என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Cleanliness works"
- நீலகிரி மாவட்ட உள்ளாட்சிகளின் திட்டஇயக்குனர் உமாமகேஷ்வரி துவக்கிவைத்து துப்புரவு பணிகளை செய்தார்
- ஊராட்சி தூய்மை பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் பாலகொலா ஊராட்சியில் தமிழ்நாடு அரசின் நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின்கீழ் 100 சதவிகித தூய்மைப்பணிகள் நடந்தன. இதில் எண்ணற்ற ஊராட்சி தூய்மை பணியாளர்கள் பங்கேற்று சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இதற்கான நிகழ்ச்சி பெங்கால் மட்டம் பகுதியில் நடந்தது. பாலகொலா ஊராட்சி துணைத்தலைவர் மஞ்சை வி.மோகன் தலைமை வகித்தார். ஊராட்சி வார்டு உறுப்பினர் சுப்பிரமணி, அலமேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நீலகிரி மாவட்ட உள்ளாட்சிகளின் திட்ட இயக்குனர் உமா மகேஷ்வரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நம்ம ஊரு சூப்பரு தூய்மை பணிகளை துவக்கிவைத்தார். பின்னர் தூய்மை பணியாளர்களுடன் இணைந்து துப்புரவு பணிகளை மேற்கொண்டார்.
நீலகிரி மாவட்ட ஊராட்சிகளின் இணை இயக்குனர் சாம் சாந்தகுமார், ஊட்டி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்ரீதர், பாலகொலா கிராம நிர்வாக அலுவலர் மோகனபிரியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பாலகொலா ஊராட்சி செயலாளர் கார்த்திக் தலைமையில் அலுவலக பணியாளர்கள் சரிதா, வனிதா, சித்ரா, காந்திமதி ஆகியோர் செய்திருந்தனர்.
- கலெக்டர் வளர்ச்சி திட்ட பணிகள் என்னென்ன நடைபெற்று உள்ளது என்பதனை அதிகாரிகளிடம் கேட்டு ஆய்வு மேற்கொண்டார்.
- பணிகளுக்கான தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடலூர்:
கடலூர் கலெக்டராக அருண் தம்பராஜ் நேற்று முன்தினம் பதவி யேற்றுக் கொண்டார். இந்த நிலை யில் இன்று காலை கடலூர் மாநகராட்சி அலுவல கத்தில் கலெக்டர் அருள் தம்புராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதனை தொடர்ந்து கடலூர் மாநகராட்சி அலுவல கத்தில் கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை யில் ஆய்வு கூட்டம் நடை பெற்றது. மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், ஆணையாளர் கிருஷ்ண மூர்த்தி, பொறியாளர் மாலதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதனை தொடர்ந்து கலெக்டர் அருண் தம்புராஜ், கடலூர் மாநகராட்சியில் குடிநீர், சாலை, தூய்மை பணிகள், தெரு மின்விளக்கு மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள் என்னென்ன நடைபெற்று உள்ளது என்பதனை அதி காரிகளிடம் கேட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் ஒவ்வொரு திட்டப் பணிகள் குறித்தும் அந்த பணி நடைபெறும் மாதங்கள், எவ்வளவு நிதி ஒதுக்கீடு, தற்போது பணிகளின் நிலவரம் என்ன என்பது குறித்து விரிவாக கேட்டறிந்தார். அப்போது சென்னையில் உள்ள சாலைகள் போல் கடலூர் மாநகராட்சியில் உள்ள சாலைகளை மேம்படுத்த வேண்டும். மக்களை கண் கவர கூடிய தெரு மின்விளக்குகள், சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்கும் விதமாக பார்க்கிங் வசதி, சாலைகளில் முகம் சுளிக்கும் வகையில் ஒட்டப்படும் போஸ்டர் மற்றும் பேனர்களை அகற்றி தூய்மையாக வைத்திருக்க வேண்டும். நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட வரும் பணிகளை உடனுக்கு டன் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
சாலை, குடிநீர் போன்ற அத்தியாவசிய அடிப்படைத் தேவைகளை விரைந்து முடித்து மக்களுக்கு சிரமம் ஏற்படுத்தாத வகை யில் அனைத்து நடவடிக்கை களும் மேற்கொள்ள வேண்டும். கடலூர் மாநகராட்சியில் நிர்ணயிக்கப்படும் அனைத்து பணிகளையும் அந்தந்த கால அவகா சத்திற்குள் தரமாக கட்ட மைத்து முடித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இது மட்டும் இன்றி பணிகள் மேற்கொள்ளும் ஒப்பந்த தாரர்களுக்கு உடனுக்குடன் அந்தந்த பணிகளுக்கான தொகையை வழங்க நட வடிக்கை எடுக்க வேண்டும். இது மட்டும் இன்றி மாநகராட்சி முழுவதும் அனைத்து இடங்களிலும் குப்பைகள் தேங்காத வகையில் துப்புரவு பணி யாளர்களை கொண்டு குப்பைகளை அகற்றி தூய்மையான மாநகராட்சி யாக வைத்திருக்க நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாநகராட்சியில் நடை பெறும் பணிகள் தொய்வு ஏற்படாத வகையி லும், பணிகள் காலதாம தமானால் அதற்கான காரணங்கள் தெரிவிக்காத வகையில் அதிகாரிகளின் செயல்பாடுகள் திருப்தி அடையும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனகேட்டுக் கொண்டார். இதில் மாநக ராட்சி கவுன்சிலர்கள், அனைத்துதுறை அதிகாரி கள் கலந்து கொண்டனர்.
- தூய்மைப்பணிகள் மேற்கொள்ளும் தூய்மை பணியாளர்களின் வருகை பதிவேடுகளை ஆய்வு செய்தார்.
- தூய்மை பணிகளை தங்கு தடையின்றி மேற்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சி புதிய கமிஷனராக பொறுப்பேற்றுள்ள பவன்குமார் இன்று காலை முதல் மாநகராட்சியின் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். அதன்படி மாநகராட்சி பகுதிகளில் தூய்மைப்பணிகள் மேற்கொள்ளும் தூய்மை பணியாளர்களின் வருகை பதிவேடுகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து அவர்கள் மேற்கொள்ளும் பணிகள் குறித்து கேட்டறிந்து, தூய்மை பணிகளை தங்கு தடையின்றி மேற்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
மேலும் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் மற்றும் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் மற்றும் தூய்மை பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
- ‘‘நம்ம ஊரு சூப்பர்” தூய்மை திட்ட பணிகள் தொடங்கப்பட்டது.
- வீட்டில் மழை நீர் சேமிப்பு அமைப்புகளை முறையாக பராமரிக்க வேண்டும்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம், களிமண் குண்டு ஊராட்சியில் வளர்ச்சித்துறை மற்றும் வனத்துறை இணைந்து பசுமை தமிழகம் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் தொடக்க விழா கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் முன்னிலையில் நடந்தது.
அரசு முதன்மைச் செயலர் மற்றும் மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் தர்மேந்திர பிரதாப் யாதவ் தலைமை தாங்கி களிமண்குண்டு ஊராட்சி யில் உள்ள கடற்கரைப் பகுதியில் மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தார்.
பின்னர் திருப்பு ல்லாணி ஊராட்சியில் ஊரக வளர்ச்சி துறையின் மூலம் "நம்ம ஊரு சூப்பர்" தூய்மை திட்ட பணிகள் தொடக்க நிகழ்ச்சி நடந்தது. இதில் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் முன்னிலையில் பொதுமக்களுடன் அரசு முதன்மைச் செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ் தலைமையில் "நம்ம ஊரு சூப்பரு''க்கான உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
இதில் முதன்மைச் செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ் பேசியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் கிராமங்கள் தோறும் குப்பையில்லா கிராமங்களை உருவாக்கி, சுகாதாரத்தை காப்பதற்காக நம்ம ஊரு சூப்பர் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
பொதுமக்கள் குப்பைகளை மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் பிரிக்க வேண்டும். மக்கும் குப்பைகளை வீட்டிலேயே உரமாக்கி வீட்டு தோட்டத்திற்கு பயன்படுத்த வேண்டும். தரம் பிரிக்கப்பட்ட குப்பைகளை மட்டுமே தூய்மை காவலர்களிடம் கொடுக்க வேண்டும்.
பொது இடங்களில் குப்பைகளை கொட்டி அசுத்தம் செய்யக் கூடாது. வீடு மற்றும் தெருக்களில் கழிவுநீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வீட்டில் மழை நீர் சேமிப்பு அமைப்புகளை முறையாக பராமரிக்க வேண்டும்.
ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது. கடைக்குச் செல்லும் போது கண்டிப்பாக துணிப்பை எடுத்துச் செல்ல வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாக்க வீட்டிலும் பொது இடங்களிலும் மரங்களை நட வேண்டும்,
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் தர்மேந்திர பிரதாப் யாதவ், கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் ஆகியோர் பொதுமக்களுடன் சேர்ந்து தூய்மைப் பணியில் ஈடுபட்டு குப்பைகளை அப்புறப்படுத்தினர்.
தொடர்ந்து திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம், தாதனேந்தல் ஊராட்சியில் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊராக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பராமரிக்கப்பட்டு வரும் காய்கறி தோட்டத்தை மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் தர்மேந்திர பிரதாப் யாதவ் பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.
இந்த நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பிரவீன் குமார், மாவட்ட வன உயிரின காப்பாளர் பகான் ஜக்தீஸ் சுதாகர், தோட்டக்கலை துணை இயக்குநர் நாகராஜன், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் புல்லாணி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்