search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Civil Aviation Minister"

    • புதிதாக விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவியேற்பட்டுள்ள தெலுங்கு தேசம் கட்சி எம்.பி ராம் மோகன் நாயுடு கிஞ்சரப்பு டெல்லி விமான நிலையத்தின் விபத்து நடந்த அப்பகுதியை பார்வாயிட்டார்.
    • விபத்து நடந்துள்ள டலிலி விமான நிலையத்தில் டெர்மினல் 1 பகுதி 2009 ஆம் ஆண்டு கட்டப்பட்டது என்று ராம் மோகன் தெரிவித்தார்.

    டெல்லியின் பல்வேறு பகுதிகளில் நேற்று (ஜூன் 27) காலை முதலே மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக ஏராளமான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ள நிலையில் டெல்லி விமான நிலையத்தின் முதலாவது டெர்மினலில் மேற்கூரை இன்று [ஜூன் 28] அதிகாலை 5.30 அளவில் இடிந்து விழுந்துள்ளது. விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விமான நிலையத்திற்கு விரைந்தனர்.

    பார்க்கிங் செய்யப்பட்டிருந்த கார்கள் மீது மேற்கூரை விழுந்ததால் அவை பலத்த சேதத்துக்கு உள்ளாகியுள்ளது. இடிபாடுகளுக்கிடையிலும் கார்களுக்குள்ளும் சிக்கியவர்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் படுகாயமடைந்த 6 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதற்கிடையில் டெர்மினல் ஒன்றில் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்நிலையில் தற்போது புதிதாக விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவியேற்பட்டுள்ள தெலுங்கு தேசம் கட்சி எம்.பி  ராம் மோகன் நாயுடு கிஞ்சரப்பு டெல்லி விமான நிலையத்தின் விபத்து நடந்த பகுதியை பார்வாயிட்டார்.  அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்து இரங்கல் தெரிவித்தார்.

    மேலும் படுகாயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். அதுமட்டுமின்றி, டெல்லி விமான நிலையத்தில் முழு பாதுகாப்பு சோதனை நடத்தப்படும். அரசுக்கு இந்த சோதனை குறித்த முழு அறிக்கையை சமர்ப்பிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

    விமான போக்குவரத்து அமைச்சகத்தின் சார்பில் இந்த பிரச்சனை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த விமான நிலையம் மட்டுமின்றி நாட்டில் இதே கட்டமைப்பைக் கொண்ட அனைத்து விமான நிலைய கட்டடங்களிலும் பாதுகாப்பு சோதனை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். விபத்து நடந்துள்ள டெல்லி விமான நிலையத்தில் டெர்மினல் 1 பகுதி 2009 ஆம் ஆண்டு கட்டப்பட்டது என்று ராம் மோகன் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

    ×