என் மலர்
நீங்கள் தேடியது "Citizens settled with vessels"
- 150 பேர் தேர்வு செய்யப்பட்ட நிலையில் அவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
- இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் அரிசி, காய்கறிகள் மற்றும் சமையல் பாத்திரங்களுடன் குடியேறி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் சவேரியார் பாளையம், அசனாத்புரம், ஜீவாநகர், சி.கே.சி. காலனி பகுதியை சேர்ந்த 540 பேர் கடந்த 2018ம் ஆண்டு வீட்டுமனை பட்டா கேட்டு விண்ணப்பித்திருந்தனர். இதில் 150 பேர் தேர்வு செய்யப்பட்ட நிலையில் அவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த பதிலும் இல்லை.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம், நகர செயலாளர் அரபு முகமது ஆகியோர் தலைமையில் இன்று கிழக்கு தாசில்தார் அலுவலகத்தில் குவிந்தனர். அவர்கள் அரிசி, காய்கறிகள் மற்றும் சமையல் பாத்திரங்களுடன் குடியேறி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அறிந்ததும் கிழக்கு தாசில்தார் வில்சன் தேவதாஸ் மற்றும் நகர் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது கிழக்கு தாசில்தார் ஆதிதிராவிடர் மக்கள் 30 பேருக்கு வீட்டுமனை பட்டா தயாராக உள்ளது. மாவட்ட கலெக்டர் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். 120 பேருக்கு வெள்ளோடு பகுதியில் இடம் தேர்வு செய்து வருகின்றனர். விரைவில் அவர்களுக்கும் பட்டா வழங்கப்படும் என உறுதி அளித்ததால் அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.