரை ஊராட்சியில் தலைவர் மஞ்சுளா அய்யப்பன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் முனி யராஜ் அறிக்கை வாசித்தார்.

    மேலக்கால் ஊராட்சியில் தலைவர் முருகேஸ்வரி, வீரபத்திரன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சித்தாண்டி முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் விக்னேஷ் அறிக்கை வாசித்தார்.

    திருவாலவாயநல்லூர் ஊராட்சியில்தலைவர் சகுபர் சாதிக் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் மாலிக் முன்னிலை வகித்தார். செயலாளர் வேலன் அறிக்கை வாசித்தார்.

    இதே போல் முள்ளி பள்ளம், சி.புதூர், சித்தாலங்குடி, ரிஷபம், நெடுங்குளம், திருவேடகம், இரும்பாடி, கருப்பட்டி, நாச்சிகுளம், குருவித்துறை மற்றும் செல்லம்பட்டி ஒன்றியத்தில் சக்கரப்ப நாயக்கனூர், எரவார்பட்டி, பானாமூப்பன்பட்டி ஆகிய ஊராட்சிகளிலும் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.

    • சோழவந்தான் அருகே கும்பாபிஷேக விழா நடந்தது.
    • முன்னாள் ஒன்றிய சேர்மன் இளங்கோவன், அஜித்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே உள்ள விக்கிரமங்கலத்தில் காமாட்சியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. நான்கு கால பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடந்தேறியது. பின்னர் யாகசாலையிலிருந்து கடம் புறப்பாடாகி நல்லகுட்டி வகையறாக்கள் புனிதநீர் குடம் சுமந்து கோவிலை வலம் வந்தனர். கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றிகும்பாபிஷேகம் செய்தனர். இதையடுத்து பரிவார தெய்வங்களுக்கும் புனித நீர் ஊற்றி அபிஷேகம் நடந்தது. இதன்பின் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை மேக்கிழார் பட்டி, அம்மாபட்டி, குரும்பபட்டியை சேர்ந்த நல்லகுட்டி வகையறா, விக்கிரமங்கலம் ஆண்டித்தேவர் வகையறா மற்றும் விழா கமிட்டியினர் செய்திருந்தனர். இதில் உசிலம்பட்டி முன்னாள் எம்.எல்.ஏ. கதிரவன், பார்வர்டு பிளாக் நிர்வாகி ரெட்காசி, அ.தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் ராஜா, ஊராட்சி சேர்மன் கலியுகநாதன், முன்னாள் ஒன்றிய சேர்மன் இளங்கோவன், அஜித்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • சோழவந்தான் பஸ் நிலையத்திற்கு கருணாநிதி பெயர் சூட்ட முடிவுக்கு அ.தி.மு.க. கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • சமுதாயக்கூடத்தில் பேரூராட்சி மாதாந்திர மன்ற கூட்டம் நடந்தது.

    சோழவந்தான்

    சோழவந்தானில் மாநில நிதி ஆணைய மூலதன மானிய திட்டத்தின் கீழ் ரூ.2.கோடி மதிபீட்டில் பஸ் நிலையம் கட்டி முடிக்கப் பட்டு கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக நிறக்கப்படாமல் உள்ளது. இந்தநிலையில் நேற்று சமுதாயக்கூடத்தில் நடந்த பேரூராட்சி மாதாந்திர மன்ற கூட்டத்திற்கு தலைவர் ஜெயராமன் தலைமை தாங்கினார்.

    செயல் அலுவலர் சகாய அந்தோணி யூசின் முன்னிலை வகித்தார். இளநிலை உதவியாளர் கண்ணம்மாள் பேரூராட்சி வரவுசெலவு உள்ளிட்ட 14 தீர்மானங்களை மன்றம் அங்கீகரிக்கக்கோரி வாசித்தார். இதில் 2-வது தீர்மானமான திறக்கப்படாத பேரூராட்சி பஸ் நிலையத் திற்கு முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி என பெயர் சூட்டப்படும் என்ற தீர்மானத்திற்கு பேரூராட்சி 4-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் கணேசன் எதிர்ப்பு தெரிவித்தார்.

    இதன் பின்னர் பஸ் நிலையத்திற்கு முதல்-அமைச்சர் முதல்வர் ஜெயலலிதா பெயர் வைக்கக்கோரி மன்ற கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 6 பேர் கையொப்பமிட்டு மனுவை செயல் அலுவலர் சகாய அந்தோணி யூசினிடம் கொடுத்தனர்.

    அப்போது குறுக்கிட்ட தலைவர் ஜெயராமன் தி.மு.க. மற்றும் சுயேட்சை கவுன்சிலர்கள் ஆதரவுடன் மெஜாசாரிட்டி பலம் உள்ள தால் பஸ் நிலையத்திற்கு முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பெயர் சூட்ட மன்றம் அங்கீகரிப்பதாக கூறியதையடுத்து பேரூராட்சி அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கணேசன், வசந்தி ரேகா, சரண்யா, கணேசன், சண்முக ராஜா பாண்டியன் உள்ளிட்டோர் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்து கோஷங்களை எழுப்பிதால் பரபரப்பு ஏற்பட்டது.

    மேலும் பேரூராட்சியில் நிறைவேற்றப்பட்ட 14 தீர்மானங்களில் 3-வது தீர்மானமாக கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் உள்ள ெரயிவே மேம்பாலத்திற்கு அறிஞர் அண்ணா பெயர் சூட்ட மன்றத்தில் தி.மு.க., அ.தி.மு.க. கவுன்சிலர்கள் ஆதரவோடு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • சோழவந்தான் பேரூராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்ட பயிற்சி மையமாக மாறியது.
    • முன்மாதிரி பேரூராட்சியாக தேர்தெடுக்கப்பட்டு பின்னர் தமிழக முதலமைச்சாரால் விருது வழங்கப்பட்டது.

    சோழவந்தான்

    தமிழகத்தில் உள்ள 490 பேரூராட்சிகளில் நான்கு பேரூராட்சிகள் முன் மாதிரி பேரூராட்சியாக தேர்தெடுக்கப்பட்டதில் மதுரை மாவட்டத்தில் உள்ள சோழவந்தான் பேரூராட்சியும் ஓன்றாகும். மேலும் முன்மாதிரி பேரூராட்சியாக தேர்தெடுக்கப்பட்டு பின்னர் தமிழக முதலமைச்சாரால் விருது வழங்கப்பட்டதால் தென் தமிழகத்தில் திடக்கழிவு பற்றிய பயிற்சி மையமாக சோழவந்தான் பேரூராட்சி உருவாகி உள்ளது.

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியா பட்டி, மல்லாங்கிணறு, சுந்தர பாண்டியம், மம்சாபுரம், சேத்தூர், செட்டியார்பட்டி, வத்திராயிருப்பு, வா.புதூர், கொடிக்குளம் உள்ளிட்ட பேரூராட்சிகளின் தலைவர்கள் மற்றும் செயல் அலுவலர்கள், துப்புரவு ஆய்வாளர்கள் பங்கேற்ற திடக்கழிவு மேலாண்மை குறித்து பயிற்சி பட்டறை முகாம் பேரூராட்சிக்குட்பட்ட ஆண்டியமேடு திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் நடந்தது.

    முகாமிற்கு பேரூராட்சி உதவி இயக்குனர் சேதுராமன் தலைமை தாங்கினார். துப்புரவு ஆய்வாளர் முருகானந்தம் திடக்கழிவு மற்றும் மண்புழு உரம் தயாரிப்பு குறித்தும், மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் என தரம்பிரித்து விண்ட்ரோ முறையில் உரமாக்குதல் குறித்து செயல் முறை விளக்கம் அளித்தார். வளம்மீட்பு பூங்காவில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியும் நடந்தது. இப்பயிற்சி முகாமில் பேரூராட்சி தலைவர்கள் கே.ஜெயராமன், துணை தலைவர் லதாகண்ணன், இளநிலை உதவியாளர் கண்ணம்மாள் கல்யா ணசுந்தரம் மற்றும் கவுன்சிலர்கள் சத்தியபிரகாஷ், குருசாமி, துப்புரவு மேற்பார்வை யாளர்கள் சுந்தராஜன் வினோத்குமார், எலட்ரீசியன், பாலமுருகன், சோணை, வெங்கடேசன், பூவலிங்கம், பாண்டி உள்ளிட்டோர் பலர் பங்கேற்றனர்.

    ×