என் மலர்
நீங்கள் தேடியது "coaches"
- இரண்டு ஏ.சி பெட்டிகள் நிரந்தரமாக இணைக்கப்பட்டுள்ளன.
- 3-ம் வகுப்பு ஏ.சி பெட்டிகள் வரும் 22-ந் தேதி முதல் இணைத்து இயக்கப்படும்.
கோவை
கோவை வழியாக இயக்கப்படும் 4 எக்ஸ்பிரஸ் ெரயில்களில் கூடுதலாக இரண்டு ஏ.சி பெட்டிகள் நிரந்தரமாக இணைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்த சேலம் கோட்ட ெரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக இயக்கப்படும் திருவனந்தபுரம்-மும்பை சத்ரபதி சிவாஜி ெரயில் நிலையம் (சி.எஸ் எம்.டி) இடையிலான வாராந்திர எக்ஸ்பிரஸ் ெரயிலில் (எண்:16332), கூடுதலாக இரண்டு 3-ம் வகுப்பு ஏ.சி பெட்டிகள் இன்று முதல் இணைத்து இயக்கப்படுகிறது.
இதேபோன்று மும்பை சி.எஸ்.எம்.டி-திருவனந்தபுரம் இடையிலான வாராந்திர எக்ஸ்பிரஸ் ெரயிலில் (16331), கூடுதலாக இரண்டு 3-ம் வகுப்பு ஏ.சி பெட்டிகள் நாளை முதல் இணைத்து இயக்கப்படுகிறது.
மேலும், கன்னியாகுமரி-புனே இடையிலான தினசரி எக்ஸ்பிரஸ் ெரயிலில் (எண்:16382), கூடுதலாக இரண்டு 3-ம் வகுப்பு ஏ.சி பெட்டிகள் வரும் 22-ந் தேதி முதல் இணைத்து இயக்கப்படும்.
புனே-கன்னியாகுமரி இடையிலான தினசரி எக்ஸ்பிரஸ் ெரயிலில் (எண்:16381), கூடுதலாக இரண்டு 3-ம் வகுப்பு ஏ.சி பெட்டிகள் வரும் 23-ந் தேதி முதல் இணைத்து இயக்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.