என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "City credit union"

    • 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா நவம்பர் 14-ந்தேதி முதல் 20-ந் தேதி வரை தமிழகத்தில் கொண்டாடப்பட்டது
    • மீளவிட்டான் நகர கூட்டுறவு கடன் சங்கம் இதுவரை 7 முறை மாவட்ட அளவில் சிறந்த கூட்டுறவு சங்கமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி:

    69-வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா நவம்பர் 14-ந்தேதி முதல் 20-ந் தேதி வரை தமிழகத்தில் கொண்டாடப்பட்டது. மாநில அளவில் நடைபெற்ற இந்த கூட்டுறவு வார விழாவில் தமிழ்நாட்டில் உள்ள நகர கூட்டுறவு கடன் சங்கங்களில் சிறந்த நகர கூட்டுறவு கடன் சங்கமாக தூத்துக்குடி சரக துணைப்பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் மீளவிட்டான் நகர கூட்டுறவு கடன் சங்கம் தேர்வு செய்யப்பட்டது. அதற்கான பாராட்டு கேட யத்தினை அமைச்சர்கள் பெரியசாமி, செந்தில் பாலாஜி ஆகியோர் சங்கத்தின் தலைவர் சோலையப்பராஜாவிடம் வழங்கினர்.

    மீளவிட்டான் நகர கூட்டுறவு கடன் சங்கம் இதுவரை 7 முறை மாவட்ட அளவில் சிறந்த கூட்டுறவு சங்கமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. சங்கம் தொடங்கப்பட்டு 52 ஆண்டு காலத்தில் மாநில அளவில் முதலிடம் பெறுவது இதுவே முதன் முறையாகும். இச்சங்கம் கடந்த 2000-ம் ஆண்டு முதல் லாபத்தில் இயங்கி வருவாகவும், 2005 -ம் ஆண்டு முதல் நிகர லாபத்தில் செயல்பட்டு சங்க உறுப்பினர்களுக்கு 14 சதவீதம் ஈவுத்தொகை தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாகவும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    மேலும் இந்த ஆண்டு மாவட்ட, மாநில அளவில் சிறந்த சங்கமாக தேர்வு செய்யப்பட்டு மாநிலத்தில் முதலிடம் பெற்று அமைச்சர்களால் வழங்கப்பட்ட பாராட்டு கேடயத்தினை சங்க தலைவர் சோலையப்பராஜா மற்றும் செயலாளர் சுதாகர் ஆகியோர் தூத்துக்குடி மண்டல இணைப்பதிவாளர் முத்து குமாரசாமி, தூத்துக்குடி மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் சிவகாமி, சரக துணைப்பதி வாளர் ரவீந்திரன் ஆகியோரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

    ×