என் மலர்
நீங்கள் தேடியது "Chris Gayle"
- ரோகித் சர்மா தற்போது டவுனில் புதிய சிக்சர் கிங்.
- விராட் கோலி கேரியரின் கடைசிப் பகுதியில் வருகிறது என்பதை எனக்குத் தெரியும்.
இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் 2 போட்டிகளில் இந்தியா அடுத்தடுத்த வெற்றிகளைப் பெற்று 2 - 0 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது.
முன்னதாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா சமீபத்திய போட்டிகளில் தடுமாறி வந்தார். அதனால் பல விமர்சனங்களை சந்தித்தார். இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான 2-வது போட்டியில் சதத்தை அடித்து பார்முக்கு திரும்பினார். அதில் 12 பவுண்டரிகள் ஏழு சிக்சர்கள் அடங்கும்.
அத்துடன் ஒருநாள் கிரிக்கெட்டில் 2-வது அதிக சிக்சர்கள் (337) விளாசிய கிறிஸ் கெயிலின் உலக சாதனையை ரோகித் முறியடித்தார்.
இந்த பட்டியலில் பாகிஸ்தானின் வீரர் அப்ரிடி 351 சிக்சருடன் முதலிடத்தில் உள்ளார்.
இந்நிலையில் தன்னுடைய சாதனையை முறியடித்த ரோகித் சர்மாவுக்கு வாழ்த்துகளும் விராட் கோலிக்கு ஆதரவாகவும் சில கருத்துகளை கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
ரோகித் சர்மாவுக்கு வாழ்த்துக்கள். விளையாட்டுக்கு எப்போதுமே ஒரு புதிய பொழுதுபோக்காளர் தேவை. நான் செய்தது போலவே இத்தனை வருடங்களாக ரோகித் சர்மா ரசிகர்களை பொழுது போக்கி வருகிறார். எனவே அவர் தற்போது டவுனில் புதிய சிக்சர் கிங். அவருக்கு வாழ்த்துக்கள். இன்னும் அவர் நிறைய சிக்சர்கள் அடிப்பார் என்று நம்புகிறேன்.
விராட் கோலி இப்போதும் உலகில் சிறந்த வீரர். பார்மை தாண்டி விராட் கோலி இப்போதும் சிறந்த வீரர். அவருடைய புள்ளி விபரங்களும் அனைத்து வகையான பார்மெட்டில் எவ்வளவு சதங்கள் அடித்துள்ளார் என்பது அவற்றை நிரூபிக்கும். இது அனைத்து வகையான வீரர்களும் செல்லக் கூடிய ஒரு கடினமான காலமாகும்.
இது விராட் கோலி கேரியரின் கடைசிப் பகுதியில் வருகிறது என்பதை எனக்குத் தெரியும். ஆனால் இது சாதாரணமாக நடக்கக் கூடியதாகும். இது போன்ற சூழ்நிலைகளில் அவர் தம்மைத்தாமே ஆதரவு கொடுத்துக் கொண்டு மீண்டும் வரவேண்டும்.
என்று கூறினார்.
- சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்களில் கிறிஸ் கெய்ல் முதலிடம் வகிக்கிறார்.
- 3-வது இடத்தில் இந்தியாவின் ஷிகர் தவான் உள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி முதல் இடம் பிடிக்க வாய்ப்பு உள்ளது. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வெஸ்ட்இண்டீசின் கிறிஸ் கெய்ல் முதலிடம் (17 ஆட்டத்தில் 3 சதம் உள்பட 791 ரன்) வகிக்கிறார்.
2-வது இடத்தில் இலங்கையின் மஹேலா ஜெயவர்த்தனேவும் (742 ரன்), 3-வது இடத்தில் இந்தியாவின் ஷிகர் தவானும் (10 ஆட்டத்தில் 3 சதம் உள்பட 701 ரன்) உள்ளனர். இவர்கள் அனைவரும் ஓய்வு பெற்று விட்டனர்.
கெய்லின் சாதனையை முறியடிக்க இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு அருமையான வாய்ப்பு கிட்டியுள்ளது. கோலி இதுவரை 13 ஆட்டத்தில் ஆடி 5 அரைசதம் உள்பட 529 ரன் எடுத்துள்ளார். இன்னும் 263 ரன்கள் எடுத்தால் சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் அதிக ரன் எடுத்த வீரர் என்ற சாதனையை படைக்க முடியும்.
இந்திய கேப்டன் ரோகித் சர்மா 481 ரன்கள் (10 ஆட்டம்) எடுத்துள்ளார். அனேகமாக ரோகித் சர்மாவின் கடைசி சாம்பியன்ஸ் கோப்பை போட்டியாக இது இருக்கும் என்பதால் அவரும் முத்திரை பதிக்க முயற்சிப்பார்.
அதிக விக்கெட் வீழ்த்தியோர் பட்டியலில் டாப்-3 இடங்களில் நியூசிலாந்தின் கைல் மில்ஸ் (28 விக்கெட்), இலங்கையின் மலிங்கா (25 விக்கெட்), முரளிதரன் (24 விக்கெட்) ஆகியோர் உள்ளனர்.
- 'சூப்பர் 10’ கிரிக்கெட் லீக் டிசம்பர் மாதம் பெங்களூரில் தொடங்கவுள்ளது.
- இதில் திரை நட்சத்திரங்கள் மற்றும் ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்திய முன்னணி நடிகர் கிச்சா சுதீப் மற்றும் வெஸ்ட் இந்தியன் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல் இணைந்து, 'சூப்பர் 10' என்ற தனித்துவமான கிரிக்கெட் போட்டியின் முதல் பதிப்பை அறிவித்தனர். இந்த போட்டியில் இந்திய திரை நட்சத்திரங்கள், ஓய்வு பெற்ற சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கார்ப்பரேட் பணியாளர்கள் இணைந்து 10 ஓவர் கொண்ட போட்டிகளில் பங்கேற்பார்கள். இப்போட்டிகள் இந்த வருடம் டிசம்பர் மாதம் பெங்களூருவில் 2 நாட்களுக்கு நடைபெறும்.

கிறிஸ் கெய்ல்
இந்த லீக் போட்டிகளில் தமிழ், பாலிவுட், கன்னடம் மற்றும் தெலுங்கு துறையைச் சேர்ந்த நடிகர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் இணைந்து விளையாடவுள்ளனர். இப்போட்டி குறித்து மேற்கிந்திய கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல் கூறுகையில், "உலகம் முழுவதும் உள்ள எனக்கு பிடித்த கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் இந்திய திரைத்துறை பிரபலங்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடுவது மிகப்பெரும் மகிழ்ச்சி. இந்த போட்டி 'டி10' வடிவில் அமைக்கப்பட்டிருப்பதால் மிகப்பெரிய பொழுதுபோக்கை அளிக்குமென்பது உறுதி, டிசம்பர் எப்போது வருமென ஆவலாக உள்ளேன்.

கிச்சா சுதீப்
மேலும் இந்த போட்டிகள் குறித்து கிச்சா சுதீப் கூறுகையில், "சூப்பர் டி10 லீக் கிரிக்கெட் என்பது திரைத்துறை மற்றும் கார்ப்பரேட் துறையில் உள்ள நண்பர்களுடனும் கிரிக்கெட் வீரர்களுடனும் இணைந்து விளையாடுவதற்கு ஒரு சிறந்த வாய்ப்பாகும். இந்த விளையாட்டுகள் எங்களுள் உள்ள மற்றுமொரு பக்கத்தை எங்கள் ரசிகர்களுக்கும் வெளிப்படுத்தும். இது மிகப்பெரிய பொழுதுபோக்கை ரசிகர்களுக்கு வழங்கும்" என்று கூறியுள்ளார்.
5-வது முறையாக உலக கோப்பையில் விளையாட உள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் அதிரடி மன்னன் 39 வயதான கிறிஸ் கெய்ல் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-
இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் எனது தலைக்கு குறி வைக்கிறார்கள். அதனால் முந்தைய போட்டிகளை போன்று இந்த உலக கோப்பை எனக்கு எளிதாக இருக்காது. அப்போது நான் அதிரடியாக ஆடி மிரட்டினேன். ஆனாலும் அவர்களுக்கு (பவுலர்கள்) என் மீது இன்னும் பயம் இருக்கும். இந்த ‘யுனிவர்ஸ் பாஸ்’ (கெய்லின் பட்டப் பெயர்) என்ன செய்வார், அவரது திறமை என்ன என்பதை அவர்கள் அறிவார்கள். இவர்தான் உலகின் அபாயகரமான பேட்ஸ்மேன் என்பது எதிரணி பந்து வீச்சாளர்களின் மனதில் நிச்சயம் இருக்கும்.
கேமராவின் முன் கேட்டால், கெய்லை கண்டு பயமா? இல்லவே இல்லை என்பார்கள். இதையே தனியாக கேட்டால், ‘கெய்ல் எப்போதும் கெய்ல் தான்’ என்று சொல்வார்கள். இதை நான் ரசித்து மகிழ்கிறேன். வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிரான போராட்டத்தை நான் எப்போதும் உற்சாகமாக அனுபவித்து ஆடுகிறேன். இது, சில சமயம் ஒரு பேட்ஸ்மேனாக, எனக்கு கூடுதல் உத்வேகம் அளிக்கிறது. இத்தகைய சவால்கள் எனக்கு பிடித்திருக்கிறது.
ஐ.பி.எல். போட்டி ஓரளவு நன்றாக அமைந்தது. இப்போது நல்ல பார்மில் உள்ளேன். உலக கோப்பை நீண்ட தொடர். முடிந்தவரை சூழலை நன்கு கணித்து, சரியான மனநிலையுடன் ஆட வேண்டும் என்பதே எனது நோக்கம்.
இவ்வாறு கெய்ல் கூறினார்.
ஆண்டின் தொடக்கத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் கெய்ல் 39 சிக்சர் உள்பட 424 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.
வெஸ்ட்இண்டீஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ்கெய்ல். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடும் அவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது:-

இந்தியாவில் திறமையான வீரர்கள் பலர் உள்ளனர். ஆனால் அதிகமான பேருக்கு வாய்ப்புகள் கிடைப்பது இல்லை.
இந்திய ஒருநாள் போட்டி அணியில் அஸ்வின் இல்லாதது ஆச்சரியம் அளிக்கிறது. அவர் அணியில் இடம் பெறாமல் இருப்பது ஏன் என்று தெரியவில்லை. அஸ்வின் இந்தியாவின் தனிச்சிறப்பு வாய்ந்த பந்துவீச்சாளர் ஆவார். அவர் மிகவும் உணர்ச்சி பூர்வமான பவுலர். கேப்டனாகவும் நிறைய ஆர்ப்பணிபுடன் செயலாற்றுகிறார். பஞ்சாப் அணியில் நான் 2 ஆண்டுகளாக ஆடி வருகிறேன். இந்த அணியில் விளையாடுவது எனக்கு மனநிறைவை தருகிறது. ‘பிளேஆப்’ சுற்றுக்கு தகுதி பெறுவது தான் எங்களது குறிக்கோள்.
இவ்வாறு கிறிஸ் கெய்ல் கூறினார்.
லோகேஷ் ராகுல் இந்த ஐ.பி.எல். தொடரில் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறார். அவர் 520 ரன் குவித்து இந்த சீசனில் 2-வது இடத்தில் உள்ளார். கெய்ல் 448 ரன் எடுத்து 5-வது இடத்தில் உள்ளார். #ChrisGayle #ViratKohli #KLRahul

கெய்ல் 55 பந்தில் சதத்தை எடுத்தார். 88-வது ரன்னை தொட்ட போது அவர் 10 ஆயிரம் ரன்னை எடுத்தார். 288 ஒருநாள் போட்டியில் விளையாடி 10,074 ரன் எடுத்துள்ளார். சராசரி 38.01 ஆகும். 25 சதமும், 50 அரை சதமும் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 215 ரன் குவித்துள்ளார். 10 ஆயிரம் ரன்னை எடுத்த 2-வது வெஸ்ட்இண்டீஸ் வீரர் என்ற பெருமையை கெய்ல் பெற்றார்.
லாரா 289 ஆட்டத்தில் விளையாடி 10,405 ரன் எடுத்துள்ளார். அவரது சாதனையை கெய்ல் உலககோப்பை போட்டியில் முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலககோப்பை போட்டியோடு ஒருநாள் ஆட்டத்தில் ஓய்வு பெற போவதாக அவர் ஏற்கனவே அறிவித்து இருந்தார்.
நேற்றைய ஆட்டத்தில் 14 சிக்சர்கள் அடித்தன் மூலம் கெய்ல் சர்வதேச போட்டியில் 500 சிக்சர்களை எடுத்தார். டெஸ்ட் (98), ஒருநாள் போட்டி (305), 20 ஓவர் ஆட்டம் (103) ஆகிய மூன்றிலும் சேர்த்து 506 சிக்சர்கள் விளாசி உள்ளார்.
இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து கேப்டன் மார்கன் 6 ஆயிரம் ரன்னை தொட்டார். ஒருநாள் போட்டியில் 6 ஆயிரம் ரன்னை எடுத்த முதல் இங்கிலாந்து வீரர் ஆவார். நேற்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து அணி மொத்தம் 24 சிக்சர்கள் அடித்து உலகசாதனை படைத்தது. #ENGvWI #ChrisGayle
டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் சிறப்பாக விளையாடி வரும் ஜோ ரூட், டி20 கிரிக்கெட்டில் அதிக அளவில் விளையாடியது கிடையாது. ஐபிஎல் தொடரில் அவரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. சமீபத்தில் நடைபெற்ற பிக் பாஷ் லீக்கில் சில போட்டிகளில் விளையாடினார்.
இந்நிலையில் கிறிஸ் கெய்ல் போன்று என்னால் சிக்ஸர்கள் விளாச முடியாது. ஆனால் விரைவாக ரன்கள் குவிக்க இயலும் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜோ ரூட் கூறுகையில் ‘‘இங்கிலாந்து அணிக்காக நான் விளையாடுவதை மிகவும் விரும்புகிறேன். கடந்த இரண்டு மூன்று வருடங்களாக நான் அதிக அளவில் டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெறவில்லை. டி20 போட்டியில் விளையாடுவதற்கு தயாராக இருக்கிறேன். அதில் சிறப்பாக விளையாட முடியும் என்று நினைக்கும்போது, அந்த வாய்ப்பை தவறவிட விரும்ப மாட்டேன்.
கிறிஸ் கெய்ல் டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் விளாசுவதுபோல் என்னால் அடிக்க இயலாது. ஆனால் விரைவாக ரன்கள் குவிக்க இயலும். அவரைப்போல் கேலரிகளுக்கு பந்தை அனுப்ப இயலாது. ஆனால், 95 மைல் வேகத்தில் வரும் பந்தை டாப் எட்ஜ் மூலம் சிக்சருக்கு விளாச முடியும்’’ என்றார்.
இங்கிலாந்துக்கு எதிராக நேற்று நடந்த ஆட்டத்தில் கிறிஸ்கெய்ல் 12 சிக்சர்கள் அடித்தார். முதல் சிக்சர் மூலம் அவர் அப்ரிடியை முந்தினார்.
39 வயதான கிறிஸ்கெய்ல் 488 சிக்சர்கள் அடித்து முதல் இடத்தில் உள்ளார். 444 போட்டியில் அவர் இதை எடுத்துள்ளார். அவர் ஒருநாள் போட்டியில் 287 சிக்சர்களும், டெஸ்டில் 98 சிக்சர்களும், 20 ஓவர் போட்டியில் 103 சிக்சர்களும் அடித்துள்ளார். #WIvEnd #ChrisGayle #Afridi
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ்கெய்ல்.டெஸ்டில் இருந்து அவர் ஏற்கனவே ஓய்வு பெற்று விட்டார்.
இந்த நிலையில் 39 வயதான கிறிஸ் கெய்ல் உலக கோப்பைக்கு பிறகு ஒரு நாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
கெய்ல் கடைசியாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் வங்காள தேசத்துக்கு எதிரான ஒரு நாள் சர்வதேச போட்டியில் ஆடினார். அதன் பிறகு அவர் உலக கோப்பையில் தான் விளையாட உள்ளார். உலக கோப்பை போட்டி மே மாதம் 30-ந்தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இது அவருக்கு 5-வது உலக கோப்பை ஆகும்.
கிறிஸ் கெய்ல் 284 ஒரு நாள் போட்டியில் விளையாடி 9727 ரன் எடுத்துள்ளார். சராசரி 37.12 ஆகும். 23 சதமும், 49 அரை சதமும் அடித்துள்ளார். அதிகபட்சமாக 215 ரன் குவித்துள்ளார்.
10 ஆயிரம் ரன்னை தொட கெய்லுக்கு இன்னும் 273 ரன் தேவையாகும். லாராவின் சாதனையை முறியடிக்க 677 ரன்கள் தேவை. இந்த இரண்டு சாதனைகளில் ஒன்றை அவர் உலக கோப்பையில் முறியடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கெய்ல் கடைசியாக 2014-ம் ஆண்டு டெஸ்டில் விளையாடினார். 103 டெஸ்டில் விளையாடி 7214 ரன் எடுத்து இருந்தார். #ChrisGayle #ChrisGayleRetire #ODIs #ICCWorldCup2019
இதனை அடுத்து கெய்ல், ஆஸ்திரேலிய உச்ச நீதிமன்றத்தில் பேர்பேக்ஸ் மீடியா குழுமம் மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மெக்கல்லம் பேர்பேக்ஸ் மீடியா குழுமம் கெய்ல் மீது குற்றம்சாட்டி வெளியிட்ட செய்தியை உண்மை என்று நிரூபிக்கவில்லை என்று கடந்த அக்டோபர் மாதம் தனது தீர்ப்பில் தெரிவித்து இருந்தார். ஆனால் இழப்பீடு தொகை விவரம் வெளியிடப்படவில்லை.
இந்த நிலையில் இழப்பீடு தொகை நேற்று அறிவிக்கப்பட்டது. கெய்லுக்கு பேர்பேக்ஸ் நிறுவனம் ரூ.1.52 கோடியை இழப்பீடாக வழங்க வேண்டும் என்று நீதிபதி அறிவித்துள்ளார். இந்த தீர்ப்பை எதிர்த்து உடனடியாக அப்பீல் செய்யப்போவதாக பேர்பேக்ஸ் மீடியா குழுமம் தெரிவித்துள்ளது.